
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" நண்பர்










பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
ஒருவர் காலையில் போனில் பேசும்போது
இந்த பழமொழியை சொன்னார். நமது முகத்தை
போட்டோஷாப் மூலம் மெருகேற்றுவது எப்படி
என பார்க்கலாம். திருமணத்திற்கு பெண்ணோ -
மாப்பிள்ளையோ பார்ப்பதற்கு முன் போட்டோ
கொடுப்பார்கள்.. நமது போட்டோவை இந்த
சாப்ட்வேர் மூலம்மெருகேற்றிக்கொடுத்தால்
வரும் வரன் நிச்சயம்அமையும்.
(இந்த பதிவு எழுதுவது திருமணம்
ஆகாதவர்களுக்குமட்டுமே-திருமணம் ஆனவர்
கள் குழந்தைகளின் போட்டாக்களில் இதை
முயற்சிக்கலாம்). இந்த சாப்ட்வேரில்
நமது புகைப்படத்தை கொடுத்தால் நமது
முகத்தில் உள்ள சிறு சிறு பள்ளங்களை
நிரப்பி முகத்தை பாலிஷ் செய்து கொடுத்து
விடும். பின் இந்த படத்தை தைரியமாக
வரன் தேட கொடுக்கலாம்.(பெண் வீட்டிலும்
தருகின்ற போட்டோவை பார்த்து அடடா
பெண் எவ்வளவு அழகு என வியந்துவிடாதீர்
கள். அவர்களும் இந்த சாப்ட்வேரை உபயோகித்து
அவர்களை அழகாக மாற்றி உங்களுக்கு
போட்டோவை கொடுத்து அனுப்பி
யிருக்கலாம்.எனவே திருமணத்திற்கு
முன் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்து
முடிவு செய்யவும்).போட்டோஷாப்பில்
இதற்கென தனியே பில்டர் உள்ளது.
ஆனால் அதை போட்டோஷாப் மூலமே
உபயோகப்படுத்த முடியும்.(தங்களுக்கு
போட்டோஷாப் பாடங்கள் தொடர்ந்து
வரும் சமயம் இதை விரிவாக காணலாம்)
ஆனால் இந்த சாப்ட்வேரைபோட்டோஷாப்
உதவியில்லாமல்தனியே யார்வேண்டுமானாலும்
பயன்படுத்தலாம். முதலில் இந்த
செய்து கொள்ளவும். (இதுவும் 2.5 எம்.பி. அளவுதான்)
பின்னர் இதை ஓப்பன் செய்யவும்.
பின்னர் பைல் சென்று ஓப்பன்
செய்து நீங்கள் மாற்ற விரும்பும் படத்தை
தேர்வு செய்யவும்.
இதில் வலது புறம் பார்த்தால் உங்களுக்கு கீழ்
கண்ட விண்டோ தென்படும்.

இந்த விண்டோ உங்களுக்கு வரவில்லை
யென்றால் நீங்கள் வியு சென்று Noise Filter
எதிரே கிளிக் செய்யவும்.
இதில் உள்ள Noise Level Adjustment
மற்றும் Noise Subression
படத்தின் மேடு பள்ளத்திற்கு ஏற்ப
வேண்டிய அளவு வைத்துக்கொள்ளவும்.
அடுத்து Filter-Process-கிளிக்
செய்யவும். அல்லது Ctrl+Enter
தட்டவும்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

ஓகே கிளிக் செய்யவும். உங்களது படம் ரெடி.

இதை வேண்டிய இடத்தில் Save As செய்யவும்.
உங்கள் படம் ரெடி.
நான் மாற்றம் செய்த படங்களின் மாடலகள் கீழே..
சாப்ட்வேர் உபயோகிக்கும் முன்:-
உபயோகித்த பின்னர் படம் கீழே:-

உபயோகிக்கும் முன்:-

உபயோகித்த பின்:-

உபயோகி்க்கும் முன்:-
உபயோகித்த பின்:-

பதிவின் நீளம் கருதி பாடத்தை இத்துடன்
முடித்துக்கொள்கின்றேன்.
பதிவை பாருங்கள். பிடித்திருந்தால்
மறக்காமல் ஓட்டுப்போடுஙகள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பின்குறிப்பு:- மிக குறுகிய
காலத்திற்குள் என்னை இந்த வார நட்சத்திர
பதிவராக தேர்வு செய்த திரட்டி.காம்
அவர்களுக்கு எனது நன்றி.
நட்சத்திர பதிவராக ஆனதால் இந்த வாரம்
முழுவதும் தினம் ஒரு பதிவை நான் பதிவிடுகின்றேன்.
தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டி
அன்புடன்,
க.வேலன்.
இதுவரையில் தனது முகத்தை அழகுப்படுத்தி
19 comments:
Thanks you dear velan sir
வாழ்த்துக்கள் வேலன் சார்!
சோக்கா , கீது நைனா , இந்த சாப்புட்டு வேர் , எனுக்கு மின்ன வோணும் போல கீதே? பேசாத,
எங்க மினிமா மேலியே, இந்த சாப்புட்டு வேரே, எழ்திடப் போறேன், அப்பால, எப்பியிமே
எங்க மினிமா , சொம்மா தக்காளி பயமாட்டம் இருக்கும் பா, சோக்கு , தான் சேக்கு டான்சு தான், அப்பால உன்ன இஸ்டரா ஆக்கிட்டாங்கலாமே, வாய்த்துக்கள்.
Great Sir.
நல்ல தகலுடன் செய்முறை விளக்கமும் நன்றாக இருக்கிறது. தொடருங்கள். தொடர்வோம்.
அப்புறம்... திரட்டி நட்சத்திர பதிவராக தேர்நதெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்துகள்.
என்னை பொறுத்தவரை நீங்க ஏற்கனவே பதிவுலகின் "ஆல் டைம் ஸ்டார்" ,,
மனதில் மகிழ்ச்சியோடு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
சும்மா பதிவுலகில் கலக்குறீங்க சாரி மின்னுறீங்க சார் !!
//இந்த சாப்ட்வேரில்
நமது புகைப்படத்தை கொடுத்தால் நமதுமுகத்தில் உள்ள சிறு சிறு பள்ளங்களை நிரப்பி முகத்தை பாலிஷ் செய்து கொடுத்து விடும்.//
சார் உங்களுக்கு ஒரு சவால் ...
காதல் படத்தில் சந்தியாவின் அப்பாவாக ஒருத்தர் வருவாரே...முடிந்தா அவர் படத்த மாத்தி காட்டுங்க . பார்க்கலாம் !!!!!!
பயனுள்ள செய்தி. நன்றி திரு.வேலன். போடோஷோப் தொடர்பான செய்திகளை தொடர்ந்து எதிர் பார்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட சாப்ட்வேர் ஐ போலவே , grain surgery, neat image, noiceninja... போன்ற சாப்ட்வேர்களை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
வேலன் சார்,
பண்பட்ட பதிவு புண்பட்ட தோலை கண்படாது காணாது செய்யும் கலையை தெளிவாய் விளக்கத்துடன் விரிவாய் உங்களுக்கே உரித்தான முறையில் உங்கள் பதிவு அற்புதமாய் இருக்கிறது.
வளர்க உங்கள் பணி, என்றும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
தமிழ்நெஞ்சம் கூறியது...
Thanks you dear velan sir//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தமிழ்நெஞ்சம் சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
தமிழ் பிரியன் கூறியது...
வாழ்த்துக்கள் வேலன் சார்//
வாழ்த்துக்கு நன்றி தமிழ் பிரியன் சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
டவுசர் பாண்டி. கூறியது...
சோக்கா , கீது நைனா , இந்த சாப்புட்டு வேர் , எனுக்கு மின்ன வோணும் போல கீதே? பேசாத,
எங்க மினிமா மேலியே, இந்த சாப்புட்டு வேரே, எழ்திடப் போறேன், அப்பால, எப்பியிமே
எங்க மினிமா , சொம்மா தக்காளி பயமாட்டம் இருக்கும் பா, சோக்கு , தான் சேக்கு டான்சு தான், அப்பால உன்ன இஸ்டரா ஆக்கிட்டாங்கலாமே, வாய்த்துக்கள்.//
நன்றி நண்பரே...தங்கள் பாஷைபற்றி
நண்பர் பதிவிட்டுள்ளார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
யூர்கன் க்ருகியர்..... கூறியது...
Great Sir//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்
குடந்தை அன்புமணி கூறியது...
நல்ல தகலுடன் செய்முறை விளக்கமும் நன்றாக இருக்கிறது. தொடருங்கள். தொடர்வோம்.
அப்புறம்... திரட்டி நட்சத்திர பதிவராக தேர்நதெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்துகள்//
வாழ்த்தியமைக்கும் வருகைக்கும் நன்றி
அன்புமணி அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
யூர்கன் க்ருகியர்..... கூறியது...
என்னை பொறுத்தவரை நீங்க ஏற்கனவே பதிவுலகின் "ஆல் டைம் ஸ்டார்" ,,
மனதில் மகிழ்ச்சியோடு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
சும்மா பதிவுலகில் கலக்குறீங்க சாரி மின்னுறீங்க சார் !//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.
யூர்கன் க்ருகியர்..... கூறியது...
//இந்த சாப்ட்வேரில்
நமது புகைப்படத்தை கொடுத்தால் நமதுமுகத்தில் உள்ள சிறு சிறு பள்ளங்களை நிரப்பி முகத்தை பாலிஷ் செய்து கொடுத்து விடும்.//
சார் உங்களுக்கு ஒரு சவால் ...
காதல் படத்தில் சந்தியாவின் அப்பாவாக ஒருத்தர் வருவாரே...முடிந்தா அவர் படத்த மாத்தி காட்டுங்க . பார்க்கலாம் !!!!!!//
அவர் புகைப்படம் இருந்தால் அனுப்பி வையுங்கள். முயற்சி செய்து பார்க்கலாம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
velu66 கூறியது...
பயனுள்ள செய்தி. நன்றி திரு.வேலன். போடோஷோப் தொடர்பான செய்திகளை தொடர்ந்து எதிர் பார்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட சாப்ட்வேர் ஐ போலவே , grain surgery, neat image, noiceninja... போன்ற சாப்ட்வேர்களை நாங்கள் பயன்படுத்துகிறோம்//
நீங்கள் கொடுத்த தகவலுக்கு நன்றி..போட்டோஷாப் பற்றி பிற தகவல்கள் இருப்பினும் குறிப்பிடுங்கள்.மக்களுக்கு தெரிவிக்கலாம்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,
பண்பட்ட பதிவு புண்பட்ட தோலை கண்படாது காணாது செய்யும் கலையை தெளிவாய் விளக்கத்துடன் விரிவாய் உங்களுக்கே உரித்தான முறையில் உங்கள் பதிவு அற்புதமாய் இருக்கிறது.
வளர்க உங்கள் பணி, என்றும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//
நண்பரே ..தமிழில் சும்மா வெளுத்து கட்டுகின்றீர்கள்.
பண்பட்ட பதிவு புண்பட்ட தோலை கண்படாது காணாது செய்யும் கலையை...
சூப்பர் வரிகள்...
வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி நண்பரே...
நட்சத்திர பதிவராக என்னை தேர்ந்தேடுத்திருக்கின்றார்கள். தினம் ஒரு பதிவு இந்த வாரம் வெளியிட யிருக்கின்றேன். தவறாமல் வந்து விடுங்கள்.
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.
velan sir you are great. it is very nice and interesting. how do i download all your photoshop lessons as pdf?
Post a Comment