வேலன்:-கம்யூட்டரில் கரப்பான்பூச்சியை வரவழைக்க

நமது கம்யூட்டரில் ஏற்கனவே டெக்ஸ்டாப்பில் விளையாட,
தீ பிடிக்க தீ பிடிக்க,.கம்யூட்டரில்தண்ணீர் வரவழைக்க என
 முந்தைய பதிவுகளில்பார்த்தோம். பதிவினை பார்க்காதவர்கள்
 அந்த அந்ததலைப்புகளில் கிளிக் செய்தால் அந்த தளங்களுக்கு
செல்லலாம்.
கரப்பான்பூச்சிக்கு பயப்படாதவர்கள் இருப்பார்களா...
இன்றைய பதிவில் கம்யூட்டரில் கரப்பான்பூச்சியை
வரவழைப்பதை காணலாம். இந்த கரப்பான்பூச்சியை
வரவழைக்க இங்கு கிளிக் செய்யுங்கள். இது 2 எம்.பி.க்குள்
தான் உள்ள சின்ன சாப்ட்வேர்.
 இதை கிளிக் செய்து டவுண்லோடு செய்து கிளிக் செய்தபின்
உங்கள் கம்ப்யூட்டரில் கரப்பான் பூச்சி குறுக்கும்
நெடுக்கும் ஒடுவதை காணுங்கள்.
எனது மகனுக்கு சின்ன வயதில் இந்த சாப்ட்வேரை போட்டு
நீ கம்யூட்டரில் ஏதாவது செய்தால் இந்த மாதிரி கரப்பான்பூச்சி
வரும்டா என சொன்னேன். குடுகுடு என ஓடியவன் ஒரு
கட்டையை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். கொஞ்சம்
நான் கவனிக்காமல் விட்டிருந்தால் அவ்வளவுதான். மானிட்டர்
காலியாகி இருக்கும்.இதை ஏன் இங்கு சொல்கின்றேன் என்றால்
உங்கள் மகனோ -மகளோ இதுபோல் நீங்கள் இல்லாதபோது
கட்டையை எடுத்துவந்து மானிட்டரில் உள்ள கரப்பான் பூச்சியை அடிக்கபோகின்றார்கள்.
பதிவினை பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
உங்களுக்கும் ரேஷன்கார்ட் கொடுக்கப்போறாங்க...
உங்க பேர் இருக்கானு பார்த்துக்குங்க..
இதுவரை வந்துள்ள PSD புகைப்படங்களில் இருந்து
சில படங்களை எடுத்து புதிய PSD படம் உருவாக்கி
உள்ளேன். ஏற்கனவே நான் வெளியிட்ட புகைப்படங்களும்
அதில் உருவாக்கிய படமும் கீழே:-
மேலே உள்ள படத்தில் மரத்தை எடுத்துள்ளேன்.

இந்த படத்தில் மண்டபம் -படிக்கட்டு - தூண் என எடுத்துள்ளேன்.

இந்த படத்தில் புலியை எடுத்துள்ளேன்.
இந்த படத்தில் வினாயகர் மற்றும் படிக்கெட்டு எடுத்துள்ளேன்.
இவையனைத்தையும் கலந்த கலவையில உருவான படம் மேலே

இந்த படத்தை பதிவிறக்க நீங்கள் இங்குகிளிக் செய்யுங்கள்.

கரப்பான்பூச்சியை இதுவரை கம்யூட்டரில் ஓடவிட்டவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

22 comments:

கண்மணி said...

அய் நான் தான் முதல்ல கரப்பானை ஓடவிட்டேன்.நன்றி
எங்க வீட்டு குட்டீஸுக்கு ஜாலி
ஆனா நிஜக் கரப்பான் போல ச்சீஇய் உவ்வே...

கண்மணி said...

நீங்க சுட்டிய டெஸ்க் டாப் தீ யை விட இன்னும் நல்லதா ஒரு ஸ்கிரீன் சேவர் டிரையல் வெர்ஷன் இருந்தது.கொஞ்சம் கொஞ்சமா உருகி வழியும்.இப்போ அதன் உரல் தெரியலை.
போன தண்ணீர் பதிவும் என்ஞாய் செய்தோம் சூப்பர்.

♠புதுவை சிவா♠ said...

"குடுகுடு என ஓடியவன் ஒரு
கட்டையை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான்."

:-)))))

பிரியமுடன் பிரபு said...

எனது மகனுக்கு சின்ன வயதில் இந்த சாப்ட்வேரை போட்டு
நீ கம்யூட்டரில் ஏதாவது செய்தால் இந்த மாதிரி கரப்பான்பூச்சி
வரும்டா என சொன்னேன். குடுகுடு என ஓடியவன் ஒரு
கட்டையை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். கொஞ்சம்
நான் கவனிக்காமல் விட்டிருந்தால் அவ்வளவுதான். மானிட்டர்
காலியாகி இருக்கும்

mmm

super

நன்றி

வேலன். said...

கண்மணி கூறியது...
அய் நான் தான் முதல்ல கரப்பானை ஓடவிட்டேன்.நன்றி
எங்க வீட்டு குட்டீஸுக்கு ஜாலி
ஆனா நிஜக் கரப்பான் போல ச்சீஇய் உவ்வே//

நன்றி சகோதரி....தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி'

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கண்மணி கூறியது...
நீங்க சுட்டிய டெஸ்க் டாப் தீ யை விட இன்னும் நல்லதா ஒரு ஸ்கிரீன் சேவர் டிரையல் வெர்ஷன் இருந்தது.கொஞ்சம் கொஞ்சமா உருகி வழியும்.இப்போ அதன் உரல் தெரியலை.
போன தண்ணீர் பதிவும் என்ஞாய் செய்தோம் சூப்பர்ஃஃ

நன்றி சகோதரி....

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

♠புதுவை சிவா♠ கூறியது...
"குடுகுடு என ஓடியவன் ஒரு
கட்டையை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான்."

:-)))))

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பிரியமுடன் பிரபு கூறியது...
எனது மகனுக்கு சின்ன வயதில் இந்த சாப்ட்வேரை போட்டு
நீ கம்யூட்டரில் ஏதாவது செய்தால் இந்த மாதிரி கரப்பான்பூச்சி
வரும்டா என சொன்னேன். குடுகுடு என ஓடியவன் ஒரு
கட்டையை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். கொஞ்சம்
நான் கவனிக்காமல் விட்டிருந்தால் அவ்வளவுதான். மானிட்டர்
காலியாகி இருக்கும்

mmm

super

நன்றி

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபு அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

negamam said...

நான் கவனிக்காமல் விட்டிருந்தால் அவ்வளவுதான். மானிட்டர்
காலியாகி இருக்கும்.

Anonymous said...

பகிர்வுக்கு நன்றிங்க.

-அன்புடன் மஜீத்.

யூர்கன் க்ருகியர் said...

இந்த பூச்சி காட்ற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம் :)

அண்ணாமலையான் said...

நல்லா காட்டறீங்க பூச்சி...

ராமலக்ஷ்மி said...

கலவையில் உருவான படம் கலக்கல்!

கரப்பான் பூச்சி:))!

டவுசர் பாண்டி said...

அய்யே !! இதுக்கு இன்னாத்துக்கு கட்ட எட்து அடிக்கறது !! ரவ பேகான் இஸ்பரே அட்சாகா போவாதா ? நம்ப பொட்டிக்குள்ள தான் கரப்பான்
பூச்சி கீது !!

அதுக்கு நானு இது மேரி தான் அட்ச்சம்பா !! சொம்மா மழ்கம் வந்தா மேரி பூட்சி , கரப்பானுக்கு இல்ல எனுக்கு !!

ரமேஷ் said...

மிகவும் நன்றாக உள்ளது. பார்த்தால் எனக்கே பயமாக உள்ளது நண்பரே

வேலன். said...

negamam கூறியது...
நான் கவனிக்காமல் விட்டிருந்தால் அவ்வளவுதான். மானிட்டர்
காலியாகி இருக்கும்.//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
பகிர்வுக்கு நன்றிங்க.

-அன்புடன் மஜீத்.

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
இந்த பூச்சி காட்ற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம் :)

ஐயோ சாரே...உங்க கிட்டேயெல்லாம் என்னாலே பூச்சி காட்ட முடியுமா?
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

அண்ணாமலையான் கூறியது...
நல்லா காட்டறீங்க பூச்சி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணாமலையான் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ராமலக்ஷ்மி கூறியது...
கலவையில் உருவான படம் கலக்கல்!
கரப்பான்பூச்சி....

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி....

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

டவுசர் பாண்டி கூறியது...
அய்யே !! இதுக்கு இன்னாத்துக்கு கட்ட எட்து அடிக்கறது !! ரவ பேகான் இஸ்பரே அட்சாகா போவாதா ? நம்ப பொட்டிக்குள்ள தான் கரப்பான்
பூச்சி கீது !!

அதுக்கு நானு இது மேரி தான் அட்ச்சம்பா !! சொம்மா மழ்கம் வந்தா மேரி பூட்சி , கரப்பானுக்கு இல்ல எனுக்கு !!

இதான் வாத்தியாரே....உஷாராகீனும்..ஆமாம். நீ எத்தினிதபா மயக்கம்அடிச்சிஉளுந்தே...
வந்ததுக்கு தாங்ஸ்ப்பா...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ரமேஷ் கூறியது...
மிகவும் நன்றாக உள்ளது. பார்த்தால் எனக்கே பயமாக உள்ளது நண்பரேஃஃ

நன்றி ரமேஷ் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...