Sunday, January 29, 2012

வேலன்:-மறைந்துவிட்ட டாக்ஸ்மேனேஜரை வரவழைக்க

நமது வீடுகளில் மின்சாரம் பயன்படுத்தி வருகின்றோம். மின்சார பயன்பாட்டில் குறை ஏற்பட்டாலும் – ஷார்ட் சர்க்யூட் ஆனாலும் அதிகப்படியான மின்சாரம் வந்தாலும் நமது மெயின்பாக்ஸில் உள்ள கேரியரில் பீஸ் போய்விடும். தவறினை கண்டுபிடித்து மீண்டும் நாம் பீஸ் போட்டால்தான் மின்சார இனணப்பு நமக்கு கிடைக்கும்.வீடுகளில் லைட் எரியும்;. அதனைப்போலவே நாம் நமது கம்யூட்டரில் ஏதாவது சாப்ட்வேர் நிறுவுகையிலும் – வைரஸினால் தாக்குதல் ஏற்பட்டாலும் டாக்ஸ்மேனேஜர் Task Manager காணாமல் போகிவிடும்..இந்த task manager இல்லையென்றால் எந்த ப்ரோக்ராமையும் ரன்
பண்ணவே முடியாது.தனைப்போலவே எந்த ப்ரோக்ரமையும்
நிறுத்த முடியாது.முதலில் நம்ப taskmanager விசிபிலா இருக்கின்றதா என நாம் சோதனை செய்துகொள்ளலாம்.
முதலில் டாக்ஸ்பாரில் கர்சரை வைத்து கிளிக் செய்யவும்..வரும் விண்டோவில் டாக்ஸ்மேனேஜர் தெரிகின்றதா அல்லது மறைந்துள்ளதா என பாருங்கள்.அது மறைந்திருந்தால் அதனை கொண்டுவரும் வழியை இப்போழுது காணலாம். முதலில் ஸ்டார்ட் கிளிக் செய்துகொள்ளவும்.
தில் ரன் ஓப்பன் செய்துகொள்ளவும்.
அதுல gpedit இன்னு போட்டு புள்ளி வெச்சி msc இன்னு type
செய்து பின்னர் ok பண்ணவும் ,கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்.
தில் உள்ள user configuration டபுள்   கிளிக் பண்ணவும் , உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதுல Administrative Template என்பதை டபுள் கிளிக் பண்ணவும் ,
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
அதுல system என்பதனை டபுள் கிளிக் பண்ணவும் , உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தில் ctrl+Alt+Del option என்று உள்ளதை, டபுள் கிளிக் பண்ணவும் ,
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோப்பன் ஆகும்.
இப்போது தில் உள்ள ஏதாவது ஒன்றில் டபுள் கிளிக் பண்ணால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போ அதுல Disabled கிளிக் பண்ணி Apply குடுக்கவும் பிறகு ok குடுக்கவும்,இப்போது பழையபடி நாம் டாக்ஸ்பாரில் வந்து ரைட் கிளிக் செய்துபார்த்தால் taskmanager வந்து  இருக்கும் ,இதனை குறிப்பாக குறித்துவைத்துக்கொள்ளுங்கள். எப்போதாவது உங்கள் கம்யூட்டரில் டாக்ஸ்மேனேஜர் மறைந்துவிடும் சமயம் இதனை பயன்படுத்தலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, January 22, 2012

வேலன்:-Simple Home Budget - வீட்டு வரவு செலவை கணக்கிட

ஆற்றில் போட்டாலும் அளந்துபோடவேண்டும் என்று சொல்லுவார்கள்.நாம் ஆத்தில்(வீட்டில்)செய்யும் செலவினை சுலபமாக கணக்கிடலாம்..இந்த தளம் செல்ல  http://www.home-budget-software.com"target="_blank"/ என்கின்ற முகவரியை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 

இதில் உள்ள Free Download கிளிக் செய்து வரும் சாப்ட்வேரினை
(3 எம்.பி.கொள்ளளவு) டவுண்லோடு செய்து பின்னர் இன்ஸ்டால் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கு இடது புறம் கீழ்கண்ட விண்டோ கிடைக்கும். அதில் Expense,Income,Refund என மூன்று ரேடியோ பட்டன்கள் இருக்கும். நீங்கள் எந்த வகையான தகவல்களை உள்ளீடு செய்யப்போகின்றீர்களோ அந்த விவரம் தட்டச்சு செய்யவும்.
இதில் உள்ள Category யில் நமக்கு தேவையான கூடுதல் விவரங்களையும் இணைக்கலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் Name என்பதில் பெயரையும் Group-என்பதில் அதன் வகையையும் Color-என்பதனை தேர்வு செய்வதன் மூலம் சுலபமாக அறிந்துகொள்ளவும் முடியு.Save
என்பதன் மூலம் நாம் விவரங்களை சேமித்துக்கொள்ளலாம். இதில் கூடுதல் வசதி என்னவென்றால்இந்த சாப்ட்வேர் தமிழை ஆதரிப்பதால் இதில் நாம் தமிழிலேயே விவரங்களை தட்டச்சு செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள Overview கிளிக் செய்வதன் மூலம் நம்முடைய வரவு -செலவினை கிராப் மூலம் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நண்பர் ஒருவர் எவ்வளவு வருமானம் வந்தாலும் என்ன செலவாகின்றது என்றே தெரியவில்லை -இருப்பே இருக்கமாட்டேன் என்கின்றது என்று சொன்னார். அவருக்கு இந்த சாப்ட்வேரினை கொடுத்து ஒருவாரத்திற்கு வரவு -செலவினை எழுதி வரசொன்னேன்.அவருக்கு வரும் வருமானத்தில் சுமார் 40 சதவீதம் பெட்ரோலுக்கே செலவாகிவந்தது தெரியவந்தது.அடுத்த வாரத்தில் அந்த செலவினை குறைந்துவிட்டார். இப்போது அவருக்கு குறிப்பிட்ட தொகை இருப்பு உள்ளது.இந்த சாப்ட்வேரினை டவுண்லோடு செய்து பாருங்கள்.உங்கள் வீணாண செலவுகளை குறைத்துவிடுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Thursday, January 19, 2012

வேலன்:-எளிதில் அளக்க விண்டோ ஸ்கேல்.

புகைப்படங்கள் ஆகட்டும் - டாக்குமெண்ட்கள் ஆகட்டும் நமக்கு தேவையான அளவில் எளிதில் அளவினை தெரிந்துகொள்ள இந்த சின்ன ரூரல் சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது. 640 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் https://www.arulerforwindows.com/ செய்யவும்.
 ஒரு புகைப்படத்தின் நீளம் அகலம் அதனுடைய பிக்ஸ்ல் அளவு அறிந்துகொள்ள நாம் புகைப்படத்தினை போட்டோஷாப் சாப்ட்வேரினை திறந்து அதில் இந்த போட்டோவினை ஒப்பன் செய்து பின்னர் இமேஜ் சைஸ் மூலம் அறியவேண்டும். ஆனால் இதில்.போட்டோக்களின் அளவினை போட்டோஷாப் உதவியில்லாமல் நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.மேலே உள்ள புகைப்படத்தினை பார்த்தாலே உங்களுக்கு எளிதில் விளங்கும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு ஒரு ரூரல் ஸ்கேல் கிடைக்கும்.அதில் உள்ள ஸ்கின் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான நிறம் - அளவு - நாம் தேர்வு செய்துகொள்ளலாம்
எளிய விளக்கத்திற்கு இதனுடைய டுடோரியல் உங்களுக்கு யூடியூப் வடிவில் இணைக்கப்பட்டு உள்ளது.

பயன்படுததிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Tuesday, January 17, 2012

வேலன்:-தட்டச்சு பாடம் பயில

விதவிதமான டைப்ரேட்டிங் சாப்ட்வேர் இருந்தாலும் புதியதான இந்த சாப்ட்வேர் உள்ளது. asdfgf --ல் ஆரம்பித்து முழு பாடமும் இதில் வருகின்றது. 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்...
உங்களுடை கீபோர்டில் விரல்களை அதில் கொடுக்கப்பட்டுள்ள பொஷிஷனில் வைத்து தட்டச்சு செய்யுங்கள.நீங்கள் எங்கெங்கு தவறு செய்கின்றீர்களோ அப்போது உங்களுக்கு ஒரு பீப் ஒலி கேட்கும். தவறான எழுத்து சிகப்பு நிறத்தில் இருக்கும்.
மொத்த டெக்ஸ்ட்டையும் நாம் பிரிவியு பார்க்கலாம்.
அவர்கள்  கொடுத்துள்ள நேரத்தில் நாம் எவ்வளவு தவறு செய்கின்றோம்- எவ்வளவு வேகத்தில் தட்டச்சு செய்கின்றோம் - ஒரு நிமிடத்திற்கு நாம் தட்டச்சு செய்யும் வார்த்தைகளையும் இதில் உள்ள Lesson Results கிளிக்செய்வதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Friday, January 13, 2012

வேலன்:-போட்டோவில் தேவையில்லாததை எளிதில் நீக்க

புகைப்பட கலைஞர்கள் சிரமபட்டு போட்டோ எடுப்பார்கள். நடுவில் குழந்தைகள் தலையோ - கையோ போட்டோவில் வந்துவிடும். போட்டோ நன்றாக இருக்கும். ஆனால் அந்த இடம் சங்கடத்தை கொடுக்கும. அதுபோல அரசியல்வாதி உங்கள் வீட்டுவிஷேஷத்திற்கு வந்துஇருப்பார். அதன்பிறகு அவரை கட்சியில் இருந்து நீக்கிஇருப்பார்கள். அவருடன் உங்கள் புகைப்படம் இருந்தால் வம்பு அல்லவா?இந்த சின்ன சாப்ட்வேரில அந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படும். அதுபோல் போட்டோவில் தேதி இருக்கும். அதனையும்இந்த சாப்ட்வேர் மூலம் தேதி இல்லாமல் நிவர்த்தி செய்துவிடலாம். குறிப்பிட்ட கலர் தேவையில்லையென்றால் அதனையும் எளிதில் நீக்கிவிடலாம்.இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் https://www.softorbits.net/watermark-remover/ செய்யவும. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உள்ள Add Files மூலம் புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.
நீக்க விரும்பும் இடத்தை இதில் உள்ள Select மூலம் தேர்வு செய்யுங்கள். நான் புத்தாண்டு என்பதனை தேர்வு செய்துள்ளேன்.
இதில் உள்ள ரீமூவ் கிளிக் செய்யுங்கள். அவ்வளவுதான் நொடியில் மறைந்துவிடுவதை காண்பீர்கள். கீழே நான் புத்தாண்டு எடுத்துவிட்ட புகைப்படத்தை காணுங்கள்.
அதைப்போல குறிப்பிட்ட நிறத்தை நாம் தேர்வு செய்துநீக்கிவிடலாம். கீழே உள்ள புகைப்படத்தை காணுங்கள்.நான் வெற்றிலையை நீக்க பச்சை நிறத்தை தேர்வு செய்துள்ளேன்.
 வெற்றிலையை நீக்கியவிடன் வந்துள்ள புகைப்படம் கீழே:-
நீங்களும் உங்களுக்கு தேவையானதை நீக்கி பயன்படுத்தி பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்
 வேலன்.

Tuesday, January 10, 2012

வேலன்:-இன்ஜினியரிங் கால்குலேட்டர்.

கல்வியில் கணக்கு எப்படி முக்கியமோ அதுபோல் கணக்குக்கு கால்குலேட்டர் முக்கியம். +2 வில் ஆரம்பித்து இன்ஜினியரிங் படிப்பு வரை கால்குலேட்டர் நமது அன்றாட பயன்பாட்டுக்கு வந்துவிடுகின்றது.கம்யூட்டரில் பல கால்குலேட்டர்கள் இருப்பினும் இந்த இன்ஜினியரிங் கால்குலேட்டர் சிறந்ததாக உள்ளது.3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் File.Std.Eng.Binary.Magnetics.Tri.Convert என பலடேப்புகள் உள்ளது.நாம் விரும்பும் டேபினை தேர்வுசெய்துகொள்ளலாம்.இதில் View என்பதினை கிளிக் செய்ய பெரிய அளவில் விண்டோ கிடைக்கும. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
 இதில் Convert என்கின்ற டேபினை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான கன்வர்டினை நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.படிக்கும் மாணவர்களுக்கு பரிசாக அளியுங்கள்.உங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, January 8, 2012

வேலன்:-பைல்களை இலவசமாக சிடியில் காப்பி செய்ய

பைல்களை நாம் காப்பி செய்வதனால் பெரும்பாலும் நாம் நீரோ சாப்ட்வேர் உபயோகிப்போம். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு நீரோ சாப்ட்வேர் செய்யும் செயல்களை செய்துவிடுகின்றது. 5 எம்.பிக்குள் இலவசமாக கிடைக்கும் இந்த சின்ன சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் Data.,Multimedia.Disc images.Utilites என நான்கு பிரிவுகள் உள்ளது.தேவையான பிரிவில் தேவையானதை கிளிக் செய்யவும். நான் Data Dvd என்பதை கிளிக் செய்துள்ளேன். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள Add Files கிளிக் செய்து உங்கள் ஹார்ட்டிஸ்க்கில் உள்ள பைலை தேர்வு செய்யவும்.டிவிடியின் அளவினை தேர்வு செய்யவும். கீழே உள்ள Burn கிளிக் செய்யவும். தேவையான டிரைவ் தேர்வு செய்து ஓ.கே.தரவும்.
 இதிலேயே நமக்கு Erase Disc என்கின்ற வசதியும் உள்ளது. தேவையான டிரைவ் தேர்வு செய்து டிவிடியை Erase செய்துவிடலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Saturday, January 7, 2012

வேலன்:-டெம்பிள் ஆப் லைப் -விளையாட்டு

படத்திலிருந்து ஒரு பொருளை அதன்பெயருக்கு ஏற்ப சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். ஆனால் இரண்டு மூன்று பொருள்களை சேர்த்துதால் தான் ஒரு பொருளை கண்டுபிடிக்கமுடியும் என்றால் சற்று சிரமம் தான். மூளைக்கு அதிகப்படியான வேலையையும் விறுவிறுப்பையும் தரும் இந்த விளையாட்டினை பதிவிறக்கம் செய்ய இங்குகிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும்.
ஒவ்வொரு நிலைகளிலும் நமக்கு நிறைய சவால்கள் நிறைந்திருக்கும். சர்க்யூட் போர்ட் இருக்கும் நாம் எலக்டிரீஷியனாக மாறி இணைப்பு கொடுத்து மின்இணைப்பை வழங்கவேண்டும்.  
ஜேம்ஸ்பாண்ட் எப்படி சகலகலா வல்லவராக இருக்கின்றாரோ அதுபோல நீங்கள் எதனையும் எதிர்கொள்ளும் வல்லவராகவும் - அனைத்துவேலைகளையும் அறிந்தவராக இருத்தல் அவசியம்.
கண்டுபிடிப்பதில் நிபுணராகவும் -விளையாட்டில் ஆர்வமும் -உடையவராக இருந்தால் இந்த விளையாட்டு உங்களுக்கு நிச்சயம் நிறைந்த மகிழ்வினை தரும். விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Monday, January 2, 2012

வேலன்:-தேவைக்கு ஏற்ப ரீ-சைக்கிள் பின் அளவினை மாற்ற

குப்பைதொட்டியாக இருப்பினும் நாம் வீட்டின் அறைக்கு ஏற்பவே அதனை தேர்வு செய்யவேண்டும. வீடுகளில் குப்பை கொட்ட சின்ன கூடை வைத்திருப்போம். அதே வீட்டின் அறையில் கார்ப்பரேஷனில் உள்ள பெரிய தொட்டியை வைத்தால் நன்றாக இருக்குமா? இடத்தை அடைத்துகொள்ளதா?
அறைக்க ஏற்ப கூடை வைத்தால் அழகாக இருக்கும் அல்லவா? அதைப்போல நமது கம்யூட்டரில் உள்ள டிரைவ் அளவிற்கு ஏற்ப நாம் ரீசைக்கிள் பின்னை அமைக்கலாம்.இதனை தேர்வு செய்ய ரீ-சைக்கிள்பின்னை ரைட்கிளிக் செய்து ப்ராபர்டீஸ் தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 வரும் விண்டோவில் Global தேர்வு செய்யவும.எல்லா டிரைவ்விற்கும் ஒரே அளவிளான ரீ -சைக்கிள் பின் வைக்கவேண்டும் என்றால் Use one settings for all drives எதிரில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு தேவையான டிரைவிற்கு ஏற்ப அளவினை தேர்வு செய்ய Configuare drives independently எதிரில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்..
இதில் நமது கம்யூட்டரில் உள்ள டிரைவ்கள் இருக்கும். தேவையான டிரைவ் தேர்வு செய்து தேவையான அளவினை ஸ்லைடர் மூலம் நிர்ணயிக்கலாம்.இறுதியாக Apply செய்து Ok கொடுக்கவும்.நாம் பொதுவாக ரீ-சைக்கிள் பின் அனைத்து டிரைவ்விற்கும் சேர்த்து ஒன்றாக இருக்கும் என நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் அதிலும் ஒவ்வொரு டிரைவ்விற்கு ஏற்ப அளவினை நாமே அமைத்துக்கொள்ளலாம் என புதியவர்கள் அறிந்துகொண்டீர்கள் அல்லவா? பயன்படுததிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.


முக்கிய செய்தி:- பெங்களுரில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு கீழ்கண்ட தகுதியுள்ள நபர்கள் தேவைப்படுகின்றார்கள். நீங்களோ- அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரவது இருந்தாலோ வேலையை பற்றி சொல்லுங்கள் விருப்பமும் -தகுதியிருப்பின் உங்கள் இ-மெயில் முகவரியை கருத்துரையில் தெரிவிக்கவும. நான் நிறுவனத்தின் முழுமுகவரியை அனுப்பி வைக்கின்றேன்.
கல்வி தகுதி:- பி.இ. 
2 yrs experience - electronics manufacturing - testing - 2.5 to 3 lac / annum.

4-5 yrs experience - electronics manufacturing - testing - 4 to 4.5 lac / annum.



Sunday, January 1, 2012

வேலன்:-புகைப்படத்திலிருந்து வீடியோ தயாரிக்க.


திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கு நாம் புகைப்படங்கள் எடுப்போம். அதை ஆல்பம் போட்டுபார்ப்போம். ஆனால் உறவினர்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கு ஆல்பம் ரவுண்டு சென்று வருகையில் பழுதடைய வாய்ப்புண்டு. அதனை தவிர்க்க நாம் புகைப்படங்களை இந்த சின்ன சாப்ட்வேர் மூலம் வீடியோவாக மாற்றி தேவைப்படுபவர்களுக்கு சிடியாக கொடுத்துவிடலாம். பத்து ரூபாய்க்குள் செலவு முடிந்துவிடும்.இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add Photo  மூலம் புகைப்படங்களை தேர்வு செய்யவும். பின்னர் இரண்டாவதாக உள்ள Theme -ல் தேவையான டிசைனை தேர்வு செய்யவும். பின்னர் உங்களுக்கு தேவையான பாடலை நிகழ்ச்சிக்கு ஏற்ப சேர்க்கவும்.
தேவையான தலைப்பை சேர்த்துகொள்ளவும். உங்களுக்கு வீடியோ எந்த பார்மெட்டுக்கு வேண்டுமோ அதனை தேர்வு செய்துகொள்ளவும்.
சேமிக்கும் இடத்தையும் தேர்வு செய்துகொள்ளவும். இப்போது சேமித்த இடத்தில் சென் றுபார்த்தால் உங்களுக்கான வீடியோ கிடைக்கும். நண்பர்களுக்கு பரிசளிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.