போட்டோஷாப் பாடங்கள்-6(FREE TRANSFORM TOOL)

போட்டோஷாப் பாடங்கள் -6

(FREE TRANSFORM TOOL)





போட்டோஷாப் பாடங்கள் -6

நாம் இதுவரை போட்டோஷாப் பாடம் 5 வரையிலும்

அதில் மார்க்யூ டூலில் உள்ள Free Transform பற்றியும்

பார்த்துவருகின்றோம். இதுவரை பாடங்கள் பார்க்காத

வர்களுக்காக கடந்த 5 பாடங்களின் இணைப்பை இங்கு

பதிவிட்டுள்ளேன்.

பாடம்-1 பாடம்-2 பாடம்-3 பாடம்-4 பாடம்-5


இன்று மாடலுக்காக மகாபலிபுரம் கடற்கரை கோயிலை

எடுத்துள்ளேன்.இதில் முதலில் மார்க்யூ டூலால் செல்க்ட்

செய்யவும். பின் மவுஸ் மூலம் ரைட் கிளிக் செய்யவும்.

அதில் Free Transform Tool செல்க்ட் செய்யுங்கள்.

Free Transform Tool -ல் நாம் அதனுடைய உப டூல்களை

பயன்படுத்தாமல் படத்தை வேண்டிய பயன் பாட்டுகளுக்கு

சுருக்கிக்கொள்ளலாம். இந்த படத்தில் Free Transform

Tool மட்டும் பயன்படுத்தி படத்தின் மூலையில் உள்ள

சதுரத்தில் கர்சரை தள்ள படமானது வலமிருந்து இடமாக

சுருங்குவதை பாருங்கள்.



இந்தப்படத்தை பாருங்கள். இதில் நடுவில் உள்ள சதுரத்தில்

கர்சரை வைத்து தள்ள படமானது வலப்புறம் இருந்து இடப்புறம்

செல்வதைக்காணலாம்.



இதைப்போலவே படமானது கீழிருந்து மேல்நோக்கி

செல்வதை பாருங்கள்.


இதைப்போலவே படங்களை மேலிருந்து கீழாகவும்

இடமிருந்து வலமாகவும் மாற்றலாம்.



இந்த டூல்களின்பயன்பாடுகளை நினைவில் வைத்துக்

கொள்ளுங்கள்.பின்னர் போட்டோஷாப்பில் பணி

புரிகையில் நமக்கு உபயோகப்படும்.

சரி பாடத்திற்கு வருவோம். நீங்கள் படத்தை

தேர்வுசெய்து மார்க்யூ டூலால் செலக்ட் செய்தபின்

உங்களுக்கு வழக்கபடி Transform Tool -ல் உள்ள அனைத்து

டூல்களும் தெரியவரும் . அதில் சென்றவாரம் நாம்

Scale Tool பற்றி பார்த்தோம். இனி அடுத்து உள்ள Rotate

Tool பற்றி பார்ப்போம். இனி Scale Tool க்கு அடுத்துள்ள

Rotate Tool செலக்ட் செய்யுங்கள்.


உங்களுக்கு முன்பு பார்த்தமாதிரி படத்தை சுற்றிலும்

கோடுகளும் - சிறிய சதுரங்களும் கிடைக்கும்.

இப் போது கர்சரை அங்கு எடுததுச்சென்றால்

கர்சரானது வளைந்த அம்புக்குறியுடன் தோன்றும்.

இனி நீங்கள் படத்தை உங்களுக்கு வேண்டிய அளவில்

திருப்பிக் கொள்ளலாம்.(படமானது வண்டியின்

ஸ்டேரிங் மாதிரி திருப்புவதை காணலாம்)



அடுத்து உள்ள Tool - Skew ஆகும். அதை யும் வழக்கபடி

தேர்வுசெய்து கொள்ளுங்கள்.


Skew Tool ஆனது படங்களை விருப்பபடி சாய்துக்

கொள்வதற்கு பயன் படுகின்றது. படத்தை பாருங்கள்.


இதில் மூலையில் உள்ள சதுரத்தை நீங்கள்

கர்சரால் இழுக்கையில் கர்சரானது நீங்கள் படுக்கை

வாட்டத்தில் இழுத்தால் படுக்கை வாட்டத்திலும்

(Horizontal) ,உயர வாட்டத்தில் இழுத்தால் உயர

வாட்டத்திலும் (Vertical) படம் நகரும். ஆனால்

நீங்கள் இழுக்கும் சதுர மூலைமட்டுமே நகரும்.

மற்ற பக்கங்கள் நகராது.

அடுத்து உள்ள து Distort Tool. இதன் உபயோகம் பற்றி

பார்ப்போம்.


இது படத்தை நான்கு மூலைகளிலும் இருந்து

இழுத்து சிறப்பு தோற்றங்களை உருவாக்கலாம்.

கோட்டிற்கு வெளியில் செல்லும் போது படமானது

விரிவாகவும் கோட்டிற்கு உள்செல்லும்போது

படமானது சுருங்கியும் வரும்.



மூலையில் உள்ள சதுரத்தை நாம் கர்சரால்

இழுக்க படமானது நம் இழுப்புக்கு ஏற்றவாறு

வருவதை காணலாம்.


அடுத்து உள்ளது Prespective Tool. அதைப்பார்ப்போம்.


இந்த டூலை பயன்படுத்தி படத்தின் மூலையில்

உள்ள சதுரத்தை உள்புறம் இழுக்க படமானது நீங்கள்

இழுக்கும் திசையில் சுருங்குவதை காணலாம்.

படமானது V-Shape -ல் உருவாவதை காணலாம்.


கீழ்புறம் படத்தை சுருக்கினால் வரும்படம் மேலே...

பக்கவாட்டில் படத்தை சுருக்கினால் வரும்படம் மேலே.

மேல்புறம் படத்தை சுருக்கினால் வரும் படம் மேலே...

பதிவின் நீளம் கருதி பாடத்தை இத்துடன் முடிக்கின்றேன்.

JUST FOR JOLLY PHOTOS

பதிவுகளை படித்துப்பாருங்கள். பிடித்திருந்தால்

ஒட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்:,

வேலன்.

வலைப்பூவில் உதிரிப்பூக்கள்.

(போட்டோஷாப் பற்றி)

மூம்மூர்த்திகள் உள்ளது போல் போட்டோவில்

மொத்தம் மூன்று கலர்களே உள்ளன. அவை

RGB எனப்படும் RED,GREEN,BLUE என்பனவே

அவை.இவை ஒவ்வோன்றும் 256 shadow கொண்டு

உள்ளது. அவைகள் மூன்றும் சேரும்போது

நமக்கு 256x256x 256 என மொத்தம் 16777216 நிறங்கள்

கிடைக்கும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

22 comments:

வடுவூர் குமார் said...

Useful info.
Thanks.

குடந்தை அன்புமணி said...

தொடர்ந்து படித்துவருகிறேன், பயனுள்ள தகவல்.தெடாருங்கள். தொடர்வோம். நன்றி!

டவுசர் பாண்டி said...

சொம்மா, சோக்கா கீதுபா , அட்த தபா எம் போட்டாவ போடு தலீவா ! ஆனா ஒன்னு அயகா போடறதா இர்த்தா போடு இல்ல நா காண்டு ஆய்டுவேன் . உன்கு ஓடு போட்டசிபா,

Muthu Kumar N said...

வேலன்,

அருமையான தொகுப்பு போட்டோஷாப் உபயோகிப்பவர்களுக்கு மிக உபயோகமாருக்கும்.

வளர்க உங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

Good citizen said...

I got photoshop but to speak frankly
after your tips only I start using it correctly and usefully
Thanks a lot Velan
Continue your good work,,all wishes

வேலன். said...

வடுவூர் குமார் கூறியது...
Useful info.
Thanks.//

நன்றி வடுவூர் குமார் அவர்களே...

வாழ்க வளமுடன்:,
வேலன்.

வேலன். said...

குடந்தைஅன்புமணி கூறியது...
தொடர்ந்து படித்துவருகிறேன், பயனுள்ள தகவல்.தெடாருங்கள். தொடர்வோம். நன்றி!//

நன்றி குடந்தை அன்புமணி அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

டவுசர் பாண்டி. கூறியது...
சொம்மா, சோக்கா கீதுபா , அட்த தபா எம் போட்டாவ போடு தலீவா ! ஆனா ஒன்னு அயகா போடறதா இர்த்தா போடு இல்ல நா காண்டு ஆய்டுவேன் . உன்கு ஓடு போட்டசிபா,//

உங்களுடைய போட்டோவை அனு்ப்பினால் அழகாக போடுகின்றேன்.(இந்த பதிவில் இருந்து புதிதாக Just for Jolly Photos போட இருக்கின்றேன். உங்களுடைய போட்டோவை அனுப்பினால் போடுகின்றேன்.

ஓட்டுப்போட்டமைக்கு நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன்,

அருமையான தொகுப்பு போட்டோஷாப் உபயோகிப்பவர்களுக்கு மிக உபயோகமாருக்கும்.

வளர்க உங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

எனது ஓவ்வோரு பதிவிலும் மறக்காமல் வந்து கருத்தையும் ஆலோசனைகளையும் கொடுத்துவருகின்றீர்கள். நன்றிகள் பல...

வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

வேலன். said...

moulefrite கூறியது...
I got photoshop but to speak frankly
after your tips only I start using it correctly and usefully
Thanks a lot Velan
Continue your good work,,all wishes//

தயங்காமல் தங்கள் கருத்தை சொன்னதர்க்கு வாழ்த்துகின்றேன். போட்டோஷாப்பில் தாங்கள் சிறந்த நிபுணராக வர வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர் said...

வேலன் சார், நாளை ஓய்வு நேரம் இருப்பின் தெரிவிக்கவும்.
அலைபேசியில் அழைக்க எனக்கு எதுவாக இருக்கும்.
நன்றி

வேலன். said...

ஜுர்கேன் க்ருகேர் கூறியது...
வேலன் சார், நாளை ஓய்வு நேரம் இருப்பின் தெரிவிக்கவும்.
அலைபேசியில் அழைக்க எனக்கு எதுவாக இருக்கும்.
நன்றி//

தாங்களுக்காக அலைபேசியில் (24x7 மணிநேரமும்)காத்திருக்கின்றேன்.
வாழ்க வளமுடன்:,
வேலன்.

RJ Dyena said...

vaazhaga ungal sevai...

நிஜமா நல்லவன் said...

தொடரும் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி!

வேலன். said...

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் கூறியது...
vaazhaga ungal sevai...//

பதிவில் முதன்முதலாக வந்துள்ளீர்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

நிஜமா நல்லவன் கூறியது...
தொடரும் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி!//

நன்றி நிஜமா நல்லவன் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

தியாகராஜன் said...

வேலன் அவர்களின் சேவை நாட்டுக்குத் தேவை

வேலன். said...

தியாகராஜன் கூறியது...
வேலன் அவர்களின் சேவை நாட்டுக்குத் தேவை//

நன்றி தியாகராஜன் சார் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வெங்க்கி said...

உங்களின் ப்லோக் களை படித்தவுடன் ரசிகனாகிவிட்டேன்.. வாழ்த்துக்கள்.. தங்கள் பணி தொடர..

வேலன். said...

வெங்க்கி கூறியது...
உங்களின் ப்லோக் களை படித்தவுடன் ரசிகனாகிவிட்டேன்.. வாழ்த்துக்கள்.. தங்கள் பணி தொடர..//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்

God of Kings said...

பயனுள்ள தகவல். பாடங்கள் நன்றாக உள்ளது. ஒரு பாடசாலை துவங்கினால் நான் முதல் மாணவனாக சேர்ந்து விடுவேன்.

organic horticulture PSM said...

செந்தில் தளிஞ்சி
உங்கள் தொகுப்புகளை நான் தினந்தோறும் படித்து வருகிறேன். இது எனது மெயிலுக்கு வருமா?.

Related Posts Plugin for WordPress, Blogger...