வேலன்:- புத்தாண்டுவாழ்த்து அட்டையை அனுப்ப



புத்தாண்டு நல் வாழ்ததுக்கள்.
புத்தாண்டுக்கு வாழ்த்துவதும் வாழ்த்தினை பெறுவதும்
இனிய அனுபவம். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர்
(செல்போனும்-இன்டர்நெட்டும் அதிகம் புழகத்தில்
வருவதற்கு முன்னர்) வாழ்த்து அட்டைகளிலே நாம்
வாழ்த்தினை தெரிவித்துகொண்டோம். புதுவருடம்,
பொங்கல்,தீபாவளி,பிறந்தநாள் மற்றும் திருமணநாள்
ஆகியவற்றுக்கு வாழ்த்து அட்டைகள் வாங்கி
கைபட எழுதி நமக்கு வேண்டியவர்களுக்கு அனுப்புவோம்.
அதே போல் நமக்கு வரும் வாழ்த்து அட்டைகளையும்
ஆவலுடன் பிரித்து அதில் உள்ள படம் பார்த்து -
வாழ்த்தினை படித்து மகிழ்வோம். காலங்கள் மாறு
கின்றது அதேபோல் வாழ்த்தும் விதங்களும் மாறுகின்றது.
இந்த தளம் நமக்கு அந்த காலத்திய வாழ்த்தும் விதத்தினை
நினைவு கூர்கின்றது.  விதவிதமான வாழ்த்து அட்டைகள்,
விதவிதமான புகைப்படங்களுடன் அழகாக காட்சி
அளிக்கின்றது. இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்.
உங்களுக்கு பிடித்த புகைப்படத்தின் கார்டினை தேர்வு செய்
யுங்கள்.
கார்டின்மீது கர்சரை வைத்து கிளிக் செய்யுங்கள். 
 உங்கள் கார்டுக்கான வாசகங்கள் பிளே ஆகும். விருப்பமான
பாடலையும் தேர்வு செய்துகொள்ளலாம். அதன்பிறகு அதன்
கீழே உள்ள Sendthis ecard கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு
 கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் நமது பெயரும் அடுத்து நமது இ-மெயில் 
முகவரியையும் தட்டச்சு செய்யுங்கள். அடுத்து மெசேஜ்
காலத்தில் நீங்கள் சொல்லவிரும்பும் வார்த்தைகளை-
வாழ்த்துகளை தெரிவியுங்கள். உங்களது வலப்பக்கம் இதன்
பிரிவியு தெரியும். பார்த்துக்கொள்ளுங்கள்.இப்போது அப்படியே
கொஞ்சம் கீழே வாருங்கள்.உங்களு்க்கு கீழ்கண்ட விண்டோவரும்.

இதில் நீங்கள் அனுப்புவரின் பெயரையும்அவரின் இ-மெயில்
முகவரியையும் தட்டச்சு செய்து என்று நீங்கள் அனுப்பவேண்
டுமோ அந்த நாளையும் தேர்வு செய்துவிடுங்கள்.நீங்கள்
அனுப்பியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஓப்பன் ஆகும். 
இதில் உள்ள view this ecard கிளிக் செய்தால் நீங்கள் அனுப்பிய 
கார்டினை மீண்டும் பார்த்துக்கொள்ளலாம்.
உங்கள் நண்பர்களுக்கு - உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து
அனுப்பி தூள் கிளப்புங்க...

உங்கள் அனைவருக்கும்
 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
என் இசைக்கச்சேரி எப்படி?
இன்றைய PSD புகைப்படம் டிசைன் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இந்த டிசைன் பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும்.


புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்தவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப் பாடம் 33 பெயரில் புகைப்படம் கொண்டுவர

பெயரில் புகைப்படம் கொண்டுவர:-
எழுத்துக்களில்-பெயர்களில்-உள்ளே புகைப்படங்களை
கொண்டுவருவது என இன்று பார்க்கலாம். நமது இணைய
நண்பர் இதுகுறித்து கேட்டுள்ளார். அவருக்கான விளக்க
பதிவு இது. டூல்கள் பற்றி வரிசையாக வரும் சமயம் மீண்டும்
இந்த டூலை பற்றி விரிவாக காணலாம்.
போட்டோஷாப் திறந்து கொள்ளுங்கள். அதில் முதலில நீங்கள்
 விரும்பும் புகைப்படத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
நான் இந்த புகைப்படத்தை தேர்வு செய்துஉள்ளேன்.
இப்போது டூல்ஸ் மெனுவில் 16 ஆவதாக உள்ள Horizontal Type
Mask Tool தேர்வு செய்துகொள்ளுங்கள். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.(T -எழுத்தானது புள்ளி புள்ளியாக காணப்படுகின்றதே
அந்த டூல்-வரிசையில் மூன்றாவதாக உள்ளது)
இப்போது மேலே உங்கள் பாண்ட் வகையினையும் பாண்ட்
அளவினையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.கீழே உள்ள
படத்தை பாருங்கள்.
இப்போது கர்சரை படத்தில் தேவையான இடத்தில் வைத்து
எழுத்துக்களை தட்டச்சு செய்யுங்கள். நீங்கள் கர்சர் வைத்ததும்
படத்தில் நிறம் மாறிவிடுவதை கவனியுங்கள்.
இப்போது மார்க்யு டூல் கிளிக் செய்யுங்கள்.படம் பழைய
நிறத்திற்கு வந்துவிடும். நமது பெயரானது பு்ள்ளிகளுடன்
காணப்படும்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
இப்போது Edit சென்று Copy கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள
புகைப்படத்தை பாருங்கள
மீண்டும் பைல்மெனு வந்து நீயு கிளிக் செய்யுங்கள் .
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஒ.கே. கொடுங்கள். உங்களுக்கு வெள்ளைநிற விண்டோ
ஒப்பன் ஆகும். பின்னர் பேஸ்ட் கிளிக் செய்யுங்கள்.
உங்கள் பெயர்மட்டும் தனியாகவும் அதன் உள்ளே
நீங்கள் தேர்வு செய்த புகைப்படமும் வருவதை காணலாம்.
கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

நான் தேர்வு செய்த மற்றும் ஒரு படம் கீழே:-
அதில் பெயரை கொண்டுவந்ததும் வந்த படம் கீழே:-
நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். அருமையாக வரும்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
இன்றைய PSD டிசைனுக்கான புகைப்படம் கீழே:-
இதில் சுமார் 20 PSD  பைல்கள் உள்ளது. இதை
தனித்தனியாக எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.
இதுவரையில் பெயரில் புகைப்படங்கள் கொண்டுவந்தவர்கள்:-
web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-கம்யூட்டரில் கரப்பான்பூச்சியை வரவழைக்க


நமது கம்யூட்டரில் ஏற்கனவே டெக்ஸ்டாப்பில் விளையாட,
தீ பிடிக்க தீ பிடிக்க,.கம்யூட்டரில்தண்ணீர் வரவழைக்க என
 முந்தைய பதிவுகளில்பார்த்தோம். பதிவினை பார்க்காதவர்கள்
 அந்த அந்ததலைப்புகளில் கிளிக் செய்தால் அந்த தளங்களுக்கு
செல்லலாம்.
கரப்பான்பூச்சிக்கு பயப்படாதவர்கள் இருப்பார்களா...
இன்றைய பதிவில் கம்யூட்டரில் கரப்பான்பூச்சியை
வரவழைப்பதை காணலாம். இந்த கரப்பான்பூச்சியை
வரவழைக்க இங்கு கிளிக் செய்யுங்கள். இது 2 எம்.பி.க்குள்
தான் உள்ள சின்ன சாப்ட்வேர்.
 இதை கிளிக் செய்து டவுண்லோடு செய்து கிளிக் செய்தபின்
உங்கள் கம்ப்யூட்டரில் கரப்பான் பூச்சி குறுக்கும்
நெடுக்கும் ஒடுவதை காணுங்கள்.
எனது மகனுக்கு சின்ன வயதில் இந்த சாப்ட்வேரை போட்டு
நீ கம்யூட்டரில் ஏதாவது செய்தால் இந்த மாதிரி கரப்பான்பூச்சி
வரும்டா என சொன்னேன். குடுகுடு என ஓடியவன் ஒரு
கட்டையை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். கொஞ்சம்
நான் கவனிக்காமல் விட்டிருந்தால் அவ்வளவுதான். மானிட்டர்
காலியாகி இருக்கும்.இதை ஏன் இங்கு சொல்கின்றேன் என்றால்
உங்கள் மகனோ -மகளோ இதுபோல் நீங்கள் இல்லாதபோது
கட்டையை எடுத்துவந்து மானிட்டரில் உள்ள கரப்பான் பூச்சியை அடிக்கபோகின்றார்கள்.
பதிவினை பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
உங்களுக்கும் ரேஷன்கார்ட் கொடுக்கப்போறாங்க...
உங்க பேர் இருக்கானு பார்த்துக்குங்க..
இதுவரை வந்துள்ள PSD புகைப்படங்களில் இருந்து
சில படங்களை எடுத்து புதிய PSD படம் உருவாக்கி
உள்ளேன். ஏற்கனவே நான் வெளியிட்ட புகைப்படங்களும்
அதில் உருவாக்கிய படமும் கீழே:-
மேலே உள்ள படத்தில் மரத்தை எடுத்துள்ளேன்.


இந்த படத்தில் மண்டபம் -படிக்கட்டு - தூண் என எடுத்துள்ளேன்.

இந்த படத்தில் புலியை எடுத்துள்ளேன்.
இந்த படத்தில் வினாயகர் மற்றும் படிக்கெட்டு எடுத்துள்ளேன்.
இவையனைத்தையும் கலந்த கலவையில உருவான படம் மேலே


இந்த படத்தை பதிவிறக்க நீங்கள் இங்குகிளிக் செய்யுங்கள்.


கரப்பான்பூச்சியை இதுவரை கம்யூட்டரில் ஓடவிட்டவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-சாப்ட்வேர்-விளையாட்டு - திரைப்படங்களுக்கான இணையதளங்கள்.

அனைவருக்கும இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
 சாப்ட்வேர் -விளையாட்டுகள்-திரைப்பட பாடல்கள்-
படங்கள்-தொலைக்காட்சி சீரியல்கள் என கொட்டி
கிடைக்கும் வலைதளங்கள் ஏராளம் -தாராளம்.
என்னிடம் கருத்துரைகளிலும் - நேரிலும் சில
முகவரிதளங்கள் கேட்ட நண்பர்களுக்காக இங்கே
சில இணையதளங்களின் முகவரி கொடுத்துள்ளேன்.
சென்று பாருங்கள் .பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
மினிநோவா.ஓ,ஆர்.ஜி. MININOVA.ORG
புத்தங்கள்-விளையாட்டுகள்-சாப்ட்வேர்கள் மற்றும்
திரைப்படங்கள் என இந்த தளத்தில் நிறைய உள்ளது.
தேவையானதை தேடி பதிவிறக்கி கொள்ளுங்கள்.
முகவரி தளம் செல்ல இங்கு கிளிக் செய்யுங்கள்.
ஷேர்ஆக்டர்.காம் SHAREREACTOR.COM
இதுவும் மினிநோவாபோல் தான். இந்த தளம் செல்ல
இங்குகிளிக் செய்யுங்கள்.
பிரதர்ஸ் சாப்ட்.BROTHERSOFT.COM.
இணைய நண்பர்கள்,கணிணி வல்லுநர்கள் என அனைவராலும்
பரிந்துரைக்கப்படும் இணையதளம் இது.இதிலும் ஏராளமான
சாப்ட்வேர்கள் உள்ளன. இதை காண இங்கு கிளிக் செய்யவும்.
டோரண்ட்ஸ்.காம்.TORRENTZ.COM
இதில் உள்ள அனைத்தும் டோரண்ட் வடிவிலேயே
இருக்கும். இதிலும் திரைப்படம் முதல் சாப்ட்வேர்,
விளையாட்டு என அனைத்தும் உண்டு். இதை காண
இங்கு கிளிக் செய்யவும்.
 திரை வானம்.காம்.SHAREREEL .COM
இதில் அனைத்தும் திரைப்படங்கள், நாடகங்கள், நகைச்சுவை
வீடியோ காட்சிகள்,டிவி நிகழ்ச்சிகள் என அனைத்தும் உண்டு்.
சீரியலை தவர விடுபவர்கள் இதில் சென்று பார்த்துக்கொள்ளலாம்.
இதை காண இங்குகிளிக் செய்யவும்.
தமிழ்தண்டர்.காம்.TAMILTHUNDER.COM
தமிழ்படங்கள்,இந்தி, ஆங்கிலம், பாடல் வீடியோக்கள்,பழைய
திரைப்படங்கள் என இதில் ஏராளமாக உள்ளது.
இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
தமிழ்திரைஉலகம்.காம்.TAMILTHIRAIULAGAM.COM
 இதிலும் திரைப்படங்களே உள்ளன. இதை காண இங்கு
கிளிக் செய்யவும்.
தமிழ்அருவி.காம்.TAMILARUVY.COM
ஆன்லைனில் கண்டுகளிக்க ஏற்ற தளம். இதை காண இங்கு
கிளிக் செய்யவும்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கின்றேன்.மீதி இருக்கும்
தளங்களை பின்னர் பதிவிடுகின்றேன். நன்றி....
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY VIDEOS:-



இன்றைய PSD DESIGN -47 க்கான புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்குகிளிக்செய்யவும்.
இதுவரையில் மேற்கண்ட தளங்களை சென்று பார்த்தவர்கள்:-

web counter

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-அறிந்தகொள்ளுவோம் u-torrent.



<span title=
சில சாப்ட்வேர்கள்-படங்கள் -யூடோரண்ட் மூலம்
பதிவேற்றியிருப்பார்கள்.அதை பதிவிறக்கம் செய்ய
கிளிக் செய்தால் Download This Torrent என நமக்கு
விண்டோ ஒன்று வரும். நம்மிடம் அதேபோல்
யூடோரண்ட் இருந்தால்தான் நம்மால் சுலபமாக
டவுண்லோடுசெய்யமுடியும். அதை பதிவிறக்கி
எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.
முதலில் இதை டவுண்லோடு செய்ய இங்கு
கிளிக்
செய்யவும்.இதுவும் மிக குறைந்த அளவினை
உடையது 215 கே.பி.தான். நீங்கள் டவுண்லோடு
 செய்ததும் இந்த மாதிரி படம் கிடைக்கும்.


இதை உங்கள் கணிணியில் இன்ஸ்டால்
செய்யவும். அதன்பின் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது நீங்கள் பதிவிறக்க வேண்டிய யூடோரண்ட்டில்
பதிவேற்றிய படத்தை பதிவிறக்க கிளிக் செய்யவும். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தை தேர்வு செய்து
(சி-டிரைவை தவிர வேறு டிரைவில் சேமித்தல்
நல்லது) ஓ.கே.கொடுங்கள்.உங்களுக்கு படம் டவுண்லோடாக
ஆரம்பிக்கும்.இப்போது உங்கள் டாக்ஸ்பாரில் இதனுடைய 
சிம்பல் இருக்கும் . கீழ்கண்ட படத்தினை பாருங்கள்.
இதில் உள்ள u சிம்பலை நீங்கள் கிளிக் செய்தால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Hide/Show u Torrent கிளிக் செய்தால் யுடோரண்ட்
விண்டோவினை காணலாம். அன்லிமிடட் தவிர மற்ற
இணைய இணைப்பு உள்ளவர்கள் இலவச பயன்பாட்டு
நேரம் தவிர மீதி நேரங்களில் இந்த டவுண்லோடினை
நிறுத்திவைக்கலாம். இலவச நேரங்களில் இதை மீண்டும்
டவுண்லோடு செய்யலாம். அதேப்போல் அவசரவேலை
யாக வெளியில் செல்கின்றோம். அப்போதும் இதில் உள்ள
Pause all Torrents கிளிக் செய்துவிட்டுசெல்லலாம். அதேப்போல்
நிறைய பைல்களையும் ஒரே நேரத்தில் இதன் மூலம்
நாம் டவுண்லோடுசெய்யலாம். இதில் உள்ள டவுண்லோடு
முடிந்ததும் நமக்கு ஒர் எச்சரிக்கை செய்திவந்த பைலானது
கம்ளிடட் காலத்திற்கு சென்றுவிடும். நாம் கவனிக்காமல்
விட்டுவிட்டால் சாதாரணநேரங்களில் அந்த பைலானது
அப்லோடு ஆகி கொண்டிருக்கும். எனவே அதை நிறுத்தி
வையுங்கள் அல்லது அதிலிருந்து ரிமூவ் செய்துவிடுங்கள்.
(கடந்த வாரம் இதைப்போல் நான் கவனிக்காமல் விட்டதில்
எனக்கு 300எம்.பி. அதிகமாக போய்விட்டது)
இப்போது நாம் சேமித்து வைத்தஇடத்தில் டவுண்லோடு
செய்த பைலானது அமர்ந்திருக்கும். பயன்படுத்திபாருங்கள்


வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
அட புதுப்பாட்டு இல்லைங்க பழைய பாட்டைதான்
கேட்கின்றேன்.
இன்றைய PSD DESIGN 46 க்கான புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்தபடம் கீழே:-
இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதுவரை யூடோரண்ட் தெரிந்துகொண்டவர்கள்:-
web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...