வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட

யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திடவும் அதில் வீடியோக்களின் தரத்தினை VGA.SD.HQVGA.Low மற்றும்  MP3 பார்மெட்டுக்களில் மாற்றிடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும் இதில் சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால செய்ததும் உங்களுக்கான யூடியூப் வீடியோவினை தேர்வு செய்து ஒடவிடவும். பின்னர் இதில்  யூடியூப் வீடியோவின் யூஆர்எல் முகவரியை தேர்வு செய்யவும்.
இப்போது யூடியூப் டவுண்லோடரை கிளிக் செய்யவும். நீங்கள் கிளிக் பொர்டில் காப்பி செய்த யூஆர்எல் முகவரி தானாகவே இதில் பேஸ்ட் ஆகிவிடும். இப்போது இதில் உளள டேபினை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் வீடியோ எந்த பார்மெட்டில் வரவேண்டுமோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்யவும். நமக்கு வீடியோ வேண்டாம் ஆடியோ மட்டும் எம்.பி.3 பார்மெட்டில் வேண்டுமானால் அதை மட்டும் தேர்வு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
வீடியோ பதிவிறக்கம் ஆக ஆரம்பித்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும். இதில் உங்களுக்கான வீடியோ பதிவிறக்கம் :ஆவதை காணலாம். மேற்கொண்டு கூடுதலாக வீடியோக்களை பதிவிறக்கம் செய்யவேண்டுமானால் நீங்கள் வீடியோ பைல்களை கூட்டிகொண்டு செல்லலாம்.
இதில் உள்ள செட்டிங்ஸ கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ  ஒப்பன் ஆகும்.
வீடியோ பதிவிறக்கம் முடிநது சேமிக்கும் இடத்தினை நாம் முடிவு செய்யலாம்.வீடியோ தரம் மற்றும் ஆடியொ தரத்தினை முடிவு செய்யலாம். பயன்படுத்திப்பாருங்கள். 
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.

நம்மிடம் உள்ள வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு சுலபமாக மாற்ற இந்த  சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் உங்கள் கணிணியில் உள்ள வீடியோ பைலினை டிராக் அன்ட் டிராப் முறையிலோ டிஸ்க் தேர்வு செய்தோ வீடியோ பைலினை தேர்வு செய்யவும்.
இதில் உள்ள கன்வர்ட் என்பதனை கிளிக் செய்தால் உங்களுக்கு வீடியோ எந்த பார்மெட்டில் வேண்டுமொ அந்த பார்மெட்டினை தேர்வு செய்து ஒ.கே.தரவும்.

சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் வீடியோ பைலானது வேண்டிய பார்மெட்டுக்கு மாறிய பின்னர் கன்வர்ஸன் கம்ளிடட் என்னும் தகவல் நமக்கு கிடைக்கும். நாம் சேமித்துவைத்துள்ள இடத்தில் நமக்கான மாற்றிய வீடியோ கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்..

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.

போட்டோஷாப்பில் நாம் செய்யக்கூடிய அனைத்துப்பணிகளையும் இந்த சாப்ட்வேர் மூலம் நாம் சுலபமாக முடிக்கலாம்.இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் கலர் பிக்கர்.டூப்ளிகேட் புகைப்படம் கண்டுபிடித்தல்.இமேஜ் கன்வர்டர்.இமேஜ் கிராப்பர்.ஸ்கரின் கேப்ஷர் என 14 வகையான ஆப்ஷன்கள் பயன்படுத்தலாம்..
 மேலும் இமேஜின் டேடா யூஆர்எல் முகவரியையும் நாம் கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இந்த சாப்ட்வேர் Gif.Jpg.png.ico.dcx.tiff.tga.psd.bmp.ps.pdf. போன்ற  இமேஜ் பார்மெட்டுக்களை ஆதரிக்கின்றது;. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
புகைப்படங்களை அதனுடைய ரெசுலேஷன் படியும்.அளவினை பயன்படுத்தியும்.எடுக்கப்பட்ட தேதியை கொண்டும் பிரிக்கலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
புகைப்படங்கள் நாம் எடுக்கும் சமயம் தலைகீழாகவும்.வலதுபுறம் இடதுபுறம்சா ய்ந்தும் இருக்கும் .அவ்வாறான புகைப்படங்களை அனைத்தையும் ஒரே மாதிரியாக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
சின்ன சாபட்வேரில் நிறைய வசதிகள் கொடுத்துள்ளார்கள். பயன்படுததிப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க

பிடிஎப் பைல்களை சிலர பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாத்து வைத்திருப்பார்கள். மற்றவர்கள் அதனை காப்பிசெய்யவோ.திருத்தம்செய்யவோ முடியாது. அவ்வாறான பிடிஎப் பைல்களின் கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) நீக்கி பயன்படுத்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 6 எம்பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 டிராக் அன்ட் டிராப் முறையிலோ இதில் உள்ள Add Files மூலமாகவோ பிடிஎப் பைல்களை தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
பாஸ்வேர்ட் கொடுக்காத பைல்களாக இருந்தால் கீழ்கண்ட தகவல் நமக்கு கிடைக்கும்.
பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்ட பிடிஎப் பைல்களை அதே போல்டரிலோ அல்லது வேறு இடத்திலோ சேமிக்கவும. பின்னர் இதில் உள்ள டிகிரிப்ட் பட்டனை கிளிக்செய்யவும். உங்களுக்கான பிடிஎப் பைலானது கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) நீக்கி நமக்கு கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் கடவுச்சொல் நீக்கிய பிடிஎப் பைல்கிடைக்கும். பின்னர் வேண்டிய மாற்றங்கள் நாம் அதில் செய்து கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்

எம்.பி.3 பைல்கள் போலவே அளவில் குறைந்து தரத்தில் குறையாமல் எம்கேவி பைல் கிடைக்கின்றன. இணையத்தில் பெரும் பாலும் கிடைக்கின்ற பைல்கள் எம்கேவி வகைபைல்களாக இருக்கும்.அதனை நாம் பதிவிறக்கி வேண்டிய மாற்றாங்கள் செய்திடவும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 20 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட விருப்பமான பார்மெட்டினை தேர்வு செய்து அதனை மாற்றிட பயன்படுத்திப்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


 இதில் உள்ள எடிட் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். குறிப்பிட்ட பகுதியை நாம் கட் செய்து கொள்ளலாம்.
 வீடியோ பைல்களை வேண்டிய கோணத்தில் திருப்பிட இந்த சாப்ட்வேர் பயன்தருகின்றது.வீடியோவினை தலைகீழாகவும்.இடம்வலமாகவோ மாற்றலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 வீடியோவின் ஒளிநிறத்தினை கூட்டவோ குறைத்தோ கொள்ளலாம். 

வீடியோ பைல்களில் ஆடியோ பைல்களை சேர்க்கவும்.சப்டைட்டில் சேர்க்கவும். முடியும். 
வீடியொவினை நாம் யூடியூபிலும் நாம் பதிவேற்றம் செய்யலாம்.சிறிய சிறிய வீடியொ பைல்க்ளை ஒன்றாக இணைத்து ஒரே வீடியோ பைலாக மாற்றலாம். வீடியோக்களிலிருந்து தேவையான காட்சியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து புகைப்படமாக மாற்றிக்கொள்ளலாம். பயன்படுத்த எளிதாக உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர


சில இயல்பான குறியீடுகளை நமது கீபோர்டிலே கொண்டுவரலாம். 
ஸ்மைலிங் பேஸ்.ஆர்டின்.இசை குறியீடு.டிரேட்மார்க்.காப்பிரைட்,ஸ்கேயர் ரூட் என எது தேவையோ அதனை கொண்டுவரலாம். கீழே உள்ள கீ களை கீபோர்டில் தட்டச்சு செய்கையில் அதற்கான குறியீடுகள் நமக்கு கிடைக்கும். ALT+ 1 =
ALT+ 2 =
ALT + 3 =
ALT + 4 =
ALT + 5 =
ALT + 6 =
ALT + 7 = •
ALT + 8 =
ALT +9 =○
ALT+10 =◙
ALT +11=
ALT + 12 =
ALT + 13 =
ALT +14 =
ALT +15 =
ALT+16=
ALT+17=◄
ALT+18=↕
ALT+19 =‼
ALT+20=¶
ALT+21=§
ALT+22=▬
ALT+23=↨
ALT+24=↑
ALT+25=↓
ALT+26=→
ALT+27=←
ALT+28=∟
ALT+29=↔
ALT+30=▲
ALT+31=▼
ALT+32=  
ALT+33=!
ALT+34=”
ALT+35=#
ALT+36=$
ALT+37=%
ALT+38=&
ALT+39=’
ALT+40=ˤ
ALT+41=)
ALT+42=*
ALT+43=+
ALT+44=,
ALT+45=-
ALT+46=.
ALT+47=/
ALT+48=0
ALT+49=1
ALT+50=2
ALT+0150=û
ALT+0151=—
ALT+0152=˜
ALT+0153=™
ALT+0154=š
ALT+0169=©
ALT+0174=®
ALT+251=√
ALT+8236=
ALT+8721=பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க

இணையத்தின் மூலமும்  யூடியூப் மூலமும் பதிவிறக்கம் செய்யப்படும் வீடியோக்களில் லோகோ இணைத்திருப்பார்கள். சில வீடியோக்களில் தேதி மற்றும் பெயர்கள் இருக்கும்.அவ்வாறான லோகோவினை நீக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 7 எம்.பி கொளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 லோகோ நீக்க விரும்பும் வீடியொவினை தேர்வு செய்யவும்.
 இதில் லோகோ இருக்கம் பகுதியை கர்சர் மூலம் தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். வலது மூலையில் லோகோ உள்ளது.
லோகோ தேர்வு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 இதில் ரீமூவ லோகோ தேர்வு செய்யவும்.
 கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 லோகோ நீக்கப்பட்டஉடன் கீழ்கண்ட விண்டோ கிடைக்கும்.
 சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் நீக்கப்பட்ட வீடியோ உங்களுக்கு கிடைக்கும்.
லோகோவினை சுலபமாக நீக்கும் இந்த சாபட்வேரினை பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க

இப்போது வரும் ஆன்ட்ராய்ட் போன்கள்.கேமரா மோபைல்போன்கள் போன்றவற்றில் 360 டிகிரி புகைப்படங்கள் எடுக்கும் வசதி கொடுத்துள்ளார்கள். அவ்வாறு எடுக்கப்படும் புகைப்படங்களை நாம் சுலபமாக போனிலே பார்க்கலாம். ஆனால் மடிக்கணிணியிலோ,கணிணி மூலமாகவோ பார்ப்பது கடினம். உங்களுக்கு அனைத்து புகைப்படங்களும் சேர்ந்து ஓரே புகைப்படமாகதான் தெரியும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதே புகைப்படத்தினை மோபைல் போனில் பார்ப்பது போல கணிணியிலும் பார்க்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 40 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்

வரும்  விண்டோவில உங்களுக்கான 360 டிகிரி புகைப்படத்தினை தேர்வு செய்யவும். இப்போது உங்கள புகைப்படம் இதில் ஓப்பன் ஆகும். புகைப்படத்தின் கீழே கீழ்கண்ட விண்டோ இருக்கும்.


இதில் புகைப்படத்தினை பெரிது பண்ணி பார்ப்பதோ சிறியதாக மாற்றியோ பார்க்கலாம் மேலும் இதில் நான்காவதாக உள்ள டேபினை கிளிக் செயதிட உங்கள் புகைப்படத்தில் கர்சர் அம்புக்குறியுடன் தெரியவரும் கர்சனை வேண்டிய இடத்திற்கு நகரத்த முழு படமும் நமக்கு தெரியவரும்.
இதே புகைப்படத்தினை 3டி படமாகவும்.வேண்டிய அளவு ப்ரேம் செட் செய்தும் பார்வையிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட


 நீங்கள்   அரசின் எந்த ஒரு கல்வித்தகுதி பெற்றிருந்தாலும் அதனை பதிவு செய்வது அவசியமாகும். இது உங்கள் அரசின் வேலைவாய்ப்புக்கு உதவிகரமானதாக இருக்கும்.மாணவர்களின் அடிப்படை கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு கல்விதகுதியை வைத்துள்ளார்கள். நீங்கள் பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் உங்கள் கல்விதகுதியை இதில் பதிவேற்றம் செய்யலாம். அதற்கு அடுத்து வரும் ஒவ்வொரு கூடுதல் தகுதியையும் நீங்கள் பதிவேற்றிக்கோண்டே செல்லலாம். முதலில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எவ்வாறு பதிவேற்றம் செய்வது என பார்க்கலாம். முதலில் தமிழக அரசின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.in/Empower/LoginAction.htm என்கின்ற பகுதிக்கு செல்லுங்கள். அதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில வலதுபுறம் லாகின் செய்கின்ற விண்டோ கொடுத்துஇருப்பார்கள். நாம்  ஏற்கனவே பதிவிட்டிருந்தால் யுசர் ஐடி கொடுதது உள்செல்லலாம் நாம் புதியதாக பதிவு செய்ய இருப்பதால் இதில் உள்ள நீயூ யூசர் ஐடி என்பதனை கிளிக் செய்யவும். 
 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள அக்ரிமெண்ட்டில் நீங்கள் ஒப்புக்கொண்டு கிளிக் செய்யவும்.

வரும் விண்டோவில் பதிவு செய்பவர் பெயர்.பாலினம். தந்தை பெயர்.யூசர் ஐடி.பாஸ்வேர்ட்.பிறந்த தேதி.உங்கள் மொபைல் எண்.போன்ற விவரங்களை கொடுத்துவிட்டு சேவ் கொடுக்கவும்;.நட்சத்திர குறியிட்ட எந்த காலத்தினையும் காலியாக விடவேண்டாம்.
பதிவு செய்பவரின் பெயர்.தகப்பனார் பெயர்.தாய் பெயர்.பிறந்த தேதி.பாலினம்.திருமண தகவல்.மதம்.ஜாதி.ஜாதி சான்றிதழ் எண்.ஜாதி சான்றிதழ வழங்கிய அதிகாரி விவரம்.கைபேசி எண் போன்ற விவரங்களை கொடுக்கவேண்டும். பின்னர் இதில் உள்ள சேவ் கிளிக் செய்யவும்.
அடுத்து வரும் விண்டோவில் கல்வி தகுதி;.தேர்ச்சி பெற்ற ஆண்டு.படித்த மொழி.துணை மொழி.வாங்கிய மதிப்பெண்.மதிப்பெண் சா ன்றிதழ் எண் போன்ற விவரங்களை அளித் சேவ் கிளிக் செய்யவேண்டும்.
தட்டச்சு மற்றும் தொழில்நுட்ப தகுதி ஏதும் இருப்பின் அதன் விவரங்களை உள்ளீடு செய்யவேண்டும். கடைசியாக சேவ் செய்யவும். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.


தகவல்கள் சரியாக இருப்பின் ஓ.கே.தரவும். உங்களுக்கு பதிவு செய்த விவரம் பிடிஎப் வடிவில் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
ஆன்லைன் மூலம் பதிவு செய்ததால்உங்களுக்கு அலுவலக அதிகாரி கையேப்பம் இருக்காது.இதனுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர் கொண்டு உங்கள் கூடுதல் தகுதிகளை பதிவேற்றம் செய்துகொள்லலாம்.மேலும் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மறக்காமல் ரீனிவல்  செய்துகொள்ளவும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய.

தவறுதலாக டெலிட்செய்த ஆபிஸ் பைல்களை மீண்டும் ரெக்கவரி செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 8 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும்.
இதில் நீங்கள் தேடவிரும்பும் டிரைவினை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்யவும்.

சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் நீங்கள் டெலிட் செய்த பைல்கள் அனைத்தும் தம்ப்நெய்ல் வியூவில் கிடைக்கும். இதில் தேவையானதை கிளிக்செய்திட அதன் பிரிவியூ உங்களுக்கு கிடைக்கும்.

பின்னர் அதனை தனியே சேமித்து வைத்துக்கொள்ளலாம்.இதன் மூலம் வேர்ட்,எக்ஸெல் மற்றும் பவர்பாயிண்ட் பைல்களை நாம் ரெக்கவரி செய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட

நமது கேமரா.வீடியோ கேமரா போன்றவற்றில் எடுக்கப்பட்ட வீடியோக்களை நாம் விரும்பும் பார்மெட்டுக்குமாற்றிடவும. யூடியூப்போன்ற வீடியோ இணையதளங்களில் பதிவேற்றிடவும்.நமது செல்போன்.ஆன்டாயிட்போன்.டேப் போன்ற டிவைஸ்களிலும் பார்வையிடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 20 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நம்மிடம் உள்ள வீடியோவினை தேர்வு செய்யவும்.
இதில் உள்ள எடிட் கிளிக் செய்திட உங்களுக் குகீழு;கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் எந்த பார்மெட்டுக்கு உங்களுக்கு வீடியோ வேண்டுமோ அந்த பார்மெட்டுக்கு வீடியோவினை மாற்றிக்கொள்ளலாம்.மேலும் வீடியோவில் அளவினை குறைக்கவும் சப் டைட்டில் சேர்க்கவும் முடியும் ஆடியோவினையும் வீடியோவுடன் நாம் இணைக்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
உங்கள தேர்வு முடிந்ததும்  இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.ட
கன்வர்ட் முடிந்ததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியோ அங்கு இருக்கும்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...