
போட்டோஷாப்பில் இது வரை மார்க்யு டூல்
பற்றிஒன்பது பாடங்களும்,பத்தாவது பாடத்தில்
Image மற்றும் Duplicate பற்றி பார்த்தோம்.
அதுபோல் பதினோறாம் பாடத்தில்
மூவ் டூல் பற்றி பார்த்தோம்.
பன்னிரண்டாம் பாடத்தில் பென்டூல்
பற்றி பார்த்தோம்.இதுவரை பாடங்கள்
படிக்காதவர்கள்இங்கு சென்று பாடங்கள்
பார்த்துக்கொள்ளவும்.
பாடம்-1 (07.03.2009) (30)
பாடம்-5 (03.04.2009) (16)









பாடம்-8 (13.05.2009) (14)
பாடம்-12(23.06.09)
இதுவரையில் படித்த பாடத்தை
கொண்டு செய்முறை பாடம் ஒன்றை
இப்போது பார்க்கலாம்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
நான் கமல் - பிரபுவை
இதுவரை சந்தி்த்ததில்லை. ஆனால்
படம் எப்படி? அதுதான் போட்டோஷாப்.

இனி இதை எப்படி போட்டோஷாப்பில்
செய்யலாம் என் பார்க்கலாம்.
முதலில் நீங்கள் சேர்க்க விரும்பும் படங்கள்
இரண்டை தேர்வுசெய்துகொள்ளவும்.
நான் கீழே உள்ள இரண்டு படங்களை
பாருங்கள். முதலில் எனது படம்.

அதுபோல் கமலும் பிரபுவும் உள்ள வசூல்ராஜா
படம்.(இணையத்தில் எடுத்தது)

இப்போது இந்த படத்தின் Image கிளிக்
செய்து படத்தின் அளவை குறித்துக்கொள்ளுங்கள்.

இதே அளவிற்கு மற்றும்ஓரு படத்தையும்
மாற்றிக்கொள்ளுங்கள்.(இதைப்பற்றிய
விவரம் பத்தாவது பாடத்தில் உள்ளது)
இப்போது கமல் பிரபு உள்ள படத்தில்
கமலை பென்டூலால் சிறிய இடைவெளி
களில் கட் செய்யவும். முன் பாடத்தில்
சொல்லியபடி செய்து படத்தை மூவ் டூல்
மூலம் படத்தை மற்றும் ஓரு படத்திற்கு
கொண்டு வரவும்.

படம் சரியாக பொருத்த Transform Tool மூலம்
சரிசெய்யவும். மேலே உள்ள படத்தை பாருங்கள்.
இனி அடுத்து பிரபு படத்தை முன்பு சொன்னது
போல் பென்டூலால் கட் செய்து இதுபோல்
கொண்டு வரவும்.

படத்திற்கு சரியானபடி மூவ் டூல் மற்றும்
டிரன்ஸ்பார்ம் டூல் கொண்டு சரிசெய்யவும்.

உங்களுக்கு மேலே உள்ளவாறு படம் கிடைக்கும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது:-
தேர்ந்தெடுக்கும்படங்கள் இரண்டும் ஓரே
அளவு மற்றும் ரெசுலேஷன் அளவை கொண்டு
இருக்க வேண்டும். உங்களுக்கு
விருப்பமான படங்களை தேர்ந்தெடுங்கள்.
இதுபோல் முயற்சி செய்து பாருங்கள்.
பதிவு பிடித்திருந்தால் மறக்காமல்
ஓட்டுப்போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOES

மேலே உள்ளது போட்டோஷாப்பில் டிசைன்
செய்த போட்டோ..ஒரிஜினல் போட்டோ கீழே:-

இனிவரும் பாடங்களில் வெள்ளம் - மழை -
எப்படி வரவழைப்பது என பார்க்கலாம்.
சோக்கா கீதுபா !!!! இந்த மேட்டரு , அப்பிடியே நம்பல இந்த
ReplyDeleteரம்பா பொண்ணு கூட நிக்கறா
மேரி ஒரு போட்டா பண்ணி குத்தியானா, நம்ப குப்பத்துல போய் , சவுண்டு குட்து, தோ ,
பாருங்கடா !! நம்ப ரேஞ்சே வேற ( ? ) இன்னு கூவிக்குவேன் . வர்ட்டா ....
நன்றாக இருக்கு விளக்கம்.
ReplyDeleteமழை/வெள்ளம் டெக்னிக்காக காத்திருக்கேன்.
Dear Mr.Velan,
ReplyDeleteYou have done a great job. It is very useful training course.
Thanks a lot.
with best regards
Adirai Thanga Selvarajan
டவுசர் பாண்டி. கூறியது...
ReplyDeleteசோக்கா கீதுபா !!!! இந்த மேட்டரு , அப்பிடியே நம்பல இந்த
ரம்பா பொண்ணு கூட நிக்கறா
மேரி ஒரு போட்டா பண்ணி குத்தியானா, நம்ப குப்பத்துல போய் , சவுண்டு குட்து, தோ ,
பாருங்கடா !! நம்ப ரேஞ்சே வேற ( ? ) இன்னு கூவிக்குவேன் . வர்ட்டா .//
ரம்பா என்னப்பா நீ தேவலோகத்து ஊர்வசி படத்தையே அனுப்பு..நான் உன்படத்துடன் சேர்த்து அனுப்பி வைக்கின்றேன்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
வடுவூர் குமார் கூறியது...
ReplyDeleteநன்றாக இருக்கு விளக்கம்.
மழை/வெள்ளம் டெக்னிக்காக காத்திருக்கேன்//
வருகைக்கு நன்றி நண்பரே...தங்கள் தலைப்பாகை என்ன ஆயிற்று...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Thanga கூறியது...
ReplyDeleteDear Mr.Velan,
You have done a great job. It is very useful training course.
Thanks a lot.
with best regards
Adirai Thanga Selvarajan//
பதிவில் முதன்முறையாக வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Velan Sir,
ReplyDeleteசெய்முறை பாடம் its very nice and pictures also fine.
Keep it up.
Best Wishes
Muthu Kumar.N
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
ReplyDeleteVelan Sir,
செய்முறை பாடம் its very nice and pictures also fine.
Keep it up.
Best Wishes
Muthu Kumar.N//
தங்கள் கருத்துரையில்லாமல் பதிவு சிறப்பாக அமையவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஆஹா!கமல்சாரு கூடப் படம் புடிச்சுக்கிறதுக்கு ஆழ்வார்ப்பேட்டைக்கு எதுக்குப் போகணும்?
ReplyDeleteடவுசர் பாண்டி!இன்னாபா!நமக்குப் போட்டியா வர்ரா மாதிரி கீது!
ReplyDeletenan ungaludaiya photoshop padangalai paditthu varukiren..ennakku photoshop mattum thaniyaga vendum..........
ReplyDelete