Monday, February 28, 2011

வேலன்-கூகுள் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி?

இணைய பக்கங்களை பார்வையிடும் சமயம் சிலசமயம் நமக்கு அந்த இணைய பக்கம் முழுவதுமோ - அல்லது குறிப்பிட்ட பகுதியோ -அல்லது -குறிப்பிட்ட படமோ தேவைபடலாம். அதற்கு நாம் வெவ்வேறு சாப்டவேர்களை பயன்படுத்துகின்றோம். ஆனால் கூகுள் குரோம்மில் அதற்காகவே ஒரு சின்ன வசதியை இணைத்துள்ளார்கள். நீங்கள் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களாக இருந்தால் அந்த வசதியை இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். அந்த முகவரிதளத்தை டவுண்லோடு செய்ய நீங்கள்இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்டவாறு உங்கள் கூகுள் குரோம் ப்ரவுசரில் வலது மூலையில் ஐ-கான் வந்து அமர்நதுகொள்ளும்.
இதில் நமக்கு முழுபக்கம் மட்டும் தேவையானால் தேர்வு செய்துகொள்ளலாம்.

 அதில் உள்ள புகைப்படம் மட்டும்தேவையானாலும் தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்க்ள.
 பகுதி மட்டும்தேவையானாலும் தேரவுசெய்துகொள்ளலாம். அதில் நமக்கு வேண்டிய டெக்ஸ்டை தட்டச்சு செய்யலாம்.வட்டம் போடலாம்- செவ்வகம் வரையலாம். வண்ணங்கள் நிரப்பலாம். பிடிக்காத வாரத்தைகளை அழித்துவிடலாம்.
 வேண்டிய அளவுக்கு கிராப் செய்யலாம்.
உங்களுக்கு எளிய விளக்கத்திற்கு வீடியோ இணைத்துள்ளேன்
பயன்படுத்திப்பாருங்கள். கருத்து்க்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

Sunday, February 27, 2011

வேலன்-டிஜிட்டல் போட்டோ ஆர்கனைசர்.


நாம் புகைப்படங்கள் பல வைத்திருப்போம். அதன் பெயர் மாற்றுதல் - அளவினை மாற்றுதல் - வாட்டர் மார்க் சேர்த்தல்-டூப்ளிகேட் கண்டுபிடித்தல்-என பற்பல் வேலைகளை செய்ய இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.தேவையான போல்டரை தேர்வு செய்து கொள்ளவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
தனிப்பட்ட புகைப்படத்தின் பெயரையும் எளிதில் மாற்றிக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

பதினொன்றுக்கும் மேற்பட்ட பணிகளின் விவரம் கீழே கொடுக்கபபட்டுள்ளது்.
How to organize photo files?

Use Digital Photo Organizer and your pictures will be perfectly sorted and ready for easy access at any time. The user-friendly interface of the program ensures quick results and safe photo processing.
  • automatic photo sorter
  • batch photo renamer
  • single photo renamer
  • filter by size for cropper, resizer and protector
  • photo cropper
  • photo resizer
  • watermark protector
  • duplicate finder
  • folder merger
  • file name replacer
  • file extension manager

ஒவ்வொரு பலன்களாக பயன்படுத்திப்பாருங்கள். இது டிரையல் சாப்ட்வேர்தான். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

    Saturday, February 26, 2011

    வேலன்-சீக்ரேட் டைரி -விளையாட்டு

    கண்டுபிடித்து விளையாடும் விளையாட்டில் இது புது மாதிரியான விளையாட்டு். இதில் விஷேஷம் என்ன வென்றால் ஒரு அறையில் உள்ள பொருட்களை கொண்டு புதிய பொருளை செய்து விடை காணவேண்டும். 65 எம்.பிகொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
    ஒவ்வொரு இடமாக சென்று ஒவ்வொரு பொருளாக கண்டுபிடிக்கவேண்டும்.
    விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    Thursday, February 24, 2011

    வேலன்-கம்யூட்டர் தானே ஷெட்டவுண் ஆக.

    சில நேரங்களில் நாம் அவசரமாக வெளியில் செல்லவேண்டி வரலாம்.டவுண்லோடுக்கு சாப்ட்வேரோ - திரைப்படங்களோ - பாடல்களோ -டவுண்லோடு செய்துகொண்டிருப்போம். அது டவுண்லோடு ஆகும் வரை நம்மால் கம்யூட்டருடன் இருந்து அதை ஷெட்டவுண் செய்ய முடியாது.அந்த மாதிரியான சமயங்களில் நமக்கு கைகொடுக்க வருகின்றது இந்த குட்டி சாப்ட்வேர். 600 கே.பி. அளவுள்ள இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
     இதில் 15 நிமிடத்திலிருந்து 6 மணி நேரம் வரை கம்யூட்டர் தானே ஷெட்டவுண் ஆகும் நேரத்தை இதில் உள்ள ஸ்லைடரை நகர்ததுவது மூலம் செட் செய்யலாம்.

     இப்போது இதில் உள்ள ஸ்டார்ட் கிளிக் செய்தால் உங்களுக்கு கவுண்டவுண் ஆரம்பிக்கும்.
    நீங்கள் குறிப்பிட்ட நேரம் வந்ததும் கம்யூட்டர் தானே ஆப் ஆகிவிடும். சின்ன கல்லு -பெத்த லாபம்-என பஞச தந்திரம் படத்தில் ஒரு வசனம் வரும் .அதுபோல் சின்ன சாப்ட்வேர் -அதிக பலன் கொடுக்கின்றது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    Tuesday, February 22, 2011

    வேலன்-எம்.பி.3 டவுண்லோடர்.

    மனங்காத மனம் யாவும் மயங்கும் என பாடல் கேட்டிருப்பீர்கள்.இசைக்கு மயங்காதவர்கள் யார் இருக்கின்றார்கள்.1000க்கும் மேற்பட்ட பாடல்களை நீங்கள் கேட்க இந்த எம்.பி.3 டவுண்லோடு சாப்ட்வேரை நீங்கள் டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.7 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
    பாடகரையோ - பாடலையோ தேர்வு செய்யலாம். அதைப்போல தேவையான இசை தொகுப்பையும் நீங்கள் செலக்ட் செய்யலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
    இதில் உள்ள பாடல்களை தேர்வு செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு பாடல் டவுண்லேர்டு ஆக ஆரம்பிக்கும். கணிணியில் தேவையான இடத்தில் சேமித்து பின்னர் பாடலை நீங்கள் கேட்டு மகிழலாம்.
    பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    இன்று எனது மகன் வே.ராஜராஜன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்தினை .வாழ்த்தலாம் வாங்க பதிவில் இணைத்துள்ளேன்.அவருக்கு உங்கள அன்பினையும் -வாழ்த்தினையும்-ஆசிர்வாதத்தையும் -எதிர்பார்த்து
    -வேலன்.

    Monday, February 21, 2011

    வேலன்-எர்த் வியூ -Earth View-வால்பேப்பர் மற்றும் ஸ்கிரீன்சேவர்.

    விதவிதமான டெக்ஸ்டாப் மற்றும் ஸ்கிரீன் சேவர்களை இதற்கு முன் பார்த்திருக்கின்றோம். இந்த சாப்ட்வேரில் பூமியின் அப்போதைய நிலவரத்தையும் மேக கூட்டங்களையும் விரும்பும் நாட்டின் இரவு - பகல் நிலையையும் தெரிந்துகொள்ளலாம். 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுககு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
    இதில பூமியின் குளோப் வடிவத்தையோ -மேப் வடிவத்தையோ கொண்டவரலாம். அதைப்போல எவ்வளவு வினாடிகளுக்கு பின்னர் உங்கள் பூமியின் நிலவரம் அறிய வேண்டுமோ அதை செட்செய்துகொள்ளலாம். அதைப்போல் Day view.Night view.Clouds.Cities.Background & Smoothing செட்செய்துகொள்ளலாம். இதனால் ஏற்படும் பலன்கள் ஆங்கிலத்தில் கீழே கொடுத்துள்ளேன்.
    Main Features:

    · High detail view of the earth
    · Day and night view
    · Atmospheric effects
    · Urban areas and city night lights
    · Clouds (internet download of current cloud data possible)
    · Map and globe projection
    · Several beautiful maps to choose from
    · Location and local time display of more than 50.000 Cities worldwide
    · Wallpaper and screen saver support
    · Multiple monitor support
    · Many options for full customization
    · Now with full Windows 7 and 64 bit support
     பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    வேலன்-அழகிய குழந்தைகளின் வால்பேப்பர் படங்கள்.


    கர்பமாக இருக்கும் பெண்கள் அழகான குழந்தைகள் படத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டு இருந்தால் அழகிய குழந்தை பிறக்கும் என்று சொல்லுவார்கள்.இங்கு விதவிதமான குழந்தைகளின் வால்பேப்பர் படங்கள் உள்ளது. உங்களுக்கு பிடித்த படத்தை டெக்ஸ்டாப் வால்பேப்பராக வைத்துக்கொள்ளுங்கள்.17 எம்.பி. கொள்ளளவில் சுமார் 300 குழந்தைகளின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.சில மாதிரி புகைப்படங்கள் கீழே-






    படங்கள் டவுண்லோடு செய்யுங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


    வாழ்க வளமுடன்.
    வேலன்.



    Saturday, February 19, 2011

    வேலன்-காய்கறி-பழங்கள் விளையாட்டு

    காய்கறி விற்கும் விலையில் அதில் விளையாட்டா என்று 10 நாட்களுக்கு முன் நினைத்துபார்த்திருக்க முடியுமா? இன்று விலை குறைந்துவிட்டதால் அதனை வைத்து விளையாடலாம் வாங்க.40 எம்.பி. கொள்ளளவு கொண்ட 
    இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
    உங்கள் பெயரை அதில் கொடுத்து - இதில் உள்ள ஒரே மாதிரியான பழங்களை ஓரே லைனில் சேர்க்கவேண்டும்.சேர்க்கும் பழங்கள் மேலிருந்து கீழாகவோ - ஒரே வரிசையிலோ இருக்கலாம். பழங்களை -காய்கறிகளை சேர்க்க சேர்க்க உங்களுக்கு பாயிண்ட் ஏறிக்கொண்டே செல்லும்.
     அடுத்த லெவலில் நடுவில் டிராக்டர் இருக்கும். அதற்கு வழிஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.
    இதைப்போலவே ஒவ்வொரு நிலையிலும் நாம் முன்னேறி செல்லவேண்டும்.விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.



    Thursday, February 17, 2011

    வேலன்-கீ-ஸ்டொக் ரெக்கார்டர்.

    ஸ்கிரீன் ரெக்கார்டர் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் கீ ஸ்டொக் ரெக்கார்டர் பற்றி கேள்விபட்டு இருக்கின்றீர்களா? நமது கீ போர்டில் எந்த எந்த கீ யை நாம் தட்டச்சு செய்கின்றோமோ அந்த கீ களின் ஸ்டொக்கினை இந்த சாப்ட்வேர் தனியே சேமித்துவைத்துவிடும். தேவைபடும் சமயம் நாம் அங்கு சென்று பார்த்துக்கொள்ளலாம். 1 எம.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
    இதில் நாம் இந்த பைலை எங்கு சேமிக்க விரும்புகின்றமோ அந்த இடத்தை குறிப்பிட வேண்டும். அதைப்போல இந்த பைலுக்கு நாம் விருப்ப பட்ட பெயரை வைத்துவிடலாம்.இப்போது நாம் இதில் உள்ள Begin Recording கிளிக் செய்துவிட்டால் இந்த சாப்ட்வேர் வேலை செய்ய துவங்கிவிடும். தேவையை முடிந்ததும் இதில் உள்ள Stop Recording கிளிக் செய்தால் போதுமானது. இப்போது நாம் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் நாம் தட்டச்சு செய்த கீ ஸ்டோக்குகள் அங்கு இருக்கும்.இந்த சாப்ட்வேரினால் என்ன நல்ல பயன் என்றால் பிறர் என்ன தட்டச்சு செய்தார்கள் என்பதனை நாம் எளிதில் தெரிந்துகொள்ளலாம்.அதைப்போல் இதனால் என்ன கெடுதல் என்றால் நாம் தட்டச்சு செய்ததையும் பிறர் எளிதில் அறிந்துகொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    Wednesday, February 16, 2011

    வேலன்-போட்டோஷாப் -ஸ்டைல் இணைப்பது எப்படி?

    எந்த ஒரு பொருளையும் உபயோகிக்காமல் இருந்தால் அதனால் பயனில்லை.அதைப்போல முந்தைய பதிவில் பதிவிட்ட ஸ்டைலை எவ்வாறு போட்டோஷாப்பில் இணைப்பது என்று பார்க்கலாம்.முதலில் போட்டோஷாப்பினை திறந்துகொள்ளுங்கள்.அதில் உள்ள விண்டோவினை கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட படம் ஓப்பன் ஆகும்.
    இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் வலது மூலையில் உள்ள முக்கோணத்தை கிளிக் செய்யவும். உடன் ஒரு விண்டோ தோன்றும். அதில் உள்ள Load Styles கிளிக் செய்யவும்.
    உங்கள் ஹார்ட்டிஸ்கிலிருந்து நீங்கள் சேமித்துவைத்துள்ள Style-ஐ தேர்வு செய்யுங்கள்.இப்போது புதிய விண்டோ திறந்துகொண்டு அதில் தேவையான எழுத்துக்களை தட்டச்சு செய்யுங்கள். பின்னர் இதில் உள்ள ஸ்டைல் கட்டத்தில் ஒவ்வொன்றையும் கிளிக் செய்ய உங்கள் எழுத்துக்களானது விதவிதமான நிறம்மாறுவதை காணலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
    இதனைப்போலவே அனைத்து ஸ்டைலையும் நாம் பயன்படுத்திப்பார்க்கலாம்.
    பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    Monday, February 14, 2011

    வேலன்-மொபைல்போனுக்கான வால்பேப்பர்கள்.

    அடிக்கடி கம்யூட்டருக்கே வால்பேப்பர் போட்டுவருகின்றோம். இன்றைய பதிவில் மொபைல்போனுக்கு ஏற்ப வால்பேப்பர்களை இணைத்துள்ளேன்.81 வால்பேப்பர்கள் - 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.சில மாடல் புகைப்படங்கள் கீழே”-












    பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    Sunday, February 13, 2011

    வேலன்-போட்டோஷாப் ஸ்டைல் எழுத்துக்கள் -பாகம் 1

    புகைப்படம் எவ்வளவு முக்கியமோ அதைப்போல் அதில் எழுதும் எழுத்துக்களும் முக்கியம். அந்த எழுத்துக்களை நாம் விதவிதமான ஸ்டைலில் கொண்டுவரலாம்.இங்கு உங்களுக்கு 25 ஸ்டைல் எழுத்துக்களை இணைத்துள்ளேன். 1 எம்.பி. கொள்ளளவு கொண்ட அதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
    இந்த ஸ்டைல் எழுத்துக்களை டவுண்லோடு செய்து பின்னர் உங்கள் போட்டோஷாப்பில் இணைத்துக்கொள்ளவும. இப்போது வேண்டிய புகைப்படத்தை திறந்துகொள்ளவும்.வேண்டிய வார்த்தைகளை தட்டச்சுசெய்துகொண்டு இந்த ஸ்டைலை கிளிக் செய்யவும. உங்களுக்கு விதவிதமான ஸ்டைலில் எழுத்துக்கள் காட்சியளிக்கும். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.ஒரே வார்த்தையை விதவிதமான ஸ்டைலில் கீழே கொடுத்துள்ளேன்.
    இதில்இணைத்துள்ள விதவிதமான எழுத்துக்களின் ஸ்டைலினை கீழே காணவும்.

    இதனை போட்டோஷாப்பில் எவ்வாறு இணைப்பது என்பதனை 
    அடுத்தபதிவில் பதிவிடுகின்றேன்.பயன்படுத்திப்பாருங்கள்.
    கருத்துக்களை கூறுங்கள்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    Saturday, February 12, 2011

    வேலன்-பில்லியர்ட்ஸ் விளையாடலாம் வாங்க.


    பணக்காரர்கள் தான் இந்த விளையாட்டை விளையாடவேண்டுமா என்ன? நாமும் செலவு இல்லாமல் இந்த விளையாட்டை நமது கம்யூட்டரில் விளையாடலாம். 5 எம.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
    இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். 
    இதில் நாமோ - உடன் நண்பர்களோ - அல்லது கம்யூட்டரோ யார்வேண்டுமோ நாம தேர்வு செயதுகொள்ளலாம். அதுபோலவே இசை மற்றும் ஒலி அளவினையும் அமைத்துக்கொள்ளலாம்.
    இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். நீங்கள் பந்தை உங்களுக்கான ஸ்டிக்கின் மூவினை கர்சர் மூலம் நகர்த்தி பந்தை அடிக்கவேண்டும். பந்து சரியாக விழவேண்டும்.இதலிலேயே உதவி பக்கம் உள்ளதால் உங்களுக்கு எளிதில் விளையாட்டு புரியும்.
    விளையாடிப்பாருங்கள். அருமையாக இருக்கும். கருத்துக்களை கூறுங்கள்.
    வாழ்கவளமுடன்.
    வேலன்.