
போட்டோஷாப்பில் இதுவரை 7 பாடங்கள் வரை
பார்த்துள்ளோம். இதுவரை பாடங்கள் படிக்கதவர
கள் இங்கு சென்று படித்துக்கொள்ளவும்.
சென்ற பாடம் 6-ல் மார்க்யு டூல் பற்றி பார்த்து
வந்தோம் . அதில் கடைசியாக Free Transform
Tool பார்த்து அதில் உள்ள Scale,Rotate,Skew,
Distort,Perspective வரை பார்த்துள்ளோம். இனி
அதில் அடுத்துள்ள Wrap பயன்பாடு பற்றி
பார்ப்போம்.மற்ற டூலை விட இதில்
என்ன விசேஷம்என்கிறீர்களா?
மற்ற டூல்கள் உங்களுக்கு
படத்தை ஒரளவுக்குதான் மற்றதில்
பொருத்த முடியும். ஆனால் இதில்
எந்த வகை படமானாலும் அதை நம்
விருப்பத்திற்கேற்றவாறு மாற்றிக்கொள்ள
முடியும்.தனியாக ஒருபடத்தை
நம் விருப்பத்திற்கு ஏற்ற வாறு
வடிவமைக்கலாம்.மேலும் இதில் ஒரு படத்துடன்
மற்றும்ஒரு படத்தை நாம் அழகாக இணைத்து
விடலாம். இனி அதை எப்படி உபயோகிப்பது
என பார்ப்போம்.

நீங்கள் ஒரு படத்தை தேர்வு செய்து அதில் மார்க்யு
டூலால் செல்க்ட் செய்தபின் முறையே ப்ரி டிரான்ஸ்
பார்ம் டூலால் தேர்வு செய்துவிட்டிர்கள் . அடுத்து அதில்
உள்ள wrap டூலை தேர்வு செய்யுங்கள்.
உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த படத்தை சுற்றி
9 கட்டங்கள் வருவதை காண்பிர்கள்.
அந்த கட்டங்களின் மைய புள்ளிகளை இழுப்பதுமூலம்
உருவங்கள் நமது விருப்பபடி மாறும்.
நான் இப்போது இரண்டு படங்களில் இந்த
டூலை உபயோகிப்பதை பற்றி பார்க்கலாம்.
ஒரு டீ கப்பில் அழகான படத்தை எப்படி கொண்டு
வருவது என பார்க்கலாம்.
முதலில் நான் டீ கப் தேர்வு செய்து கொண்டேன்.
அது போல் இதில் வரகூடிய படமாக மகாபலிபுரம்
படத்தை தேர்வு செய்துகொண்டேன்.

இதை அப்படியே இந்த டீ-கப்பின் மீது
பேஸ்ட் செய்து விடுங்கள். பின்னர் முன்னர்
செய்தவாறு Free Transform Tool-Wrap தேர்வு
செய்யுங்கள்.

உங்களுக்கு மேற்கண்டவாறு படம் கிடைக்கும்.
இதில் உள்ள சதுரங்களின் முனையை பிடித்து
மவுஸால் இழுக்க படம் நீங்கள் விரும்பியவாறு
நகரும். உயரம்-அகலம்-நீளம் என நீங்கள் விரும்பிய
வாறு இதை மாற்றி இழுத்துக்கொள்ளலாம்.
உங்களுக்கு வேண்டிய வடிவம் கிடைத்ததும்
நீங்கள் இழுப்பதை விட்டுவிட்டு Enter தட்டுங்கள்.
உங்களுக்கு இந்த மாதிரி அழகான படம் கிடைக்கும்.

இதைப்போல் நீங்கள் உங்கள் படத்தையும்
இவ்வாறு கொண்டு வரலாம்.

இந்த படத்தை பாருங்கள்.

அதுபோல் பாட்டிலிலும் நீங்கள் படத்தை கொண்டு
வரலாம்.
இந்த பாட்டிலில் படத்தை சேர்பதை பாருங்கள்.

படம் சேர்த்தபின் வருகின்ற படம்.

இதைப்போல் வாட்டர் கேனில் படம் வரவழைப்பது
பார்ப்போம்.
மாடல் படம்.

இரண்டையும் பொருத்தியபின்னர் வரும் படம்.

இறுதி வடிவம்.

இதைப்போல் காருக்குள் வீட்டை வரவழைக்க

JUST FOR JOLLY PHOTOS

நிறைய முறை முயற்சி செய்து பாருங்கள். பழக
பழகதான் படம் மெருகேரும்.
பாடத்தை படியுங்கள் .பிடித்திருந்தால் ஒட்டுப்
போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
போட்டோஷாப் பாடம் 8 இதுவரை
படித்தவர்கள்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
14 comments:
நன்றி வேலன் சார்.
பயனுள்ள பதிவு
பயனுள்ள பதிவுக்கு நன்றி!
Hi velan sir,
பயனுள்ள தகவல்கள்,நன்றி
உஙகள் பிரட்ச்சனைகளுக்கு மத்தியில்
பதிவுகளைத் தொடர்வதில் மகிழ்ச்சி
உங்களுக்காக நான் ஆண்டவனைப் பிராத்திக்கிறேன்
போட்டாசாப்-ல் நிறைய பயனுள்ள விசயங்களை தெளிவாக விளக்கியுள்ளீர்கள். மேலும் தகவல்கள் நிறைய தர வாழ்த்துகள். நன்றி வேலன்
ஜுர்கேன் க்ருகேர்..... கூறியது...
நன்றி வேலன் சார்.//
நன்றி ஜுர்கேன் க்ருகேர் அவர்களே...
உங்களை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை...
வாழ்க வளமுடன்,
வேலன்.
நெல்லைத்தமிழ் கூறியது...
பயனுள்ள பதிவு//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
குடந்தைஅன்புமணி கூறியது...
பயனுள்ள பதிவுக்கு நன்றி!//
நன்றி அன்புமணி அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Hi velan sir,
பயனுள்ள தகவல்கள்,நன்றி
உஙகள் பிரட்ச்சனைகளுக்கு மத்தியில்
பதிவுகளைத் தொடர்வதில் மகிழ்ச்சி
உங்களுக்காக நான் ஆண்டவனைப் பிராத்திக்கிறேன்//
தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
அதிரை அபூபக்கர் கூறியது...
போட்டாசாப்-ல் நிறைய பயனுள்ள விசயங்களை தெளிவாக விளக்கியுள்ளீர்கள். மேலும் தகவல்கள் நிறைய தர வாழ்த்துகள். நன்றி வேலன்//
நன்றி நண்பர் அதிரை அபூபக்கர் அவர்களே..
வாழ்க வளமுடன்,
வேலன்.
இப்படி செய்யமுடியும் என்பதை இப்போது தான் முதல்முறையாக காணுகிறேன்.மிக்க நன்றி.
வெள்ளையனை(Background)விட்டு விட்டு மகாபலிபுரம் மட்டும் எப்படி தனியா வருது?விளக்கவும்.நன்றி.
(நேற்று ஒரு மயில் கட்டடத்தை விட்டு நகரேவே மாட்டென்னுடுச்சு.வந்தா கொஞ்சம் கட்டடத்தையும் கூடவே கூட்டிகிட்டுத்தான் வருவேன்னுடுச்சு:))
வடுவூர் குமார் கூறியது...
இப்படி செய்யமுடியும் என்பதை இப்போது தான் முதல்முறையாக காணுகிறேன்.மிக்க நன்றி.\\
இது மட்டுமல்ல நண்பரே...இன்னும் அதிகம் உள்ளது. போட்டோஷாப் என்பது கடல்...இன்னும் போக போக அதிகம் தெரிந்து கொள்வீர்கள்.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
ராஜ நடராஜன் கூறியது...
வெள்ளையனை(Background)விட்டு விட்டு மகாபலிபுரம் மட்டும் எப்படி தனியா வருது?விளக்கவும்.நன்றி.
(நேற்று ஒரு மயில் கட்டடத்தை விட்டு நகரேவே மாட்டென்னுடுச்சு.வந்தா கொஞ்சம் கட்டடத்தையும் கூடவே கூட்டிகிட்டுத்தான் வருவேன்னுடுச்சு:))//
போட்டோஷாப்பில் உள்ள 17 வது டூலான பென் டூல் பயன் படுத்தி அதனை வரவழைக்கலாம் நண்பரே...வரும் பாடங்களில் பென் டூல் பற்றி வரும்.வரிசையாக டூல்களை பற்றி பாடம் எடுத்து வருவதனால் திடீர் என்று 17 வது டூலுக்கு ஜம்ப் பண்ணால் புதியவர்களுக்கு அதனால் குழப்பம் வரும் என்பதனால் அதனை குறிப்பிடவில்லை.தங்கள் முயற்சியை பாராட்டுகின்றேன்.வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்,
வேலன்.
Post a Comment