வேலன்:-பாண்ட்களை பார்க்க -விண் பாண்ட் வியூ-பாகம்-2

விண்பாண்ட் வியூ -winfots view-பாகம்-2
நம்மிடம் உள்ள பாண்ட்களை சுலபமாக பார்க்க இந்த சாப்ட்வேர் உதவுகின்றது:. 30 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறகம் செய்ய் இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.


இதில் நம் கணிணியில் உள்ள அனைத்து பாண்டகளும் தெரியவரும். இதிலேயே Sample 1 முதல் Sample 5 வரை கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள டேபில் நமது கணிணியில் நாம் இன்ஸ்டால் செய்துள்ள பாண்ட்களின் எண்ணிக்கை தெரியும்.தேவையான பாண்ட்டை தேர்வு செய்து தேவைப்பட்டால் பிரிண்ட்டும் செய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.                                                       வாழ்க வளமுடன்                                                                                                                           வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பாண்டுகளை கண்டு பிடிக்க.FontPage-பாகம் 1


பாண்டுகளை கண்டு பிடிக்க.FontPage-பாகம்-1.
பாண்டுகளை கண்டுபிடிக்க இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்தரும்.2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.பாண்ட் பெஜ் என பெயரிட்டுள் இந்த சாப்ட்வேரினை இன்ஸடால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.
இதில் இடது புறம் நம்மிடம் உள்ள பாண்டகளின் வகைகள் வரிசையாக வரும். வலது புறம் அந்த பாண்டினுடைய டிஸ்பிளே தெரியவரும். மேலும் இதில் பாண்ட்சைஸினை அதிகமாகவோ குறைக்கவோ செய்யலாம்.இதில் பாண்டடுடைய செரக்டர்களை அறிந்துகொள்ளலாம்கீழெ உள்ள விண்டோவில் பாருங்கள்.
சில வகையான பாண்ட்கள் பார்க்க ஒரே மாதிரியாக இருக்கும். அதில் வித்தியாசம் காண இரண்டு வகையான பாண்டகளை ஒப்பீடு செய்து நமக்கு விரும்பமானதை தேர்வு செய்துகொள்ளலாம்கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.




இதில் கூடுதல் வசதியாக நம் பென்டிரைவசிடி பேயர் உள்ளிடட வற்றிலும் இதர டிரைவ்களிலும் நாம் நமது பாண்டகளை தேர்வு செய்துகொள்ளலாம்.கீழெ உள்ள விண்டோவில் பாருங்கள்.

பயன்படுதிப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பின்குறிப்பு:- பாண்ட்வகைகளை தேடும் சமயம் இந்த சாப்டவேர் கிடைத்தது. இதுபோல் இன்னும் சாப்ட்வேர தேடுகையில் நிறைய சாப்ட்வேர்கள் பாண்ட்களை பற்றி அறிந்துகொள்ள இதுபோல் கிடைத்தது. .சின்ன திரையில் இந்த வாரம்  என்று சிலர் நடித்த திரைப்படங்களாக வெளியிடுவார்கள். அதுபோல இந்த வாரம் நமது பதிவில் பாண்ட்கள் வாரம்.உங்களுக்காக இவைகளை வரிசையாக தினசரி பதிவிடுகின்றேன் மறக்காமல் பதிவிறக்கம் செய்து பயனடையுங்கள். நன்றி.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோ கன்வர்டர் -J.Video Converter

 நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட இந்த வீடியோ கன்வர்டர் உதவுகின்றது. 6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனைபதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் உள்ள ஆட் பைல் மூலம் உங்களிடம் உள்ள வீடீயோ பைலினை தேர்வு  செய்திடவும. 


இதில் உள்ள Profiles கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதிலிருந்து உங்களுக்கு தேவையான ப்ரோபைல் தேர்வு  செய்திடவும்.
நீங்கள் எந்த பார்மெட்டுக்கு உங்கள் வீடியோவினை மாற்ற விரும்புகின்றீர்களோ அந்த பார்மெட்டினையும் தேர்வு செய்திடுங்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள கன்வர்ட் பட்டனை கிளிக் செய்திட உங்கள் வீடியோவானது நீங்கள் எந்த பார்மெட்டுக்கு மாற்ற விரும்புகின்றீர்களோ அந்த பார்மெட்டுக்கு மாறிவிடும். கீழெ உள்ள விண்டோவில் ஸ்லைடர் ஓடுவதை கவனியுங்கள். 
 உங்களது வீடியோவினை நீங்கள் ப்ரிவியுவிலும் காணலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
வீடியோ கன்வர்டிங் பணி முடிந்ததும் நீங்கள் சேமித்துவைத்துள்ள இடத்தில் சென்றுபார்த்தால் மாறுதலுக்கு உள்ளான உங்கள் வீடியோவினை காணலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-Browsing History அறிந்துகொள்ள

Browsing History அறிந்துகொள்ள இந்த சின் னசாப்ட்வேர் பயன்படுகின்றது. 320 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 7 விதமான ப்ரவுசர்கள் பெயர்கள் கொடுத்துள்ளார்கள்.நீங்கள் பயன்படுத்தும் ப்ரவுசர் எது என தேர்வு செய்து கிளிக் செய்யவும். 
 இப்போது  உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் நீங்கள் சென்றுவந்த இணையதள முகவரிகள் அனைத்தும் காணலாம்.
நீங்கள் எதாவது இணையதளம் சென்று அதன் முகவரி மறந்துவிட்டிருந்தால் இதன் மூலம் எளிதில் அந்த இணைய தள முகவரியை கண்டுபிடிக்கலாம் மேலும் நீஙகள் இல்லாத சமயம் யாராவது உங்கள் கணிணியை பயன்படுத்தி இணையதளம் பார்த்திருந்தாலும் அவர்கள் எந்த இணையதளம் பாரத்தார்கள் என சுலபமாக கண்டுபிடிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இன்ஸ்டன்ட் மாஸ்க்-தேவையில்லாததை எளிதில்நீக்க


தேவையில்லாத படங்களை எளிதில் நீக்க மற்றும் ஒரு சாப்ட்வேர்உள்ளது..InstantMask என பெயரிட்டுள்ள இந்த சாப்ட்வேர் 5 எம்.பி்.கொள்ளளவு கொண்டது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். வரும் விண்டோவில் உங்களுக்கான புகைப்படத்தினை தேர்வு செய்யவும். நான் இந்த புகைப்படத்தினை தேர்வு செய்துள்ளேன். இதில் இரண்டு சிறுவர்களுக்கு இடையில் நபர் ஒருவர் நின்றுகொண்டுள்ளார். இப்போது அவரை நாம் நீக்க வேண்டும். 
 இந்த விண்டோவில் பச்சை மற்றும் சிகப்பு நிறத்தில் ஸ்கெட்ச கொடுத்திருக்கின்றார்கள். இதில் உள்ள சிகப்பு நிற ஸ்கெட்ச் தேர்வு செய்து படத்தில் நீக்க விரும்பும் நபர்மீது அல்லது பொருள் மீது வரையவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இப்போது பச்சைநிற ஸ்கெட்ச் எடுத்து எந்த எந்த இடங்கள் வேண்டுமோ அதன் மீது வரையுங்கள்.கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
 இறுதியாக இதில் கடைசியல் உள்ள பட்டனை கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கான பணிநடைபெறும்.இறுதியாக நீக்கப்பட்ட படம் உங்களுக்கு கிடைக்கும். அதனை தனியே சேமித்துவைத்துக்கொள்ளலாம்.
இந்த சாபட்வேர் கொண்டு உங்களுக்கு தேவையில்லாததை எளிதில் நீக்கிவிடலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.                         வாழ்க வளமுடன்                                                                                                                             வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இணைய இணைப்பை துண்டிக்க

இணைய இணைப்பை துண்டிக்கவும் மீண்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இணைப்புகொடுக்கவும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்  செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுடைய டாஸ்க்பாரில் கெடிகாரம் பக்கத்தில் இதனுடைய ஐ -கான் அமரந்துகொள்ளும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இதில் உள்ள Turn off the internet கிளிக் செய்திட உங்கள் இணைய இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும். மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் இணைப்பு தேவைப்படுகின்றது என நினைத்தால் அந்த குறிப்பிட்ட நேரத்தினை செட்செய்துகொள்ளவும்.கீழெ உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இதில் உள்ள Settings கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நமது இணைய இணைப்பிற்கு நீங்கள் பாஸ்வேர்ட்  கொடுத்து்க்கொள்ளலாம். மீண்டும் நீங்கள் பாஸ்வேரட்கொடுத்தால் தான் இணைய இணைப்பு  பெற முடியும்.
இதன் மூலம் நீங்கள் வெளியில் சென்றுள்ள சமயம் வேறு யாராவது உங்கள் இணைய இணைப்பினை தவறாக பயன்படுததுவதை தடுக்கலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.                           வாழ்க வளமுடன்                                                                                                                            வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-e-Pub புத்தகங்களை படிக்க e-pub reader

நான் சமீபத்தில் ஒரு புத்தகம் டவுண்லோடு செய்தேன் அதனை பிடிஎப் பைலில் திறந்து படிக்க பார்த்தால் முடியவில்லை. நாம் பெரும்பாலும் பிடிஎப் பைலினை தான் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் பிடிஎப் பைலினை போலவே e-Pub பைலகளும் உள்ளது. அதனை நாம் சாதாரண பிடிஎப் ரீடரில் படிக்க முடியாது. அதற்காக உள்ள ரீடரில் தான படிக்க முடியும்.அதற்காக தேடுகையில் இந்த சாப்ட்வேர் கிடைத்தது. 16 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்  செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.


இதில் உள்ள + குறியை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நம்மிடம் உள்ள பைலின் டிரைவின் போல்டரை தேர்வு செய்து உங்களது e-Pub பைலினை கிளிக் செய்யவும. கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.



இதில் நமது புத்தகத்தின் பெயர் - ஆசிரியர் பெயர் -மொழி -போன்ற தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
இதில் நாம் படிக்க விரும்பும் புத்தகத்தின் ரீடர் ஆப்ஷனை தேர்வு செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Library.Network; Search.Language.Scrolling;.Selection.Css.Margins.Format.Styles.Indicatos.Rotation.Colors.Keys.Web என தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.
இப்போது உங்களுக்கான புத்தகம் திறக்கப்பட்டிருக்கும. இதில் நீங்கள்தேர்வு செய்தவற்கு ஏற்ப புத்கத்தினை ஒவ்வொரு பக்கமாக படிக்கலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.                                                                       
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-கேமரா பேக் -Camera Bag.

உங்களுக்கு  போட்டோஷாப் பற்றி ஒன்றும் தெரியாதா...கவலைவேண்டாம். இந்த சாப்ட்வேர் உங்கள் போட்டோவின் டிசைன்களை தானே செய்துவிடும். 45 எம்..பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் https://www.softpedia.com/get/Multimedia/Graphic/Graphic-Editors/CameraBag-Pro.shtml செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நடுவில் உள்ள லோட் இமேஜ் என்பதில் உங்களுடைய புகைப்படத்தினை ஹார்ட் டிரைவிலிருந்து தேர்வு செய்யுங்கள்.இதில் Styles.Adjust.Borders & Favourites என நான்குவிதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். 

 இதில் முதலில் உள்ள ஸ்டைல் கிளிக் செய்ய விதவிதான ஸ்டைலில் உங்களுக்கான புகைப்படங்கள் வரிசையாக தோன்றும். தேவையானதை கிளிக் செய்து சேமித்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
புகைப்படத்தில் ஏதாவது அடஜஸ்ட் செய்து மாற்ற விரும்பினால் இரண்டாவது டேபினை கிளிக் செய்யவும். உங்களுக்கு விதவிதமான மாறுதல்களுடன் புகைப்படங்கள் தோன்றும். தேவைப்படுவகை கிளிக் செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
மூன்றாவதாக புகைப்படங்களுக்கு பார்டர் கொண்டுவருவது. விதவிதமான பார்டர்கள் ப்ரிவியுவில் கொடுத்து உள்ளார்கள்.தேவைபடுவதை நீங்கள் கிளிக் செய்யலாம்.உதாரணத்திற்கு பிலிம் ரோல் எபெக்ட் கொண்டுவரவேண்டுமானால் இதில் உள்ள பிலிம்ரோல் எபெக்ட் கிளிக் செய்ய உங்களுககான புகைப்படம் மாறிவிடும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 
 இதனைப்போலவே உங்களுக்கான பெவரிட் புகைப்படங்களையும்கொண்டுவரலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...