வேலன்:-2014-ல் அதிகம்பேர் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்த பதிவுகள்.

  • ஒவ்வொரு வருடத்தின் இறுதியில் தினசரிகளில் அந்த வருடங்களில் வெளியான திரைப்படங்களில் அதிக நாட்கள் ஒடிய திரைப்படங்கள் பற்றி போடுவார்கள்.. அதைப்போலஎனது பிளாக்கில் அதிகநபர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட பதிவுகளை பற்றி பதிவிடுகின்றேன்.இந்த 2014 ஆம் வருடத்தில் எனது மொத்த  பதிவுகள் 89.அதிகம் பேர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட சிறந்த 10 பதிவுகள் கீழே:-

  • 1.    வேலன்:-எளிய முறையில் தமிழ்.இந்தி. ஆங்கிலம் மற்றும்.தெலுங்கு மொழி கற்க
குழந்தைகள் எளிய முறையில் தமிழ்.தெலுங்கு.இந்தி ஆஙகிலம் அறிந்துகொள்ள இந்த இணையதளம் பெரிதும் உதவுகின்றது. உயிர் எழுத்துக்கள்.மெய் எழுதத்துக்கள்.இலக்கணங்கள் என முப்பதுக்கும்மேற்பட்ட டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.இந்த இணையதளம் காண இங்கு கிளிக் 
--------------------------------------------------------------------------------------------------------------------------

நாற்பது வயதை கடந்தபின்பும் சிலர் மனதளவில் இளமையாக இருப்பார்கள். அவர்கள்உடலளவிலும் என்றும இளமையாக இருக்க இநத புத்தகத்தில் எளிய வழிமுறைகள் சொல்லிஉள்ளார்கள். நீங்கள் 40 வயதை கடந்தவரா -அப்படியானால் அவசியம் இந்த புத்தகத்தினை படிக்கவும்.2 எம்.பி.க்கு குறைவான இந்த புத்தகத்தினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் 
----------------------------------------------------------------------------------------------------------------------

3.வேலன்:-சுலபமான வீடியோ கட்டர்

இணையத்தில் விதவிதமான வீடியோ கட்டர்கள் இருந்தாலும் பயன்படுத்த எளிமையான - சுலபமான வீடியோ கட்டராக இந்த BANDICUT வீடியோ கட்டர் உள்ளது. 9 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்
----------------------------------------------------------------------------------------------------------------------
4.வேலன்:-வித்தியாசமான ப்ரவ்சர் -Baidu Spark Browser...
Baidu Spark Browserஎன வித்தியாசமான பெயரில் உள்ள இந்த ப்ரவ்சர் 36 எம்.பி. கொள்ளளவில பலவித வசதிகளை கொண்டுள்ளது. இதன் முகவரி தளம் காண இங்கு கிளிக் 
--------------------------------------------------------------------------------------------------------------------------
5.வேலன்:-குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன்.
குழந்தைகள் படங்களுடன் ஆங்கிலத்தில் அகராதி அறிந்துகொள்ள இந்த புத்தகம் உதவுகின்றது. ஒவ்வொரு வார்த்தைக்கும் உண்டான வண்ண வண்ண புகைப்படம் இணைந்துள்ளது. 31 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் 
--------------------------------------------------------------------------------------------------------------------------
சாதாரண யூடியூப் டவுண்லோடர் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நவீன வசதிகளுடன் இந்த யூடியூப் டவுண்லோடர் உள்ளது.அதிகம்பேரால் பார்க்கப்பட்ட வீடியோக்கள்.பகிரப்பட்ட வீடியோக்கள்.என அதிக வசதிகளுடன் இந்த யூடியூப் டவுண்லோடர்  உள்ளது. 11 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்தி இங்கு கிளிக்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
7.வேலன்:-மூளைக்கு வேலை தரும் புதிர்கள்.

மனித மூளைக்கு சரியானபடி வேலை தரவில்லையென்றால் அது வீணாகிப்போகும் . அதற்கும் அவ்வப்போது சரியானபடி வேலைதந்தால் சுறுசுறுப்பாக இயங்கும். வளரும் குழந்தைகளுக்கு இது சரியான பயிற்சியாகும். 2 எம்.பி. கொள்ளளவும் 100க்கும் மேற்பட்ட புதிர்கள் கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் 
-------------------------------------------------------------------------------------------------------------------------
8.வேலன்:-பிடிஎப் எரேசர் -PDF ERASER
பிடிஎப் பைல்களை நாம் பயன்படுத்துகையில் அதில் உள்ள புகைப்படங்களை எளிதில் நீக்கவும்.சேர்க்கவும். வார்த்தைகளை சேர்க்கவும் நீக்கவும். பிடிஎப் பக்கங்களை எடிட் செய்திடவும்.இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக்   
----------------------------------------------------------------------------------------------------------------------------------
9.வேலன்:-இணைய புகைப்படங்களை மொத்தமாக பதிவிறக்கம் செய்திட
இணையத்தில் புகைப்படங்களை பார்க்கும் சமயம் பதிவிறக்கம் செய்யவிரும்புவோம். ஒரே பொருளின் விதவிதமான புகைப்படங்கள் நமக்கு தேவைப்படும்.அதை ஒவ்வொன்றாக தேர்வு செய்து அதனை ஒவ்வொன்றாக பதிவிறக்கம் செய்யவேண்டும். அவ்வாறு சிரமப்படாமல் அனைத்து படங்களையும் ஒரே கிளிக்கில் பதிவிறக்கம் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் 
--------------------------------------------------------------------------------------------------------------------------
10.வேலன்:-மெக்கானிக்கல் கால்குலேட்டர்.
மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து பிரிவினருக்கும் தேவையான கால்குலேட்டராக இந்த மெக்கானிக்கல் கால்குலேட்டர் உள்ளது. 4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த வருடம் விஷேசம் என்னவென்றால் உங்களது அனைவரது அன்பினாலும் ஆசியாலும் எனது ஆயிரமாவது பதிவு இந்த வருடம் தான் வெளியானது.தொடர்ந்து உங்கள் ஆதரவையும் அன்பையும் வேண்டி....
         அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
வாழ்க வளமுடன்.
வேலன்.-----------------------------------------------------------------------
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பிடிஎப் பைல்களை வேர்ட்.எச்டிஎம்எல்.ஜேபிஜிமற்றும் டெக்ஸ்ட் பைல்களாக மாற்றிட

பிடிஎப் பைல்களை வேர்ட்,எச்டிஎம்எல்,ஜேபிஜி,டேக்ஸ்ட் என வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனைஇன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add  பிடிஎப் பைல்களை கிளிக் செய்திட  வரும் விண்டோவில் நமது கணிணியில் உள்ள பைல்களை தேர்வு செய்யவும்.இதில் உள்ள கன்வர்ட் கிளிக் செய்திடவும்.
 அதனைபோல பிடிஎப் பைல்களை புகைப்படங்களாகவும் மாற்றிவிடலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

 உங்களுக்கான கன்வர்ட் முடிந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் சேமித்த இடத்தில்சென்று பார்த்தால் உங்களுக்கான பிடிஎப் பைலானது வேர்ட்,எச்டிஎம்எல்,ஜேபிஜிமற்றும் டெக்ஸ்ட் பைல் இதில் நீங்கள் எதனை தேர்வு செய்தீர்களோ அந்த பார்மெட்டுக்கு மாறி இருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-உங்கள் ஜாதக கட்டம் சரிபார்க்க


உங்களிடம் ஜாதகம் இருந்தால் அதில் உள்ள கட்டங்களின் கிரகங்களை சரிபாரப்பதற்கும் புதியதாக ஜாதகம் எழுதுவதாக இருந்தாலும் இந்த இணையதளம் உதவி செய்கின்றது. இந்த தளம் காண இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.
 இதில் நீங்கள் பிறந்த ஊர் குறிப்பிடவும். தமிழ்நாடாக இருந்தால் நீங்கள் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள பெரிய நகரத்தை குறிப்பிடலாம். அல்லது உங்கள் ஊரின் சரியான அட்சரேகை,தீர்க்கரேகை தெரிந்தாலும் குறிப்பிடலாம்.அதுபோல நீங்கள் பிறந்த நேரத்தினை குறிப்பிட்டு இதில் உள்ள கால்குலேட் கிளிக் செய்யவும்.
 சிலநொடிகளில் உங்கள் ராசி.நட்சத்திரம்.உங்கள் லக்னம்.மற்ற கிரக நிலைகள் ஆகிய விவரங்கள் வலதுபக்க விண்டோவில் கிடைக்கும்.

இடது பக்கம் உங்களுக்கான ஜாதக கட்டம் விரிவாக கிடைக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

இதில் நமக்கு தேவையான விவரங்களை பிரிண்ட் கூட எடுத்துவைத்துக்கொள்ளலாம். இந்த தளம் ஏற்கனவே நாம் பதிவிட்டிருந்தாலும் நிறைய நண்பர்கள் இந்த வசதியை கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். அவர்களுக்கு நினைவுப்படுத்தவே இந்த பதிவு..பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இணையத்தில் தமிழில் தட்டச்சு செய்ய

மைக்ரோசாப்ட்அப்ளிகேஷன்கள்.கூகுள்குரோம்.ஜிமெயில்.யாகூமெயில்.இன்டர்நெட் எக்ஸ்புளோரர்.நோட்பேட்.வேர்ட்பேட்.அடோப் அப்ளிகேஷன்கள் என அனைத்திலும் தமிழில் எளிமையாக தட்டச்சு செய்திட இந்த இலவச குறள் சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனுடைய முகவரி தளம் காண இங்கு கிளிக் செய்யவும். இந்த சாப்ட்வேரினை பதிவிறக்க்ம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள என்கோடிங் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் UNICODE.TSC.TAB.TAM.LIPI T OLD.ஆகிய கோடிங வகைகள் கிடைக்கும்.
அதனைப்போல கீபோட்டினை கிளிக் செய்திட வரும் பாப்அப் மெனுவில் Phonetic.Tamil99.New Typewriter.Old Typewriter போன்று வரும். இதில் உள்ள Phonetic தேர்வு செய்ய நாம் உச்சரிக்கும் ஒலியை தட்டச்சு செய்ய அதற்கேற்ப தமிழ் வார்த்தை வரும். உதாரணத்திற்கு நாம் Amma என ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் அம்மா என்று வரும்.
பயன்படுததிப்பர்ருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-மீடியா கன்வர்ட்டர்.

நம்மிடம் உள்ள ஆடியோ.வீடியோ மற்றும் இணையத்தில்இருந்து பதிவிறக்கம்செய்யப்படும் ஆடியோ,வீடியோ ஆகியவற்றை தேவையான பார்மெட்டுக்கும் தேவையான டிவைஸ்ஸீக்கும் சுலபமாக மாற்றிட இந்த ஐஸ்கிரீம் மீடியா கன்வர்ட்டர் நமக்கு பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நம்முடைய பைலினை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

தேவையான செட்டிங்ஸ் நீங்கள் அமைத்ததும் இதில்உள்ள பார்மெட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதனைப்போல நாம் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் பைலின் யூஆர்எல் தேர்வு செய்து இதில் கிளிக் செய்யவும்.

 இதில் உள்ள கன்வர்ட் கிளிக் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 பதிவிறக்கம் செய்து முடித்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதுவரை நாம் பதிவிறக்கம் செய்திட்ட பைல்களின் ஹிஸ்டரியையும் நாம் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பதிவினை பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-மொத்தமாக ஸ்கேன் செய்த புகைப்படங்களை தனிதனியே சேமிக்க

புகைப்படங்களை மொத்தமாக வைத்து ஸ்கேன் செய்தபின்னர் அதனை தனிதனியே சேமிக்க முடியுமா என நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்.அதற்கேன சாப்ட்வேர்கள் உள்ளதா என தேடிப்பார்க்கையில் அவ்வளவு திருப்தியாக கிடைக்கவில்லை.போட்டோஷாப்பிலே அந்த வசதியிருக்கும்போது தனியாக எதற்கு சாப்ட்வேர் தேடவேண்டும். போட்டோஷாப்பில் அந்த வசதியினை பெற அதனை எவ்வாறு பயன்படுத்துவது என பார்க்கலாம்.முதலில் புகைப்படங்களை ஸ்கேன் செய்து தனியே சேமித்துவைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் போட்டோஷாப்பினை திறங்கள்.பைல் என்பதின் கீழ் உள்ள Automate - Crop and Straighten Photos என்பதனை கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
சில நொடிகள் காத்திருத்தலுக்கு பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் நீங்கள் தேர்வு செய்துள்ள புகைப்படங்கள் தனிதனியே பிரிந்து உள்ளதை காணலாம். அதனை தனிதனியே சேமித்துவைத்துக்கொள்ளலாம்.
ஸ்கேன் செய்த புகைப்படங்கள் மட்டுமல்லாது இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்கின்ற புகைப்படங்களின் தொகுப்பினையும் நாம் தனிதனியே பிரித்து பயன்படுத்தலாம். கீழே உள்ள பூக்களின்  புகைப்பட தொகுப்பினை பாருங்கள்.

தனியே பிரிந்துள்ள புகைப்படத்தினை பாருங்கள்.. 
இவ்வாறு நீங்கள் தனிதனியே புகைப்படங்களை எளிதில் பிரித்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.




பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-1000 ஆவது பதிவு.

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று பதிவில் 
மூன்று முக்கிய விஷேஷங்கள். முப்பெரும் விழா அரசியல் கட்சிகள் தான்கொண்டாட வேண்டுமா...நாமும் கொண்டாடலமே....

முதல் விஷேஷம் இத்துடன்
எனது பதிவு 1000 -ஐ தொட்டுவிட்டது. பிறக்கும்போது
கொண்டுவரவில்லை.இறக்கும்போதும் கொண்டு செல்ல
போவதுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால்
முடிந்ததை செய்வோம்.விளையாட்டாக ஆரம்பித்து இன்று
1000 பதிவை அடைந்துவிட்டேன். 

எனக்கு தெரிந்தவிஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.எனக்கு
தெரியாததையும் சொல்லிதாருங்கள்.கற்றுக்கொள்கின்றேன்.
இணையதளம் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.
உண்மையில் நான் மிக்க அதிர்ஷ்டக்காரன் தான்.
அடுத்த வி்ஷேஷம் பதிவுலகில் பிளாக ஆரம்பித்து ஆறுவருடங்கள் நிறைவு 
பெற்றுள்ளது. கடைசியாக இன்று  எனது பிறந்தநாள்
02.12.2014. உங்கள் அன்பையும ஆசிர்வாதத்தையும் வேண்டி...

என்றும் அன்புடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-தமிழுக்கான அருமையான இணையதளம்.

தமிழுக்காக நிறைய இணைய தளங்கள் இருந்தாலும் சில இணைய தளங்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுவதாக இருக்கின்றது. அந்த வகையில் Tamil Cube என்கின்ற பெயருடைய இந்த இணையதளம் மிகமிக சிறப்பானதாக உள்ளது.இந்த இணைய தளம் காண இங்கு கிளிக் செய்யவும். தமிழ் நாட்காட்டி.அகராதி.மொழிபெயர்ப்பு.தூய தமிழ் பெயர்கள்.ஜாதகம்.பொது அறிவு,காரண ஆய்வு,கணித அறிவு,யூபிஎஸ்சி.டிஎன்பிசி.தமிழ் நூல்கள் என பல்வேறு டேப்புகள் கொடுத்துள்ளார்கள். இனி இதில் வரும் ஒவ்வொரு தலைப்பினையும் விரிவாக காணலாம்.
  முதலில் உள்ளது தமிழ் நாட்காட்டி. அதில் அன்றைய தேதி நாட்காட்டியையும் அந்த மாத்த்திற்கான தமிழ்நாட்காட்டியையும் இணைத்துள்ளார்கள். அந்த மாத்த்திற்குரிய விசேஷங்கள் இதன் மூலம் எளிதில் அறிந்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


அடுத்ததாக தமிழ் மற்றும் சான்ஸ்கிரிட் புத்தகங்கள் இணைத்துள்ளார்கள். திருக்குறள் முதல் பாரதியார் பாடல்கள்.நாவல்கள்.கவிதைகள்.அகராதிகள் என முன்னூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை பதிவிறக்கம் செய்திடும் வகையில் அறிமுகப்படுத்திஉள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் அடுத்ததாக அகராதி கொடுத்துள்ளார்கள். இதில் தமிழ்,தெலுங்கு.மலையாளம்.கன்னடம்.குஜராத்தி.ஒரியா.இந்தி.சைனா.பெங்காலி.சிங்களம்.அரபி.ஜப்பானிய மொழிகளுக்கான அகராதி கொடுத்துள்ளார்கள். நீங்கள் இதில் உள்ள் சர்ச் பாக்ஸில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் அதற்கான விளக்கம் நீங்கள் எந்த மொழியில் விரும்பினீர்களோ அந்த மொழியில் உங்களுக்கு விடை கிடைக்கும். நான் Tamil Computer என தட்டச்சு செய்தேன்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


மொழி பெயர்ப்பு என்கின்ற காலத்தில் உங்களுக்கு தமிழ.தெலுங்கு.மலையாளம்.கன்னடம்.குஜராத்தி.பெங்காலி.மராட்டி.சான்ஸ்கிரிட்.பஞ்சாபி.சிங்கள.நேபாளி.சைனா மற்றும் ஜப்பானிய மொழிகளில் நாம் மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு நீங்கள் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை தட்டச்சு செய்தால் அதற்குரிய தமிழ்வார்த்தை உங்களுக்கு விடையாக கிடைக்கும். நான் இதிலும் Tamil Computer  என ஆங்கிலத்தில தட்டச்சு செய்தேன் எனக்க தமிழ்கம்யூட்டர் என தமிழில வந்தது. தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் இந்த டிரான்ஸ்லேட்டர் மூலம் ஆங்கில்தில் தட்டச்சு செய்து அதனை தமிழாக மாற்றி பின்னர் காப்பி பேஸ்ட் செய்வதன் மூலம் ஜிமெயில் உட்பட இணைய பயன்பாடுகள் அனைத்தையும் எளிதில் தமிழில நிறைவேற்றிக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

குழந்தைகளுக்கான அழகான பெயர்கள் வைக்க இந்த டேப் பயன்படுகின்றது. இதில தமிழ்.தெலுங்கு.மலையாளம்.கன்னடம்.முஸ்லீம்.குஜராத்தி.பெங்காலி.நேபாலி.சன்ஸ்கிரீட் போன்ற மொழிகளுக்கான தூய பெயர்கள் ஆண் பெண் குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்கள். நமது குழந்தைகளுக்கு தூய தமிழ்பெயர் வைக்க இது மிகவும் பயன்படும். இதில் உள்ள தமிழ்மொழியின் ஆரம்ப எழுத்தை கிளிக் செய்திட அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் அனைத்து பெயர்களும் நமக்கு கிடைக்கும்.போனஸாக அநத எழுத்துக்குரிய நியூமராலஜி எண்ணும் நமக்கு கிடைக்கும்.கீழே உள்ள் விண்டோவில் பாருங்கள்.


அடுதத டேப்பில் தமிழ் ஜாதகம்.தமிழ் நாட்காட்டி.எலி ஜோதிடம்.கிளி ஜோதிடம். தமிழ் ஜாதகம்.ராசி.நட்சத்திரம்.லக்னம்.பஞ்ஞாங்கம்.சனி பெயர்ச்சி.குரு பெயர்ச்சி.ராசி பலன்.தெலுங்கு ஜாதகம்.மலையாள ஜாதகம். நியூமராலஜி என 13 வகைகள் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அடுத்து பொது அறிவு டேப் கொடுத்துள்ளார்கள். அதில் ஜெனரல் நாலேட்ஜ். வரலாறு.அறிவியல்.கணிதம். புவியியல். கணிணி அறிவியல்.தமிழ்.ஆங்கிலம்.இந்திய அரசியல் நேர் முகதேர்வுக்கான கேள்வி பதில்கள் என நிறைய தலைப்புகள் கொடுத்தள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
ஒவ்வொரு தலைப்பிலும் எண்ணற்ற கேள்விகளும் அதற்கான விடைகளும் கொடுத்துள்ளார்கள். உங்கள் பொது அறிவினை வளர்த்துக்கொள்ள இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.

அடுத்ததாக உள்ள டேப்பில் அப்டிடியூட் கணக்குகள்கொடுத்துள்ளார்கள். ஒவ்வொரு பிரிவிலும் எண்ணற்ற கண்ககுள் கொடுத்துள்ளாரக்ள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

அடுத்ததாக Reasoning என்கின்ற தலைப்பில காரண ஆய்வு கேள்விகள் கொடுத்துள்ளார்கள். ஒரு விடை வந்தால் அது எவ்வாறு விடை கிடைக்கும் என்பதனை ஆய்வு செய்து யூகித்து நாம் விடைஅ ளிக்கவேண்டும. அப்ஜக்டிவ் டைப் எனப்படும் கேள்விகளுக்கான விடைகள் கொடுத்திருப்பார்கள். நாம் விடையை டிக் செய்திட வேண்டும்.
அடுத்த டேப்பில் யூபிஎஸ்சி தேர்வுக்கான வினாக்களை கொடுத்துள்ளார்கள் 


அநத தேர்வு எழுதுபவர்களுக்கு அது மிகவும் பயன்தர கூடியதாக இருக்கின்றது.அடுத்த டேபில் தமிழ்நாடு தேர்வாணயத்தால் நடத்தப்படுகின்ற டிஎன்பிஎஸ்சி தேர்வு க்கான வினா விடைகள் கொடுத்துள்ளார்கள்.இதில் 
பொது அறிவு வினாவிடை,தமிழ் கேள்வி பதில்கள்.தமிழ் இல்ககண வினாக்கள்.வரலாற்று கேள்வி பதில்கள் என நான்கு வித தலைப்புகளில் கொடுத்துள்ளார்கள்.
இறுதியாக கொடுத:துள்ள தலைப்பில் உஙகளுக்கு தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்கின்றன. 2015 வருடத்திற்கான தமிழ் டியூஷன் உங்களுக்கு தேவையென்றால் இங்கு பதிவு செய்துகொள்ளலாம். மேலும்
தமிழில் நீங்கள் விரும்பி கேட்கின்ற பக்தி பாடல்கள் கெர்டுத்துள்ளார்கள். ஆன்லைன் எப்.எம். வசதி கொடுத:துள்ளார்கள். தமிழ் புதினங்கள் எனப்படும் தமழ் நாவல்கள் இடம்பெற்றுள்ளன்.மேலும் வெற்றிக்கான தாரக மந்திரம் விளங்கங்களுடன் கொடுத:துள்ளார்கள். தமிழில் உள்ள பிளாக்குகள் பற்றிய விவரம்கொடுத்துள்ளார்கள்.தமிழ் பழமொழிகள்.இணைய இணைப்பின் மூலம் தமிழ் கற்றல்.தமிழ் பாட புத்தகங்கள் மற்றும் தமிழ் மூலம் எளிதாக ஆங்கிலம் பயிலுதல் போன்ற விவரங்களும் கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருஙகள்.

ஒரு இணையதளத்தில் இவ்வளவு விவரங்கள் கொடுத்துள்ளது பெரிய விஷயம். நீங்களும் ஒவ்வொன்றாக பயன்படுத்திப்பர்ருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...