வேலன்:-வீடியோ,ஆடியோ.புகைப்படங்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாத்திட

நம்மிடம் உள்ள ஆடியோ.வீடியோ.புகைப்படங்களை மற்றவர்கள் பார்வையிடாமல் இருக்க கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்கலாம். மற்றவர்கள்நமது புகைப்படங்களையோ.வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை திறக்கும் சமயம் அவர்களிடம் பாஸ்வேர்ட் கேட்கும். சரியான பாஸ்வேர்ட் கொடுத்தால் தான் பைல்திறக்கும். 13 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வீடியோ. ஆடியோ. புகைப்படம் என டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.தேவையானதை தேர்வு செய்திடவும். கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்.
தேவையான பைலினை தேர்வு செய்திடவும். தேர்வு செய்தபின்னர் ப்ரிவியூ பார்க்கும் வசதியும் உள்ளது.
நமது பைலினை எந்த பாரமேட்டுக்கு தேவையோ அதனை தேர்வு செய்திடவும்.

பாஸ்வேர்ட் கட்டத்தினில் தேவையான கடவுச்சொல்லினை இருமுறை தட்டச்சு செய்திடவும்.
    உங்களுடைய பைலானது பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கப்பட்ட பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது நீங்கள் உங்களுடைய பைலினை திறக்க முற்படுகையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.


சரியான பாஸ்வேர்ட் கொடுத்தால்தான் உங்களுக்கான வீடியோ.ஆடியோ.புகைப்பட பைல்கள் திறக்கும்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட

புகைப்படங்களில்'வேண்டிய மாற்றங்கள்செய்திடவும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 160 எம்.பி. கொளளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும். இந்த இணையதளம் சென்று பதிவிறக்கம்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் 60 வகையான பார்மெட்டுக்கள் கொடுத்துள்ளார்கள்.அந்தந்த பார்மெட்டுக்கு ஏற்ப ஐகான் கொடுத்துள்ளார்கள். நீங்கள் எந்த பார்மெட் வேண்டுமோ அந்த பார்மெட்டின் ஐகானை கிளிக் செய்திடவும். பின்னர் சேவ் கிளிக் செய்யவும்.
நீங்கள் மாற்றங்கள் செய்து சேமிக்க விரும்பும் பைல்கள் அந்த போல்டரிலோ அல்லது தனியாக போல்டரிலோ சேமிக்க விரும்புவதை தேர்வு செய்யவும் கீழே உள்ள விண்டொவில் பாருங்கள்.
 மாற்றங்கள் செய்வதற்கு முன்னர் நீங்கள்புகைப்படங்களில் ஏதேனும் திருத்தங்கள் செய்யவேண்டும் என்றால் கிளிக் செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதிலிருந்து நேரடியாக பிரிண்ட் செய்திடவும் வசதி செய்து கொடுத்துள்ளார்கள்.
 அனைத்து பணிகளும் முடிந்ததும் இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை ;கிளிக்செய்திடவும்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் புகைப்படமானது நீங்கள் விரும்பிய பார்மெட்டில் நீங்கள் சேமித்த இடத்தில்இருந்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இலவச வீடியோ கன்வர்டர்.

சில வீடியோக்களை நாம் உபயோகப்படுத்தும் டிவைஸ்க்கு ஏற்ப பயன்படுத்த இயலாது. நமது தேவைக்கு ஏற்ப வீடியோவினை நமது விருப்பமான பார்மெட்டில் கொண்டு வர இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.  இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை  இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நம்மிடம் உள்ள வீடியோவினை தேர்வு செய்யவும்.
சேமிக்க விரும்பும் இடத்தினையும் எந்த பார்மெட்டுக்கு நாம் மாற்ற வேண்டுமோ அந்த பார்மெட்டினையும் தேர்வு செய்யவும்.
கன்வரட் என்ப்தனையும் கிளிக் செய்யவும். சில நிமிடங்கள் காத்திருக்கவும்.
நமக்கு விருப்பமான வீடியோ நாம் விரும்பிய பார்மெட்டில் கிடைக்கும். இதுபோல விருப்பமான வீடியோக்களை விரும்பிய பார்மெட்டில் நாம் சுலபமாக மாற்றிக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...