வேலன்:-போட்டோஷாப் பாடம்-15(Foreground Colour & Backround Colour Tool )

Foreground Colour & Backround Colour Tool









பாடம்-5 (03.04.2009) (16)



பாடம்-8 (13.05.2009) (14)

பாடம்-9 (29.05.09) (6)

பாடம்-10(04.06.2009) (10)

பாடம்-11 (13.06.2009)

பாடம்-12 (26.06.2009)

பாடம்-13 (04.07.2009)

பாடம்-14 (12.07.2009)

இன்று போட்டோஷாப்பில்

Foreground colour & Backroundcolour

பற்றி பார்ப்போம். இது டூல் வரிசையில்

23 டூலாக உள்ளது. கீழே படத்தை பாருங்கள்.

இது Foreground Colour -ஐ தேர்ந்தேடுக்க

நீங்கள் கர்சரை இங்கு கொண்டுசென்றாலே

உங்களுக்கு எளிதாக விளங்கும்.
அதைப்போலவே Backround Colour . கட்டத்தின்

பின்புறம் உள்ள கலர். படத்தை பாருங்கள்.



இதில் உள்ள சிறிய வளைந்த அம்புக்குறியை

பாருங்கள். அதை நீங்கள் கிளிக் செய்ய

முதலில் கட்டத்தில் உள்ள கலர் பின்புறமும்

பின்புறம் உள்ள கலர் முன்புறமும் மாறுவதை

காணலாம். பொதுவாக வெள்ளை-கருப்பு

கலரே அதில் காணப்படும் . நீங்கள் விரும்பினால்

கலரை அதில் மாற்றிக்கொள்ளலாம்.இதில்

கலரை எப்படி மாற்றுவது என பார்க்கலாம்.

முதலில் உள்ள வெள்ளைகலர் கட்டத்தில்

நடுவில் கர்சரைவைத்து கிளிக் செய்யவும்.

உங்களுக்கு கீழ்கண்ட கலர் பிக்கர் கிடைக்கும்.


இதில் கலரின் நடுவே கர்சரை கொண்டு சென்றால்

உங்கள் கர்சர் ஆனது வட்டமாக மாறி விடும்.

இதில் வேண்டிய கலரை நீங்கள் தேர்வு

செய்யலாம். அல்லது கலர் பெட்டியின் பக்கத்தில்

உள்ள் நீளமான கட்டத்தில் பாருங்கள்.

உங்களுக்கு ஸ்லைடர் கீழே இருக்கும். அதை

கர்சர் மூலம் மெதுவாக மேலே நகர்த்தினால்

கட்டத்தில் கலர்கள்-நிறங்கள் மாறுவதை

காணலாம். வேண்டிய நிறத்தை தேர்வு

செய்ததும் ஓகே கொடுங்கள். நான் Foreground

colour ஆக மஞ்சள் நிறத்தை தேர்வு செய்துள்ளேன்.

அடுத்து Backround Colour .

இதிலும் முன் சொன்ன மாதிரி செய்யும்போது

உங்களுக்கு இந்த மாதிரி படம் கிடைக்கும்.

வேண்டிய கலர் தேர்வு செய்யவும். நான்

நீலக்கலர் தேர்வு செய்துள்ளேன். பின் ஓகே

கொடுக்கவும்.


இப்போது நாம் Foreground Colour & Backround Colour தேர்ந்து

எடுத்துவிட்டோம். இப்போது கட்டமானது உங்களுக்கு

இந்த மாதிரி மாறிவிடும்.


சரி இப்போது இந்த டூல் பயன்படுத்துவது எவ்வாறு?

நீங்கள் புதிய விண்டோ ஒன்று ஓப்பன் செய்து

கொள்ளுங்கள்.(பைல் மெனு சென்று நியு கிளிக்

செய்து ஒகே கொடுங்கள்) அல்லது Ctrl+N தட்டச்சு

செய்து Enter தட்டுங்கள்.புதிய விண்டோ ஓப்பன்

ஆகி இருக்கும்.

அடுத்து Shift +F5 அழுத்துங்கள். உங்களுக்கு

இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் Foreground Colour தேர்வு செய்து Ok

கொடுங்கள். உங்கள் விண்டோ வானது நீங்கள்

தேர்வு செய்த கலரால் நிரம்பி இருப்பதை காணலாம்.

இதைப்போலவே மீண்டும் பெற முன்பு செய்த

படி செய்யவும்.


இதில் Background Color தேர்வு செய்து ஓகெ கொடுங்கள்.

நீங்கள் திறந்து புதிய விண்டோ கலரால் நிரம்பி

இருப்பதை காண்பீர்கள். நான் தேர்வு செய்த

கட்டங்களின் படங்கள் கீழே...


சரி இந்த Foreground Colour டூலால் என்ன நன்மை. இனிவரும்

பாடங்களில் பார்க்கலாம். ஏற்கனவே பென்

டூலால் நாம் படத்தை கட் செய்வதை பார்த்தோம்.

அந்த படத்தின் பின்புறம் கலர் கொண்டு வர

Backround Colour பயன்படும்.

உதாரணத்திற்கு இந்த படம் வெள்ளை நிற

பிண்ணனியில் எடுத்துள்ளேன். படம் கீழே:-



பின்புறம் கலர் சேர்த்து மாற்றிய படம் கீழே:-


பதிவுகளை பாருங்கள். பலமுறை முயற்சி

செய்து பாருங்கள். பிடித்திருந்தால் ஓட்டுப்

போடுங்கள்.பதிவின் நீளம் கருதி பாடத்தை

இத்துடன் முடிக்கின்றேன்.


வாழ்க வளமுடன்,

வேலன்.

படத்தின் கலரை இதுவரை மாற்றி பார்த்தவர்கள்:-

web counter



Just For Jolly Photoes


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

10 comments:

யூர்கன் க்ருகியர் said...

நான் யாருன்னு தெரியுமா ? என் பேக்கிரவுண்டு என்னன்னு தெரியுமா என்று சவடால் விடுபர்களுக்கு இத பத்தி சொல்லணும்.

பாடம் நன்றாக இருக்கிறது வேலன் சார். நன்றி

Muthu Kumar N said...

வேலன் சார்,

பதிவு அருமையாக உள்ளது. எனக்கு நீச்சல் தெரியாது எப்படி உங்கள் தாஜ்மாஹாலுக்கு செல்வது என்று தெரியவில்லை போட்டிங் சர்வீஸ் ஏதாவது உள்ளதா....

வளர்க உங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

வேலன். said...

யூர்கன் க்ருகியர்..... கூறியது...
நான் யாருன்னு தெரியுமா ? என் பேக்கிரவுண்டு என்னன்னு தெரியுமா என்று சவடால் விடுபர்களுக்கு இத பத்தி சொல்லணும்.

பாடம் நன்றாக இருக்கிறது வேலன் சார். நன்றி//

ஏற்கனவே படத்தில் உள்ளவர் பயந்தமாதிரி போஸ் கொடுக்கின்றார். நீங்க வேறே பேக்கிரவுண்டு என்னன்னு தெரியுமான்னு சவால் விடுகின்றீர்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

பதிவு அருமையாக உள்ளது. எனக்கு நீச்சல் தெரியாது எப்படி உங்கள் தாஜ்மாஹாலுக்கு செல்வது என்று தெரியவில்லை போட்டிங் சர்வீஸ் ஏதாவது உள்ளதா....

வளர்க உங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

நீங்கள் வாருங்கள். போட்டிங் சர்வீஸ் ஏற்பாடு செய்துவிடலாம்.

வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

வடுவூர் குமார் said...

தாஜ்மாகலையே பழனிக்கு கொண்டுவந்திட்டீங்களே!!

வேலன். said...

வடுவூர் குமார் கூறியது...
தாஜ்மாகலையே பழனிக்கு கொண்டுவந்திட்டீங்களே!//

நண்பரே...கண்ணாடியை கழட்டியபின் பாருங்கள். அது பழனி அல்ல...திருக்கழுக்குன்றம் மலைக்கோயில்....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்.
வேலன்.

God of Kings said...

Mazhai Vellam innum varavillai. Ungaludiya padangal enaku payanullathaga ullathu. Nandri

வேலன். said...

God of Kings கூறியது...
Mazhai Vellam innum varavillai. Ungaludiya padangal enaku payanullathaga ullathu. Nandri//

நன்றி நண்பரே...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

kumar said...

வணக்கம் வேலன் சார்..
போட்டோ ஷொப் பாடம் மிகவும் அருமை எளிமையன விளக்கம் சார்
முயர்ச்சி தொடர எனது வாழ்த்துக்கள்....
சார் ஒரு வேண்டுகோள்!
அடுத்த பாடமாக வெப் டெஸிக்ன் தொடங்குவீர்கள?

kumar said...

வணக்கம் வேலன் சார்..
போட்டோ ஷொப் பாடம் மிகவும் அருமை எளிமையன விளக்கம் சார்
முயர்ச்சி தொடர எனது வாழ்த்துக்கள்....
சார் ஒரு வேண்டுகோள்!
அடுத்த பாடமாக WEB DESIGN(WEB LANGUAGE) தொடங்குவீர்கள?
bala_ud at hotmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...