வேலன்:-புகைப்படத்தின் தரம் குறையாமல் அளவினை மாற்ற - வாட்டர் மார்க் கொண்டுவர -வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட

புகைப்படங்களை மொத்தமாக கொள்ளளவை குறைத்திடவும். வேண்டிய அளவிற்கு மாற்றிடவும்;.விரும்பிய பார்மெட்டுக்கு கொண்டுவரவும். வாட்டார் மார்க்காக எழுத்துரு மற்றும் புகைப்படங்கள் கொண்டுவரவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக ;செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் முதலில் உள்ள வட்டத்தில் டிராக் அன்ட் டிராப் முறையிலோ அடுத்துள்ள வட்டத்தில் ;கிளிக் செய்து உங்கள் போல்டரில் உள்ள புகைப்படங்களையோ தேர்வு செய்திடலாம்.
 இதில் நீள அகலங்களை பிக்ஸல் அளவில் குறிப்பிட்டு அதனை  புகைப்படங்களில் கொண்டுவரலாம்.புகைப்படத்தினை JPG.PNG.TIF.GIF.BMP
போன்ற பார்மெட்டுக்களில் மாற்றிக்கொள்ளலாம். மேலும் புகைப்படத்தினை வேண்டி கோணத்திலும் லேண்ட்ஸ்கேப் மற்றும் போர்ட்டியாட்டிலும் மாற்றிக்கொள்ளலாம்.புகைப்படத்தினை கிரே கலர் மற்றும் சோபியா நிறத்தில் கொண்டுவரலாம். புகைப்படத்தில் தேவையில்லாத பகுதியை நீக்க விரும்பினால் இதன் நான்கு புறமும் கொடுத்துள்ள அளவினை கொண்டு புகைப்படத்தினை கிராப் செய்துவிடலாம். மாற்றங்கள் செய்யும் புகைப்படங்களை ப்ரிவியுவிலும் நாம் காணலாம்.
 புகைப்படத்தின் நடுவில் உள்ள வட்டத்தினை கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கு மேலே உள்ள விண்டோ தோன்றும். அதில் வாட்டர் மார்க்காக நாம் எழுத:துருக்களையோ அல்லது புகைப்படங்களையோ கொண்டுவரலாம். இதில் உள்ள டிரான்பரன்ஸியை நகர்த்துவது மூலம் வாட்டர்மார்க்கினை அட்ஜஸ்ட்  செய்திடலாம்.

ஒரு போல்டரில் உள்ள புகைப்படங்களை மொத்தமாகவும் புகைப்படத்தின் அழகினை குறைக்காமல் அளவினை குறைத்திடவும் இந்த சாப்ட்வேர்பயன்படுகின்றது. வாட்டர் மார்க் புகைப்படத்தில் கொண்டுவருவது மூலம் மற்றவர்கள் நமது புகைப்படத்தினை பயன்படுத்தாமல் தடுத்திடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...