வேலன்:-பிடிஎப் எரேசர் -PDF ERASER

பிடிஎப் பைல்களை நாம் பயன்படுத்துகையில் அதில் உள்ள புகைப்படங்களை எளிதில் நீக்கவும்.சேர்க்கவும். வார்த்தைகளை சேர்க்கவும் நீக்கவும். பிடிஎப் பக்கங்களை எடிட் செய்திடவும்.இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உ ங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நாம் புகைப்படங்களை நீக்க சேர்கக விரும்பும் பிடிஎப் பைலினை தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும்.
இதில் மேற்புறம் நிறைய டேப்புகள் கொடுத்திருப்பார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் பிடிஎப் பைல்களை எடிட் செய்திட,பக்கங்களை வேண்டிய அளவுகளில்திருப்பிட.புகைப்படங்களை நீக்க சேர்கக.வார்த்தைகளை சேர்க்க நீக்க என நிறைய டேப்புகள் கொடுத்துள்ளார்கள். இதில் உள்ள எடிட் கிளிக் செய்திட தனியே ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் நீக்க வேண்டிய பக்கத்தினை தேர்வு செய்து பின்னர் சேவ் கொடுத்தால் பிடி எப் பைலானது பக்கங்களை நீக்கியபின் உங்களுக்கு கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

ஒரு பக்கத்தில் உள்ள புகைப்படத்தினை நீக்கப்பட்ட பின் வந்துள்ள பக்கத்தினை பாருங்கள்.
இதுபோல உங்கள் விருப்பமான செய்கைகளை உங்கள் பிடிஎப் பைலில் நீங்கள் செய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்
வேலன். 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-மெக்கானிக்கல் கால்குலேட்டர்.

மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து பிரிவினருக்கும் தேவையான கால்குலேட்டராக இந்த மெக்கானிக்கல் கால்குலேட்டர் உள்ளது. 4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதன் மேல்புறம் உள்ள டேப்பில் File.Edit.Machning.Precision.Math.Conversions.Views .Tools என நிறைய வசதிகளை உள்ளடக்கிய டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.இதில் உள்ள மெஷினிங் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்திட மெஷின் எடுத்துக்கொள்ளும் நேரத்தினை துல்லியமாக கணக்கிடலாம். 
 அதுபோல அடுத்துள்ள மேக்ஸ் டேபிளை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் கொடுத்துள்ள நமக்கு தேவையான ஆப்ஷனை கிளிக் செய்து வேண்டிய விவரங்கள் பெறலாம்.
 இதில் உள்ள கன்வர்சன் டேபிளை கிளிக் செய்திட நேரம் முதல் கொண்டு நீள அகலங்கள். ஸ்பீடு.டெட்டா ஸ்டோரேஜ்.பவர்.ப்ரஷர்.என அனைத்தினையும் நாம் கணக்கிடலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
எண்களை ரோமன் லெட்டரில் மாற்றுவதற்க்கு நமக்கு குறிப்பிட்ட வரையில் தான் தெரியும் இதில் எந்த எண்ணிலிருந்து எந்த எண்வரை ரோமன் லெட்டர் வேண்டுமோ அந்த எண்களை எிளிதில் அறிந்துகொள்ளலாம்.ஒரு மீட்டர் அளிவிற்கான கிலோமீட்டர் முதற்கொண்டு அறிய கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
 நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப்பொருட்கள் குதிரைத்திறனில் கொடுத்திருப்பார்கள். அது எவ்வளவு மின்சாரத்தினை எடுத்துக்கொள்ளும என இதில் கன்வர்ட் செய்து அறிந்துகொள்ளலாம். கீழே உள் விண்டோவில் பாருங்கள்.
வாழ்க்கையில் ஏதாவது ஒரு நேரத்தில் ஏதாவது ஒரு கண்க்கு  நமக்கு தேவைப்படும். குறைந்த அளவிலேயே இது இடம் எடுத்துக்கொள்வதால் உங்கள் கணிணியில் ஏதாவது ஒரு டிரைவில் போட்டுவையுங்கள.அவசரத்திற்கு பயன்படும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இணைய புகைப்படங்களை மொத்தமாக பதிவிறக்கம் செய்திட

இணையத்தில் புகைப்படங்களை பார்க்கும் சமயம் பதிவிறக்கம் செய்யவிரும்புவோம். ஒரே பொருளின் விதவிதமான புகைப்படங்கள் நமக்கு தேவைப்படும்.அதை ஒவ்வொன்றாக தேர்வு செய்து அதனை ஒவ்வொன்றாக பதிவிறக்கம் செய்யவேண்டும். அவ்வாறு சிரமப்படாமல் அனைத்து படங்களையும் ஒரே கிளிக்கில் பதிவிறக்கம் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நாம் விரும்பும் படத்தின் யூஆர்எல் முகவரியை தேர்வு செய்து இதில் பேஸ்ட் செய்யவும்.நீங்கள் தேர்வு செய்த முகவரியில் உள்ள அனைத்து படங்களும் உங்களுக்கு ப்ரிவியூவாக தெரியும். கோடைக்காலம் ஆனதால் இங்கு ஐஸ்கிரீம்களின் புகைப்படங்களை தேர்வு செய்துள்ளேன்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள Configuration கிளிக் செய்திட நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான செட்டிங்ஸ் நாம் விருப்பம்போல அமைத்துக்கொள்ளலாம்.
நாம் யூஆர்எல் தேர்வு செய்ததும் உங்கள் புகைப்படங்கள் எண்ணிக்கை தெரியவரும்.இதில மொத்த புகைப்படங்கள் தெரியவரும். இதில் ஒவவொரு புகைபடங்களும் நமக்கு டவுண்லோடு ஆகஆரம்பிக்கும்.
நாம் இறுதியாக தேர்வு செய்த இடத்தில் சென்று பாரத்த்தால் நாம்தேர்வு செய்த யூஆர்எல் முகவரியில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் டவுண்லோடு ஆகிஉள்ளதை நாம் காணலாம். பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பவர்பாயிண்ட் பைல்களை வீடியோ பைல்களாக மாற்ற

பவர்பாயிண்ட்டில் நாம் தயாரிக்கும் பைல்களை வீடியோ பைல்களாக மாற்றி எளிதில் பார்வையிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 25 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
இதில் நம்மிடம் உள்ள பவர்பாயிண்ட பைலினை தேர்வு செய்து பின்னர் அது வீடியோபைலாக மாற்றி சேமிக்க விரும்பும் இடத்தினையும் தேர்வு செய்யவும். பிறகு இதில் உள்ள நெக்ஸ்ட் பட்டனை கிளிக்ள செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வீடியோவின் நீள அகல அளவுகளை நாம் தேர்வு செய்யவேண்டும். பின்னர் இதில் உள்ள அடுத்த லெவலுக்கு செல்லவும். கீழே உள்ள விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான ஆடியோ செட்டிங்ஸ் தேர்வு செய்து அடுத்த லெவலுக்கு செல்லவும். உஙகளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது கன்வர்டர் செட்டிங்ஸ்ல் உள்ள ப்ரோபைல் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.இதில் நமக்கு தேவையான வீடியோ பார்மெட்டினை தேர்வு செய்யவும். நம்மிடம் உள்ள செல்போனுக்கு ஏற்ற வீடியோ பார்மெட்டினையும் நாம் தேர்வு செய்யலாம்.ட இதன் மூலம் நமது பவர்பாயிண்ட் ப்ரோகிராமினை வீடியோ பைல் மூலம் நமது செல்போனிலேயே கண்டு களிக்கலாம்.
மேலும் நாம் தேர்வு செய்த வீடியோ பைலினை நமககு தேவையான அளவிற்கு செட்டிங்ஸ் மாறுதல் செய்திடும் வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இறுதியாக ஓ,கே.கொடுத்தபின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் உங்களுக்கான பவர்பாயிண்ட் பைலானது வீடியோ பைலாக மாற்றம் அடையும் பணி நடைபெறும்.
சில நிமிடங்கள் காத்திருங்கள்.
உங்களுக்கான வீடியோ பைலானது நீங்கள் சேமித்த இடத்தில் இருப்பதை காண்பீர்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...