Wednesday, April 27, 2011

வேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம்.

நிக்கான்,கெனான்.கோடாக் என விதவிதமான கேமராக்கள் இருந்தாலும் நமது டெக்ஸ்டாப்பில் இருப்பதை படம் பிடிக்க முடியாது.அதற்காக இநத சின்ன கேமரா நமக்கு உதவுகின்றது.500 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.

இதில் உள்ள Options கிளிக் செய்து வேண்டிய டிரைவையும் - வேண்டிய பார்மெட்டையும் தேர்வு செய்யலாம். அதைப்போலவே கேமரா கிளிக் சவுண்டையும் கொண்டுவரலாம். 
இந்த கேமரா மேல்புறம் உள்ள சிகப்பு பட்டனை கிளிக் செய்ய நமது டெக்ஸ்டாப்பில் உள்ள படமானது நமது சேமித்துவைத்துள்ள இடத்தில் காப்பி ஆகும்.
சாதாரணமாக நாம் டெக்ஸ்டாப்பில் உள்ள படங்களை காப்பி செய்ய பிரிண்ட் ஸ்கிரீன் அழுத்தி பின்னர் அதனை பெயிண்ட் அப்ளிகேஷனில் நாம் சேவ் செய்யவேண்டும். அந்த சிரமங்கள் ஏதும் இன்றி இந்த சாப்ட்வேர் மூலம் நாம் எளிதில் டெக்ஸ்டாப்பில்உள்ளதை சேமிக்கலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

Tuesday, April 26, 2011

வேலன்-கம்யூட்டரின ஆலோசகர்.


முழுஉடல் பரிசோதனைக்கு செல்லும்போது நமது உடலின் அனைத்து பாகங்களின் விவரங்களையும் சோதனை செய்து அறிக்கையை அளிப்பார்கள்.அதைவைத்து நமக்கு மருத்துவம் செய்ய ஆரம்பிப்பார்கள். அதைப்போலவே நாம் அன்றாடம் பயன்படுத்தும் கம்யூட்டருக்கும் முழு பரிசோதனையை இந்த சாப்ட்வேர் செய்கின்றது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் Operading System ,Processer.Driver.system Model.,Circuit Board.Memory Modules.என அனைத்து விவரங்களும் அதன் மாடல் எண்களையும் அறிந்துகொள்ளலாம். தவிர நமது கம்யூட்டரில் பதித்துவைத்துள்ள சாப்ட்வேர்களின் விவரங்களையும் அறிந்துகொள்ளலாம்.கம்யூட்டர் பழுது பார்ப்பவர்களுக்கு் இந்த சின்ன சாப்ட்வேர் மிகவும் பயன்தரகூடியது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


Monday, April 25, 2011

வேலன்- கில்லி ரீமிக்ஸ்.

கில்லி படம் வந்த புதிதில் இந்த ரீ-மிக்ஸ் மிக பிரபலம். பழைய சிடிகளை தேடும் சமயம் இந்த வீடியோ கிடைத்தது. கொஞ்சம் ரிலக்ஸ் செய்து கொள்ளுங்கள்.





பதிவினை பாருங்க்ள. கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


பின்குறிப்பு- 5 மணி நேர மின்தடைகாரணமாக பதிவிடுவதில் சிரமம் ஏற்படுகின்றது. எனக்கு கிடைக்கும் கொஞ்சநேர ஓய்வு நேரத்தையும் மின்தடை எடுத்துக்கொள்வதால் தொடர்ந்து பதிவிட முடியவில்லை.25 பதிவுகள் ரெடியாகி நேரமின்மையால் காத்திருக்கின்றது. விரைவில் தொடரந்துபதிவிடுகின்றேன்.

Friday, April 22, 2011

வேலன்-வித்தியசமான விதவிதமான தமிழ் எழுத்துருக்கள்.

வேர்டில் பணிபுரிபவர்களாகட்டும்-போட்டோஷாப்.டிடிபி வேலை என்கின்ற பலவித வேலைகளுக்கு விதவிதமான தமிழ்எழுத்துருக்கள் தேவைப்படும். ஆங்கிலத்தில் ஆயிரகணக்கில் எழுத்துருக்கள் இருந்தாலும் தமிழில்உள்ள எழுத்துருக்கள் சொற்பமே...விதவிதமான வித்தியாசமான தமிழ்எழுத்துருக்களை கீழே கொடுத்துள்ளேன்.500 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.மாதிரிக்கு சில எழுத்துருக்களை பதிவிடடுள்ளேன்.
நாக நந்தினி பெயருடைய எழுத்துரு-
Ntyd;.
gy;yhz;L
tho;f.
கலைமகள் என்கின்ற பெயருடைய எழுத்துரு-
tho;f tsKld;.
fiykfs;.
திவ்யா என்கின்ற பெயருடைய எழுத்துரு-
jpt;ah
கிரவாணி என்கின்ற பெயருடைய எழுத்துரு-
fputhzp
கிளவி என்கினற பெயருடைய எழுத்துரு-
fpstp.

இதைப்போலவே இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை இத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது.இதனை போட்டோஷாப்பிலும் எளிதாக பயன்படுத்தலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


Wednesday, April 20, 2011

வேலன்-பெப்ஸி வால்யூம் கன்ட்ரோலர்.

கோடை வெயில் அனைதது மாவட்டங்களிலும் சென்சுரி அடித்துவிட்டது.நமது பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் ஆளுக்கொரு PEPSI  கொடுக்க ஆசைதான்.கொடுக்க மனமிருந்தாலும் ஒரே சமயத்தில் அனைவருக்கும் கொடுக்க இயலாதல்லவா?அதனால் இந்த பெப்ஸி வால்யூம் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்கள் டாக்ஸ்பாரில் இது அமர்ந்து கொள்ளும். இதனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
 இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவது மூலம் உங்கள் வால்யூமை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.டாக்ஸ்பாரில் கிளிக் செய்வதன் மூலம் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள Test Sound கிளிக் செய்ய உங்களுக்கு பெப்ஸி பாட்டிலை ஒப்பன் செய்யும் சத்தம் கிடைக்கும்.இதன் மூலம் நாம் Volume Control மற்றும் Adjust Audio properties விண்டோக்களை எளிதில் கொண்டுவரலாம். இதில் உள்ள Skin கிளிக் செய்வதன் மூலம் பெப்ஸி விண்டோ கலர் மாற்றிக்கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

Monday, April 18, 2011

வேலன்-டெக்ஸ்டாப் போட்டோ ப்ரேம்

டெக்ஸ்டாப்பில் நாம் நமது புகைப்படங்களை வைத்திருப்போம். ஆனால் விதவிதமான ப்ரேம் செய்த புகைப்படங்கள் வைத்திருப்போமா? கிடையாது.டெக்ஸ்டாப்பில் நமது புகைப்படங்களை விதவிதமான ப்ரேம் செய்து வேண்டிய இடங்களில் நகர்த்தி வைத்துக்கொள்ளலாம். 13 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ப்ரேம் கிளிக்செய்ய உங்களுக்கு விதவிதமான ப்ரேம்கள் கிடைக்கும். தேவையானதை கிளிக் செய்யவும்.
அதைப்போல் வலதுகை பக்கத்தில் உள்ள Photo - Open-கிளிக் செய்து உங்களது புகைப்படத்தை தேர்வு செய்யவும்.புகைப்படத்திலேயே கலர் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.மேலும் புகைபடத்தை பழைய படமாக மாற்றவோ - நிழல்படமாக மாற்றவோ செய்துகொள்ளலாம்.தேவையான வார்த்தைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.அதற்கான வசதி இதன் கீழேயே கொடுக்கப்பட்டுள்ளது.
இப்போது நடுவில் நீங்கள் தேர்வு செய்த புகைப்படம் வந்துவிட்டிருக்கும். அதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவது மூலம் படத்தை நேராகவோ சாய்ந்தோ வைக்கலாம்.
இறுதியாக கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும். இப்போது டெக்ஸ்ட்டாப்பில் சென்று பார்த்தீர்களேயானால் உங்களது புகைப்படம் நீங்கள் தேர்வு செய்த புகைபடத்துடன் வந்திருக்கும்.
படத்தை தேவையான இடத்திற்கு நகர்த்தி வைத்துக்கொள்ளவும் தேவையானால் மறைத்தும் வைத்துக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

Thursday, April 14, 2011

வேலன்-தம்ப்நெய்ல் வியு அளவுகளை மாற்ற

நமது கம்யூட்டரில் வைத்துள்ள பைல்கள்-புகைப்படங்களை நாம் தம்ப்நெய்ல் வியுவில் பார்ப்போம். சாதாரண அளவுகளில் தெரியும் பைல்களை - புகைப்படங்களை நாம் சிறியதாகவோ பெரியதாகவோ மாற்றிக்கொள்ளலாம். அதற்கு இந்த சின்ன சாப்ட்வேர்பயன்படும். 800 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.சாதாரணமாக நான் தேர்வு செய்துள்ள படங்கள் கீழே-
 இப்போது இந்த தம்ப்நெய்ல் பைலை இயக்கியவுடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உள்ள Quality மற்றும் Size ஸ்லைடரில் உள்ள அளவுகளை தேவையான அளவுக்கு மாற்றி கொள்ளவும். பின்னர் கீழே உள்ள Apply கிளிக் செய்யவும். 
 இப்போது உங்கள் கம்யூட்டரில் உள்ள புகைப்படங்களை சென்று பாருங்கள். அளவு மாறி பெரியதாக காட்சி அளிக்கும்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Tuesday, April 12, 2011

வேலன்-பைல் தயாரித்த தேதியை மாற்ற


நாம் கம்யூட்டரில் பணிபுரிகையில் ஒரு புதிய பைலை உருவாக்குவதாக வைத்துக்கொள்ளுவோம். அவ்வாறு உருவாக்கியஉடன் அதன் Properties சென்று பார்த்தால் நாம் பைலை உருவாக்கிய தேதி - நேரம் ஆகியவை தெரியவரும்.முன்தேதியிட்டு பைலை உருவாக்கியவாறு தேதியை சில நேரங்களில் மாற்றவேண்டி வரலாம். அந்த சமயங்களில் நமக்கு இந்த சின்ன சாப்ட்வேர் உதவிக்கு வரும். 1 எம்.பி .கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். நீங்கள் ஏற்கனவே உருவாக்கிஉள்ள பைலின் Properties பாருங்கள் உதாரணத்திற்கு கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது இந்த சாப்ட்வேர் மூல்ம் அந்த பைலை தேர்வு செய்யுங்கள்.
இதில் உள்ள Simple Change File Date என்பதனை கிளிக் செய்து தேவையான தேதியை கொண்டுவாருங்கள்.
ஓ.கே. கொடுத்தவுடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.அதற்கும். ஒ.கே. கொடுங்கள்.
இப்போது உங்களது பைலினை திறந்து அதன் Properties பாருங்கள். 
உங்களது பைலின் தேதி மாறிவிட்டிருக்கும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

Tuesday, April 5, 2011

வேலன்- விரைந்து தட்டச்சு செய்ய(இன்ஸ்டென்ட் டைப்)

இன்ஸ்டென்ட் காபி,இன்ஸ்டென்ட் மிக்ஸ் கேள்விபட்டிருப்பீர்கள். இன்ஸ்டென்ட் டைப் பற்றி கேள்விபட்டிருக்கின்றீர்களா? குறிப்பிட்ட முகவரிகள். அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் ஆகியவற்றை முதலில் தட்டச்சு செய்துவிட்டு குறிப்பிட்ட எழுததுக்களை அழுத்துவது மூலம் முழுமையாக அந்த வார்த்தைகளை கொண்டுவரலாம்.1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள + என்கின்ற பச்சைநிற பட்டனை கிளிக் செய்ததும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் தேவையான எழுத்தினை தட்டச்சு செய்து பின் அதற்கு எதிரே உள்ள கட்டத்தில் தேவையான வார்த்தையை தட்டச்சு செய்யவும்.இதுபோல் விருப்பமான எழுத்துக்களுக்கு விருப்பமான முகவரிகள் வார்த்தைகளை தட்டச்சு செய்துகொள்ளலாம். அடுத்து நீங்கள் எந்த ஒரு அப்ளிகேஷனையும் ஒப்பன் செய்து இந்த ஷார்ட்கட் எழுத்தினை தட்டச்சு செய்ய அங்கு உங்களுக்கு முழுமையான வார்த்தைகள் கிடைக்கும்.நமக்கு தட்டச்சு வேலை சுலபமாகும்.இதனால் அலுவலக பணிகளை விரைந்து முடித்து நல்லபெயர் வாங்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.



Sunday, April 3, 2011

வேலன்-போட்டோக்களில் ஆல்பம் தயாரிக்க


நம்மிடம் உள்ள புகைப்படங்களை விதவிதமான ஆல்பங்களாக மாற்றி அழகுப்படுத்தலாம். 250 ப்ரேம்கள் - 5 மாடல்கள் என விதவிதமாக இந்த சாப்ட்வேரில் உள்ளது.22 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் கீழ்புறம் உள்ள Select Photo என்பதனை கிளிக் செய்து தேவையான புகைப்படங்களை தேர்வு செய்யுங்கள்.
அதைப்போல நீங்கள் Select Frame என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு விதவிதமான ப்ரேம்கள் கிடைக்கும். அதிலிருந்து தேவையானதை தேர்வு செய்யுங்கள்.



ஒவ்வொரு புகைப்படத்தையும் தேர்வு செய்து டபுள்கிளிக் செய்ய உங்களது புகைப்படம் அடுத்த விண்டோவில் உள்ள ஆல்பத்தில் செட்டாகிவிடும்.
நீங்கள் தேர்வு செய்த படம் ஆல்பமாக கீழே கிடைக்கும். தேவையானதை தேர்வு செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.



Saturday, April 2, 2011

வேலன்-டெக்ஸ்டாப்பில் ஈ.வரவழைக்க

மழைக்காலத்தில் கொசு தொல்லை என்றால் வெயில் காலத்தில் ஈ க்கள் தொ்லலை.நமது டெக்ஸ்டாப்பிலும் நிறைய ஈக்களை மொய்க்க செய்யலாம்.700 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு வரும் பைலை கிளிக் செய்ய ஒவ்வொரு ஈ ஆக பறந்துவந்து உங்களுடைய டெக்ஸ்டாப்பினை வலம் வரும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
ஏற்கனவே டெக்ஸ்டாப்பில் கரப்பான்பூச்சி வருவதை பற்றி பதிவிட்டுள்ளேன். புதியவர்கள் இங்கு கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.குழந்தைகள் அப்புறம் ஈ அடிக்க கிளம்பிடபோகிறார்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

JUST FOR JOLLY VIDEOS
ஒருவேளை அரசியல்வாதியில் வீட்டில் வளர்ந்த நாயாக இருக்குமோ?