வேலன்:-பைல் எக்ஸென்டஷன் பிக்ஸர் -File Extension Fixer

.exe பைல்கள் உள்பட அனைத்துவிதமான அப்ளிகேஷன்களையும் எளிதில் திறந்து பயன்படுத்த இந்த சின்ன சாப்ட் வேர் பயன்படுகின்றது. 400 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 இதில் உள்ள Browse  கிளிக் செய்து நம்மிடம் உள்ள அப்ளிகேஷனை திறக்கவும். பின்னர் இதில் உள்ள ரன் கிளிக் செய்திடவும். உங்களுக்கு உங்களுக்கான அப்ளிகேஷன் திறந்துகொள்வதை காணலாம். மேலும் இதில் system repair  என விண்டோ கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


கணிணியில் ஏற்படும் சிறிய பழுதுகளை இதனை கொண்டு நாம் சரிசெய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற

அடுத்தமாதம் ஆண்டுத்தேர்வுகள் ஆரம்பமாகப்போகின்றது. மாணவர்கள் தேர்வில் எளிதில்வெற்றி பெற அறிய ஆலோசனைகள்.குறிப்புகள்.எளிதில் நினைவுகொள்ளும் வழிகள் ஆகியவற்றை இந்த புத்தகத்தில் கொடுத்துள்ளார்கள். 1 எம்.பி.க்கும் குறைவான இந்த புத்தகத்தினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 இதன் இன்டெக்ஸ் பக்கத்தில் உங்களுக்கு மொழி மற்றும் கணக்கு,அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் எவ்வாறு குறிப்பெடுப்பது;.கணக்கு பாடங்களில் பார்முலாக்களை எவ்வாறு நினைவில் கொள்வது. சமூக அறிவியலில் எவ்வாறு வரலாற்று குறிப்புகளை நினைவில்கொள்வது என விரிவாக விளக்கிஉள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 ஒரு செங்கோண முக்கோணத்தில் sin o என்பது எதிர்பக்கம் மற்றும் அடுத்துள்ளபக்கதினை குறிக்கும் என படித்துள்ளோம். அதையே எளிதில் நினைவில் கொள்ள Sir Oliver's Horse Came Ambling Home To ;Oliver's Aunt என வாக்கியமாக நினைவில் கொண்டால் நமக்கான பார்முலா எளிதில் நினைவுக்கு வரும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதுபோல அவர்கள் அறிவியல் வரலாறு புவியியல் என ஒவ்வொன்றிற்கும் எளிய விளக்கங்கள் புரிந்துகொள்ளும் வகையில் கொடுத்துள்ளார்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பைல்கள் புகைப்படங்களை மற்றவர்கள் பார்வையிலிருந்து மறைக்க

மற்றவர்கள் பார்வையிலிருந்து பைல்கள்.புகைப்படங்கள்.டாக்குமெண்டுகளை மறைக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கசம் செய்திட இங்கு கிளிக் https://download.cnet.com/image-vault/3000-2193_4-10163097.htmlசெய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் புதிய பைலினை திறக்கவும். உங்களுக்கு கீழ்கண்ட பாஸ்வேரட் பாக்ஸ் ஓப்பன் ஆகும். கீழே உள்ள விண்டோவில் ;பாருங்கள்.
 உங்களுக்கான பாஸ்வேரட் தட்டச்சு செய்யுங்கள். பின்னர் இதில் உள்ள இமேஜ் என்பதில் உள்ள Add Image என்பதனை கிளிக் செய்து உங்களுக்கான போட்டோ.டாக்குமெண்ட்கள்.பைல்களை தேர்வு செய்யுங்கள்.
 உங்களுக்கான புகைப்படம் தேர்வு செய்திருந்தால்அதன் பிரிவியூ காணலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இப்போது அப்ளிகேஷனை மூடிவிடுங்கள். இப்போது மீண்டும் நீங்கள் இந்த அப்ளிகேஷனை திறக்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கான பாஸ்வேரட் தட்டச்சு செய்யுங்கள. உங்களுக்கான விண்டோ திறந்துகொள்ள உங்களுக்கான பைல்கள் இருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-குழந்தைகள் படம் வரைந்து மகிழ

குழந்தைகளுக்கு கலர்பென்சில்களோ.சாக்பீஸொ கிடைத்துவிட்டால் போதும் சுவர் முழுவதும் வண்ண வண்ண கோடுகள் வரைந்து புது சுவரை மார்டன் சுவராக மாற்றிவிடுவர். அவ்வாறு குழந்தைகள் சுவரில் கிறுக்காமல் கம்யூட்டரில் வரைந்து மகிழ  இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திஇங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதன் வலதுபுறம் நிறைய டூல்கள் கொடுத்துள்ளார்கள். இதில் நாம் பெயிண்ட் அப்ளிகேஷனில் உபயோகிக்கும் டூல்கள் இருக்கும். 
 இதன் மேல்புறம் ஒன்பது விதமான டேப்புகளும் ஒவ்வொரு டேபிலும் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட படங்களையும் கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதன் ஒவ்வொரு டேபினைகிளிக் செய்திட உங்களுக்கு அது சம்பந்தமான படங்கள் கிடைக்கும். அந்த படத்தில் ஏதாவது ஒரு படத்தினை கிளிக்செய்திட ஒவ்வொன்றிலும ;அதுசம்பந்தமான படங்களின் ஐகான்கள் கிடைக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

 திரைச்சீலைகள்.கோலங்கள.விதவிதமான கெடிகாரங்கள.விதவிதமான மலர்கள். உருவங்கள்.என்னற்ற டிசைன்கள் என விதவிதமாக நாம் வரைந்து மகிழலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


இது முற்றிலும் குழந்தைகளுக்கானது:. எனவே அவர்களுக்கு பதிவிறக்கம் செய்து வரைய சொல்லி பழக்கப்படுத்துங்கள. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-என்றும் இளமையாக இருக்க 100 வழிகள்.

மார்கண்டேயனுக்கு என்றும் பதினாறு வயது என்று சொல்லுவார்கள். திரையுலகில் திரு.சிவக்குமார் அவர்களையும் திரையுலக மார்கெண்டேயன் என்று சொல்லுவார்கள். அதுபோல நாமும் என்றும் இளமையாக இருக்க ;இந்த புத்தகத்தில் நூறு வழிகள் கொடுத்துள்ளார்கள். 5 எம்.பி.கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து ஓப்பன் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் ஒன்பது தலைப்புகளில் வழிமுறைகள் எளிமையாக கொடுத்துள்ளார்கள். 






இடைஇடையே அழகிய படங்களும்கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

புத்தகம் முழுவதும் படித்துப்பாருங்கள். வயதான உங்கள் நண்பர்கள் இருந்தால் ;அவர்களுக்கு இதனை பரிந்துரை செய்யுங்கள். 
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-ரீமைண்டர்.


நம்முடைய செயல்களை நினைவுப்படுத்த இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.300 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து கிளிக் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Configure கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் பண்டிகைகள்.பிறந்தநாள்.திருமணநாள்.என விருப்பமான தகவல்களை உள்ளீடு செய்யலாம். ஒவ்வொன்றிக்கும் தேதி யை நாம் செட் செய்துவிடவேண்டும்.
குறிப்பிட்ட நாள் வந்ததும் நமக்கு நினைவுப்படுத்தும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-E-PUB பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்ற

இணையத்தில் சில பைல்களை E-PUB பார்மெட்டில் வெளியிட்டிருப்பார்கள். நாம் அதற்காக epub ரீடரை பயன்படுத்தவேண்டும். ஆனால் இந்த சாப்ட்வேரில் நம்மிடம் உள்ள epub பைல்களை நாம் விரும்பும் பார்மெட்டிற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். 50 எம்.பி.கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம்செய்திடஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நம்மிடம்உள்ள epub பைலினை தேர்வு செய்யவும். பின்னர் இதில் கொடுக்கப்பட்டுள்ள Kindle.AZW:.PDF,DOC,Text & Custom என எந்த பார்மெட்டிற்கு பைல்தேவையோ அதனை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 
இதில் கொடுக்கப்பட்டுள்ள பிற வசதிகள்:-
It includes (All-In-One):
  • EPUB to PDF Converter
  • PDF to EPUB Converter
  • EPUB to MOBI Converter
  • MOBI to EPUB Converter
  • MOBI to PDF Converter
  • PDF to MOBI Converter
  • Kindle to PDF Converter
  • PDF to Kindle Converter
  • AZW to PDF Converter
  • PDF to AZW Converter
  • EPUB to DOC Converter
  • EPUB to TXT Converter
பொதுவாக பைல்களை கன்வர்ட் செய்யும் சமயம் நமக்கு ஒரிஜினல் பைலில் எந்த பாண்ட் அளவு உள்ளதோ அதே அளவு நமக்கு கிடைக்கும். ஆனால் இந்த சாப்ட்வேரில் நமக்கு தேவையான அளவிற்கு எழுத்துருக்களையும் மார்ஜினையும் தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.தேவையானதை தேர்வு செய்து இறுதியில் ஓ.கே.தரவும்.
 இப்போது உங்களுக்கு தேவையான பார்மெட்டினை தேர்வு செய்துவிட்:டீர்களா..;இனி இதில் நீங்கள் எந்த இடத்தில் சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தினை தேர்வு செய்யவும். இறுதியாக இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக்செய்யவும். சில நிமிடங்களில் உங்களுக்கான பைலானது மாறிஉள்ளதை காணலாம். கீழே உள்ள  விண்டோவில் பாருங்கள்.


பயன்படுத்த எளிதாகவும் சுலபமாகவும் உள்ளது. நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- விலங்குகளின் அறிய தகவல்கள்.

சிலவிலங்குகளை மட்டும் நாம்அறிந்திருப்போம். தெரியாத விலங்குகளைபற்றியும் அதனை பற்றிய அறிய தகவல்களையும் படங்களுடன் இதில அற்புதமாக விளக்கிஉள்ளார்கள். 100 எம்.பி.கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
 இதில் விலங்குகள் .பறவைகள். நீர்வாழ்வன.பறப்பன என அனைத்து விதமான விலங்குகளைபற்றியும் அதற்கான படங்களுடன் விளக்கங்கள்கொடுத்துள்ளார்கள்.
 விலங்குகளை பற்றிய தகவல்கள்.அதன் உடலமைப்பு.உணவு முறைகள்.வசிக்கும் இடங்கள்.உலகில் அதிகமாக வாழும் இடங்கள் போன்ற தகவல்களை இதில ;கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
படிக்கும் மாணவர்களுக்கும். விலங்கியல் படிக்கும் மாணவ மாணவியருக்கும் அறிய தகவல்களுடன் உள்ள புத்தகம் இது.படித்துப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பர்சனல் தகவலை பாதுகாக்க


நமக்கான பர்சனல் தகவல்களை பாஸ்வேர்ட கொடுத்து பயன்படுத்த இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 450 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நமக்கான பர்சனல் தகவலை தட்டச்சு செய்யவேண்டும். 
 தகவலுக்கு பாஸ்வேரட் கொடுப்பதனாலும் நாம்கொடுக்கலாம் 
இறுதியாக சேவ் செய்து வெளியேறலாம். மீண்டும் நாம் தகவலை பெற இதனை கிளிக் செய்திட வரும் விண்டோவில் நமக்கான பாஸ்வேர்ட் கொடுத்தால் தான் நமக்கான தகவல் தெரியவரும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களைகூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பல்வேறு பிடிஎப் பணிகள் ஒரே சாப்ட்வேரில்.

பிடிஎப் பைல்களை நாம் பெரும்பாலும் பயன்படுத்துகின்றோம். எந்த டாக்குமெண்ட் என்றாலும் அது பிடிஎப் வடிவில் இருந்தால் பயன்படுத்துவது எளிதாகும். பிடிஎப் பைல்களை படிக்க நிறைய ரீடர்கள் இருந்தாலும் அதில் படிக்கமட்டுமே முடியும். ஆனால் இந்த சாப்ட்வேரில நாம் பிடிஎப் பைல்களை எடிட் செய்யலாம். இரண்டு மூன்று பிடிஎப் பைல்களிலிருந்து பக்கங்களை எடுத்து புதிய பிடிஎப் உருவாக்கலாம். பிலிப் வியூவாக பார்வையிடலாம். பிடிஎப் பார்மெட்டிலிருந்து வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.வேண்டிய நபர்களுக்கு நேரடியாக மெயில் அனுப்பலாம். இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில நம்முடைய பிடிஎப் பைலினை டிராக் அனட் டிராப் முறையில இழுத்துவந்துவிடவும்.
 இதில் Page View.Assemble View.Flick View என மூன்றுவிதமான வியூக்கள்கொடுத்துள்ளார்கள். நீங்கள் எந்த வியூவில பார்வையிட விரும்புகின்றீர்களோ அதனுள் உங்களுடைய பிடிஎப் பைலினை இழுத:துவந்துவிடவும. நான் பிளிக் வியூவினில் பைலினை இழுத்துவந்து விட்டுள்ளேன். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
 இதில நம்மிடம் உள்ள பிடிஎப் புத்தகத்தின் பக்கங்கள் ஒவ்வொன்றாக மெதுவாக நமரும். நாம் தேவையான பக்கத்தில் கிளிக் செய்து அதனை சுலபமாக படிக்கலாம். அடுத்துள்ளது பேஜ்வியூ. இதில நம்மிடம் உள்ள பி0டிஎப் பைலினை இழுத்துவந்துவிடடவுடன் நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகியது. 
 இதில் உள்ள பிடிஎப் பக்கத்தினை வேண்டிய அளவிற்கு சூம் செய்து படிக்கலாம்;மேலும் இதிலிருந்து நேரடியாக பிரிண்ட செய்யலாம். இந்த பக்கத்தில் இருந்து நாம் பிளிப் வியூ மற்றும் அசெம்பிள் வியூவிற்கு செல்லாம்.அடுத்துள்ள அசெம்பிள் வியூபற்றி பார்க்கலாம்.. இதில நமக்கு தேவையான பிடிஎப் பைலினை டிராக் அன்ட் டிராப் முறையில் இழுத்துவந்துவிடவும். அதுபோல மற்றும் ஒரு பிடிஎப் பைலினை இழுத்துவந்துவிடவும். ஒவ்வொரு பக்கமாக பார்வையிடவும். உங்களுக்கு எந்த பக்கம் தேவையோ அதனை மேலே உள்ள டார்கெட் டாக்குமெண்டில் இழுத்துவந்துவிடவும்..இதுபோல ஒவவொரு தேவைபடும் பக்கத்தினையும் தேர்வு செய்து புதிய பிடிஎப் பைலினை உருவாக்கவும். அதனை சேமித்தும் வைத்துக்கொள்ளலாம்.
அதுபோல உங்களுடைய பிடிஎப் பைலினை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.இன்புட்டில் தேவைப்படும் பைலினை தேர்வு செய்யவும். பின்னர் வேண்டிய பார்மெட்டினை தேர்வு செய்து பின்னர் இதில் உள்ள கன்வரட் கிளிக் செய்யவும்.

சில வினாடிகளில் உங்களுக்கான பிடிஎப் பைலானது வேண்டிய பார்மெட்டுக்கு மாறிஇருப்பதை காணலாம் வேண்டிய இடத்தில அதனை சேமித்துவைத்து பின்னர் பயன்படுத்துங்கள். எளிமையான இந்த சாப்ட்வேரினை பயன்படுத்திப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-ரைட் கிளிக் மூலம் உடனடியாக அப்ளிகேஷன்களை திறக்க

கணிணியில்அடிக்கடிபயன்படுத்தும்சாப்ட்வேர்கள்.அப்ளிகேஷன்கள்.பைல்களை உடனடியாக திறந்து பயன்படுத்த இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.இதனை பதிவிறக்கம் செய்திட இங்குகிளிக் செய்யவும்.இதனை இனஸ்டால் செய்ததும் உங்கடைய ஸ்டார்மெனுவில் வந்து அமர்ந்துகொள்ளும். இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள Add Programs கிளிக் செய்து நமக்கு விருப்பமான ப்ரோகிராமினை தேர்வு செய்யவும. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.
சேவ் செய்து வெளியேறவும். இப்போது உங்களுக்கு டாக்ஸ்பாரில் இதற்கான ஐகான் வந்து அமர்ந்துகொள்ளும்.இப்போது எந்த ப்ரோகிராமினை நீங்கள் ஓப்பன் செய்ய விரும்புகின்றீர்களோ அதனை கிளிக் செய்தால் உங்களுக்கான ப்ரோகிராம் உடனடியாக திறந்துகொள்ளும. இதனால் உங்களுக்கான நேரம் மிகவும் சேமிப்பாகும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.


JUST FOR JOLLY PHOTOS:-

ATM மையத்திற்கு 100 % முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...