வேலன்:-ரேடியோ பண்பலை நிகழ்ச்சிகளை கேட்க..Radiosindia

கணினி மூலம் நாம் பண்பலை ரேடியோ நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ இந்த இணையதளம் பயன்படுகின்றது. இந்த இணையதளம் செலல இங்கு கிளிக்  செய்யவும்.இந்த இணையதளம் சென்றால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.


இதில் இந்தி.தமிழ்.தெலுங்கு. மலையாளம்.கன்னடம்.குஜராத்தி.ஆங்கிலம் .பெங்காலி என பிராந்திய மொழி சேனல்கள். உள்ளன. உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்திடவும். கீழே தமிழ்மொழியில உள்ள இணையபண்பலைகள் 200 ஒலிபரப்பு நிலைய முகவரிகள் கொடுத்துள்ளார்கள்.

உங்களுக்க விருப்பமான சேனலை கிளிக் செய்திடவும். இப்போது அந்த சேனலில் அப்போது ஒலிபரப்பாகும் பாடலை கேட்டுமகிழலாம்.
இந்த இணையதளம் மூலம் நாம் கணினியில் வேலைசெய்துகொண்டோ விருப்பமான பாடல்களை கேட்டுமகிழலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பிடிஎப் பைலின் பக்கங்களை லாக் செய்திட - PDF PAGE LOCK.

பிடிஎப் பைல்களில் குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் நாம் லாக் செய்து வைத்திட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்திட இணையதளம் செல்ல 
இங்கு கிளிக்  செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.


h
இதில் நீங்கள் பாதுகாக்கவேண்டிய பிடிஎப் பைலினை தேர்வு செய்திடவும். பிடிஎப் பைல்களில் உள்ள பக்கங்கள் உங்களுக்கு பக்கத்து விண்டோவில் தெரியும்.தேவையான பக்கத்தினை தேர்வு செயதிடவும்.
பின்னர் கீழே உள்ள லாக என்கின்ற டேபினை கிளிக் செய்திடவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
அதில் நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை உள்ளீடவும். பின்னர் சேவ் செய்து வெளியேறவும்.
இப்போது நீங்கள் லாக் செய்தபக்கங்கள் லாக்ஆகிவிட்டது என தெரியவரும். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.


இப்போது சேவ் செய்து வெளியேறவும். இப்போது நீங்கள் உங்கள் பிடிஎப் பைலினை திறந்து பார்க்கையில் நீங்கள் லாக்செய்த பக்கமானது பூட்டு சிம்பளுடன் இருப்பதை காணலாம்.


இதனை மீண்டும் நீங்கள் அன்லாக் செய்யவிரும்பினால் மீண்டும் இந்த மென்பொருளை திறந்து பைலினை ஒப்பன் செய்யவும். பைலினை திறக்க முற்படுகையில் உங்களிடம் கடவுச்சொல் கேட்கும். அதனை உள்ளீடவும். 
பின்னர் அன்லாக் என்பதனை கிளிக் செய்திட நீங்கள் லாக் செய்த பக்கமானது திறந்து பார்க்க ஏதுவாக இருக்கும். அதுபோல நாம் பைலினை ஹைட் செய்தும் வைக்கலாம். இதனால் பிடிஎப் பைலானது முற்றிலும் மறைந்துவிடும். மீண்டும் தேவைப்பட்டால் நீங்கள் இதனை கொண்டுவரலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-ஆன்லைனில உயிரியல்பூங்காவினை பார்க்கலாம்.

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவினை நாம்  24 மணிநேரமும் கண்டுகளிக்கலாம். அதற்கான வசதியை உயிரியல் நிர்வாகம் செய்துள்ளது. இதன் இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இதன் இணையதளம் சென்று கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.


இதில் கேமரா பொருத்தப்பட்டுள்ள விலங்குகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். நீங்கள் அதில் எந்த விலக்கினை நேரடியாக காணவிரும்புகின்றீர்களோ அதன் மீது கர்சரைவைத்து கிளிக் செய்யவும்.
 

இப்போது விலங்குகளுக்கான இருப்பிடம் காண்பிக்கப்படும். அதில் விலங்குகளின் நடமாட்டத்தினை நாம் கண்டுகளிககலாம். சற்று உற்றுப்பார்த்தால் உயிரியல் பூங'காவினை சுற்றிபார்க்கும் சுற்றுலாபயணிகளையும்      நீங்கள் காணலாம். சிறு குழைந்தைகள் உள்ள வீட்டில் இந்த இணையதளம் பக்கத்தினை திறந்து உங்கள் :குழந்தைகளுக்கு விரும்பமான விலங்குகளின்  நடமாட்டத்தினை உணவு  உண்பதனை ஒய்வு எடுப்பதனை விளையாடுவதை காண்பிக்கலாம். 
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-ஆன்லைனில் டிவிசேனல்கள் பார்க்க-Live TV Channels.

கேபிள் பழது,டிஷ்ஷில் சரியான சிக்னல் கிடைக்காதது போன்ற சந்தர்ப்பங்களில் முக்கியமான டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நாம் பார்க்க முடியாமல் போகலாம் அவ்வாறான நேரங்களில் நமது கணினி மூலம் டிவி நிகழ்ச்சிகளை பார்க்க இந்த இணையதளம் பயன்படுகின்றது. இதனை பார்க்க இங்கு  செல்லவும். இங்கு சென்றதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ஆங்கிலம்,இந்தி.தமிழ்.மலையாளம்.தெலுங்கு.கல்வி,ஆன்மீகம்.இசை என பத்திற்கும் மேற்பட்ட ஐகான்கள் கொடுத்துள்ளார்கள். 



தமிழ் சேனலை கிளிக் செய்திட உங்களுக்கு தமிழில் ஓளிபரப்பப்படும் அனைத்து சேனல்களும் கிடைக்கும். இதில் நமக்கு எந்த சேனல் தேவையோ அந்த சேனலை கிளிக் செய்தால் அந்த சேனல் இணையதளம ;திறக்கப்பட்டு அந்த சேனலின் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

பாலிமர் செய்தி சேனலை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகியது.



இதனைப்போல பண்ணாட்டு சேனல்களும் கொடுத்துள்ளார்கள்.

நமக்கு எந்த சேனல் தேவையோ அந்த சேனலை கிளிக் செய்து அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நாம் கண்டுகளிக்கலாம்.இந்த இணையதளம் மூலம் ரூபாய் செலவில்லாமல் டிவி நிகழ்ச்சிகளை நாம் கண்டுகளிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-தேவையற்றதை கணினியில் நீக்கிட -BlackBird Cleaning.

 இணையம் பயன்படுத்துகையில் நமது டிரைவில் சேரும் System Cache.Windows temporary files.window and Hs logs.Windows media samples.windows search cache போன் ற பைல்களை நீக்கி கணினி விரைந்து செயல்பட இந்த மென்பொருள் பயன்படுகின்றது.இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்;;;யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதன் கீழ்உள்ள ப்ரோசீட் பட்டனை கிளிக் செய்திட உங்களுக:கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் எந்த எந்த பைல்கள் நிக்கப்பட்டன. அதனால் எவ்வளவு இடம் ஹார்ட்டிஸ்கில் நமக்கு கிடைத்தது என விவரம் தெரியவரும்.
இதில உள்ள சர்வீஸ் மேனேஜ் கிளிக் செய்திட எந்த எந்த அப்ளிகேஷன்கள் ரன் ஆகின்றது. எதுஎது நிறுத்திவைக்கப்ட்டுள்ளது என விவரம் தெரியும்.
இதில் கொடுக்கப்பட்டுள்ள டேபினை கிளிக் செய்து ஒவ்வொரு விவரங்களையும் நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு டேபிலும் நமக்கு தேவையானதை தேர்வு: செய்து பின்னர் தேவைப்பட்டால் அதனை பயன்படுத்தி கணினியின் கூடுதலான இடங்களை பெறலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பிடிஎப் ரோட்டேட்டர்.-PDF Page Rotator.

சில பைல்களை புகைப்படங்களை நாம் பிடிஎப் பைல்களாக மாற்றும் சமயம் சில பக்கங்கள் மாறி இருக்கும். அவ்வாறு மாறிஇருக்கும் பிடிஎப் பக்கங்களை நாம் நமக்கு; தேவையான கோணத்திற்கு மாற்றிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன்இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம்செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் நமக்கு தேவையான பிடிஎப் பைலினை டிராக் அன்ட் டிராப் முறையில் தேர்வு செய்திடவும். மேலும் உங்களுக்கு உங்களது பிடிஎப் பைலானது இதன் பக்கத்தில் தெரியவரும. இதில் 0.90.180.270 என கோணங்கள் அளவு கொடுத்திருப்பார்கள் அதுபோல எந்த எந்த பக்கங்களை நீங்கள் மாற்ற வேண்டுமோ அதனை தேர்வு செயதிடலாம். அல்லது அனைத்து பக்கங்களையும் மாற்றவேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். தேவையானதை தேர்வு செய்து பின்னர இதில் உள்ள ரோட்டேட் என்பதனை கிளிக் செயதிடவும்.
 பைலினை சேமிக்க விரும்பும்இடத்தினை தேர்வு செய்தபின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்கள் பிடிஎப் பைலானது நீங்கள் விரும்பியவாறு மாறியிருப்பதனை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- வீடியோ பைல்களில் வேண்டிய மாற்றங்கள் செய்திட - Allavsoft

இணையத்தில் இருந்து வீடியோ பைல்களை பதிவிறக்கம் செய்திடவும்.தேவையான பகுதியை கட் செய்திடவும. சிறு சிறு வீடியோ பைல்களை ஒரே பைல்களாக மாற்றிடவும். வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும் இந்த மென்பொருள்' பயன்படுகின்றது. இதன்இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 நீங்கள் ;பதிவிறக்கம் செய்யவேண்டிய வீடியொ பைலின் யூஆர்எல் முகவரியை காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்திடவும்.உங்களுக்கு வேண்டிய பார்மெட்டினை தேர்வு செய்திட்ட வின்னர் இதன் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்திடவும்.
 இதில் உள்ள கன்வர்ட் டேபினை கிளிக் செய்தததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் உங்கள் வீடியொவின் பதிவிறக்கம் செய்யவேண்டிய பார்மெட்டினை தேர்வு செய்திடவும். பின்னர் வீடியொவில் எந்த பகுதியிலிருந்து எந்த பகுதி வேண்டுமோ அதனை தேர்வு செய்தபின்னர் இதில் உள்ள கன்வர்ட் ப்ட்னை கிளிக் செய்திடவும்.


உங்கள் வசம் உள்ள வீடியோ பைல்களை ஒரே பைல்களாக மாற்றிடவும் இதில் உள்ள மெர்ஜ் டேபினை கிளிக செய்திடவும். பின்னர் உங்கள் கணினியின் ஹ◌ார்ட்டிஸ்கிலிருந்து தேவையான வீடியோ பைல்களை தேர்வு செய்திடவும். 



பைல்களை முன்பின் மாற்றுவதோ நீங்குவதோ இதில் செய்திடலாம். பின்னர் கடைசியாக இதில் உள்ள மெர்ஜ் பட்டனை கிளிக் செய்திடவும். சில நிமிடங்களில் உங்களுக்கான வீடியோ பைல்களானது ஒரே பைலாக மாறியிருப்பதை காணலாம். இதில் உள்ள ஆக்டிவிடி டேபினை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். ;இதில் நீங்கள் இந்த மென்பொருளில் செய்திட்ட விவரம் எல்லாம் தெரியவரும். இதன் மூலம் உங்கள் வீடியோபின் ;தற்போதைய நிலவரத்தினை நீங்கள்அறிந்து;கொள்ளலாம்.
இது ட்ரையல் விஷன் பதிப்பு ஆகும். உங்களுக்கு இந்த மென்பொருள் பிடித்திருந்தால் முழு பதிப்பையும் வாங்கிகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- கணினியில் உள்ள டூப்ளிகேட் பைல்களை நீக்கிட -Weeny Duplicate File Remover.

கணினியில் நாம் போல்டர்கள்.புகைப்படங்கள்.வீடியோக்கள் டாக்குமெண்ட்டுகள் போன்றவற்றை உருவாக்கும் சமயம் தெரியாமல் இரண்டாக சேமித்துவைத்துவிடுவோம்.அவ்வாறு சேரும் பைல்கள் இரண்டுக்கும் மேற்பட்டு நமது கணினியில் சேர்ந்துவிடும். அவ்வாறான பைல்களால் நமது ஹார்ட்டிஸ்கில் இடம் ;அடைத்துகொண்டு கணினி மெதுவாக செயல்படும். இவ்வாறான சிக்கல்களை தீர்க்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இது கணினியில் உள்ள ஒன்றுக்கும் மேற்கொண்ட பைல்களை இனம் கண்டு அதனை நீக்கிவிடுகின்றது. இதன்இணையதளம் சென்று பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்   செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.


இதில் உங்களுக்கு உங்கள் கணினியில் உள்ள டிரைவ்கள் காட்டப்படும். நீங்கள் எந்த டிரைவில் அதிகபடியான டுப்ளிகேட் பைல்கள் உள்ளதோ அந்த டிரைவினை தேர்வு செய்திடவும. மொத்த கணினியும் நீங்கள் சோதிக்க விரும்பினாலும் நீங்கள் சோதிக்கலாம்.
 அடுத்த நகர்வு சமயம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள விண்டோவில் உங்களுக்கு தேவையான விண்டோவினை தேர்வு செய்திடவும். 
 ஒவ்வொரு விண்டோவிற்கும் உள்ள பைல்களின் வகைகள் உங்களுக்கு கிடைக்கும். அதில் உள்ள வகைகளை நீங்கள்தேர்வு செய்து கொள்ளலாம். 
இதில் உள்ள சர்ச ஆப்ஷனிற்கு எதிரில் உள்ள ரேடியோபட்டனை கிளிக் செய்து தேவையானதை பெறலாம்.
 
 அனைத்து பணிகளும் முடிந்ததும் உங்களுக்கு உங்கள் பைல்கள் தேட ஆரம்பிக்கும். அதில் உள்ள வகைகளும் ;உங்களுக்கு தெரியவரும்.
இறுதியாக உங்கள் கணினியில் உங்கள் தேர்வு கெற்ற டிரைவில் எவ்வளவு டூப்ளிகேட் பைல்கள் உள்ளதோ அதன் அனைத்து விவரங்களும் தெரியவரும். அதனை சுலபமாக நீக்கியோ அல்லது வேறு ஒரு இடத்தில் சேமித்தொ வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் கணினியில் தேவையற்ற பைல்கள் நீங்கள் கணினியின் ஹாரட்டிஸ்க்கில் கூடுதல் இடம் கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- பலவிதமான டேப்புகள் இணைய உலவியில் திறக்க -Chrome on Tabs

டெக்ஸ்டாப்பில் விதவிதமான விண்டோக்கள் வைத்து பார்த்திருப்போம். இணைய உளவியில் தனிதனி டேப் கிளிக்செய்து ஒவ்வொரு விண்டோவாக ஓப்பன் செய்யலாம். ஆனால் தனிதனி விண்டோவினையே நாம் குரொம் ப்ரவ்சரில் கொண்டுவரலாம். இந்த வசதியினை பெற  இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட ஐகான் கிடைக்கும் . அதனை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.



இதில் உங்களுக்கு எத்தனை விதமான டேப் வேண்டுமொ அதனை தேர்வு செய்திடலாம். மேலும் வரும் விண்டோவானது படுக்கை வாட்டத்திலா நெடுக்கை வாட்டத்திலா என்ப்தனை தேர்வு செய்திடவும். 6 டேப்புகள் படுக்கை வாட்டத்தில் தேர்வு செய்துள்ளதை காணுங்கள்.



மூன்று டேப்புகள் நெடுக்கை வாட்டத்தில் தேர்வு செய்துள்ளதை காணுங்கள்.
இந்த ஒவ்வொரு டேபிலும் நாம் தனிதனி முகவரியை தட்டச்சு செய்து பார்வையிடலாம். இதுபோல பயர்பாக்ஸிலும் வசதி செய்யப்பட:டுள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-கணிணி கிளினர் -WeenySoft Cleaner.

கணிணியை சுத்தம் செய்து விரைந்து செயல்பட வைக்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனைபதிவிறக்கம்செய்திடஇங்குகிளிக்  செய்திடவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக் குகீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 இதன் கீழே உள்ள கிளின்நௌ என்பதனை கிளிக் செய்திடவும். சிலநிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் கணிணி சுத்தமாகிவிடும்.
 இதில உள்ள கிளின் ஹிஸ்டரி,கிளின் இன்டர்நெட் ப்ரவ்ஸர்.கிளின் விண்டோஸ் ரிஜிஸ்ரி.கிளின் டிஸ்க் டிரைவர்ஸ் என இதில் வருவனவற்றை நாம் :சுலபமாக கிளின் செய்துவிடலாம்.
ஒவ்வொரு டிரைவிலும் வரும் ஜங்க் பைல்கள்.எக்ஸப்ஸன் ஆகியவற்றை நாம் சுலபமாக கிளின் செய்துவிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பைல்கள்-டெக்ஸ்ட்டினை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க -Encrypt-Care

பைல்கள் மற்றும் டாக்குமெண்ட்டுகளை கடவுச்சொல் கொடுத்து பாதுகாத்திட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்  செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.உங்களுக்கு கடவுச்சொல் கேட்கும். கடவுச்சொல்லினை உள்ளீடவும்.
இதில் பைல்களோ புகைப்படங்களோ போல்டர்களோ தேர்வு செய்திடவும். இதில் உள்ள என்கிரிப்ட் டேபினை கிளிக் செய்திடவும். போல்டரை சேமிக்கும் இடத்தினை தேர்வு செய்திடவும். உங்களுக்கான பைலானது மற்றவர்கள் திறந்து பார்க்கமுடியாதவகையில் பூட்டப்பட்டுவிடும். இப்போது மீண்டும் இந்த மென்பொருளை திறந்து இந்த பைலினை திறந்து இப்போது டீகிரிப்ட் என்பதனை கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் பைலானது கடவுச்சொல் இல்லாமல் திறந்துகொள்ளும்.


அதுபோல டாக்குமெண்ட்களை டெக்ஸ்ட் பைல்களை நீங்கள் கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்கலாம் உங்களுக்கு தேவையான டெக்ஸ்ட்டினை தட்டச்சு செய்தோ காப்பி பேஸ்ட் செய்தோ உள்ளீடவும். பின்னர் இதில் உள்ள என்கிரிப்பட் கிளிக் செய்திடவும். இப்போது பக்கத்தில் உள்ள விண்டோவில் உங்கள் டெக்ஸ்ட் டானது வித்தியாசமான டெக்ஸ்டாக உருமாறியிருக்கும். இப்போது அதனை நீங்கள் சேமித்துவைத்துக்கொள்ளலாம். மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். அதனை மற்றவர்கள் பார்த்தாலும் ஒன்றும் தெரியாது. வித்தியாசமான வார்த்தைகளில் இருக்கும். இப்போது மீண்டும் இந்த மென்பொருளை திறந்து என்கிரிப்ட் செய்யப்பட்ட டெக்ஸ்ட்டினை காப்பிசெய்து அதனை டீகிரிப்ட் செய்திடவும்.இப்போது உங்களுக்கு மீண்டும் பழைய பைல்கள் கிடைக்கும். இதன் மூலம் மற்றவர்களிடமிருந்து உங்கள் பைல்களை பாதுகாக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-கணினியில் உள்ள பைல்களை விரைந்து தேடிட -Quick Search.

கணினியில் உள்ள பைல்களை விரைந்து தேட இந்த மென்பொருள் உதவுகின்ற்து:. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 இதில் உங்கள் கணினியில் உள்ள டாக்குமெண்ட்டுகள். புகைப்படங்கள்.வீடியோக்கள்.ஜிப் பைல்கள்.ஷார்ட் கட்டுகள்.ப்ரோகிராம்கள் டேப்புகள் வழி காண்பிக்கும். உங்களுக்கு தேவையானதை இதில் தேடலாம். 



இதில் உள்ள சர்ச் பாக்ஸில் உங்களுக்கு தேவையானதை தட்டச்சு செய்திட உங்கள் கணினியில் எங்கு எங்கு எந்த வகையான பைல்கள் உள்ளதோ அவை டிஸ்பிளே ஆவதுடன் உங்களுக்கு சிகப்பு கோடிட்டு காண்பிக்கும்;


இதுதவிர இணையத்தில் உங்கள் தேடல் தொர்பான சொற்ககளையும் இதில் காணலாம். இதிலிருந்து நேரடியாக இணைய இணைப்பிற்கு செல்லலாம். இதன் மூலம் நமது தேடல்கள் :சுலபமாகின்றது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...