வேலன்:-ஒளிப்படத்தில் அசைவுபடத்தினை இணைக்க -Add Gif file to a Still mage file

ஒளிப்படத்தில் அசைவுப்படங்களை இணைக்க நாம் போட்டோஷாப் பயன்படுத்தலாம்.இதற்கு முதலில் நீங்கள்போட்டோஷாப் அப்ளிகேஷனை திறந்துகொள்ளுங்கள். பின்னர் நீங்கள் ஒளிப்படததினை தேர்வு செய்யுங்கள். பின்னர் அசைவுப்படத்தினையும் தேர்வு செய்து ஓப்பன் செய்யவும்.

போட்டோஷாப் மெனுபாரில் உள்ள விண்டோ டேபினை கிளிக் செய்ய வரும் பாப்அப் மெனுவில் அனிமேஷன் என்பதை தேர்வு செய்யவும்.
 

 உங்களுக்கு டைம்லைன் விண்டொ திறக்கும். இதில் நீங்கள் தேர்வு செய்த அனிமேஷன் படம் ஒவ்வொரு ப்ரேமாக டைம்லைனில் தெரியும்.


 இதில்  கீழே உள்ளகட்டங்களின் மேல் வலதுஓரம் மூன்று கோடுகளுடன் உள்ள ஐகானினை தேர்வு செய்து மெனுவினை கிளிக் செய்ய உங்களுக்கு பாப்அப்மெனு தோன்றும் அதில் உள்ள Select All Frames கிளிக் செய்யவும்.
 பின்னர் Copy Frames தேர்வு செய்யவும். பின் முதலில் தேர்வு செய்த ஒளிப்படத்தினை கிளிக் செய்யவும். பின்னர் மேலே சொன்ன முறையில் விண்டொ தேர்வு செய்து Paste Frame கிளிக் செய்யவும்.வரும் விண்டோவில் Paste Over Selection Link மற்றும்  Added Layers எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்து இறுதியில் ஓ.கே.தரவும்.

 
 இப்போது படங்கள் முழுவதும் விண்:டோவில் காப்பி ஆகிவிடும். இப்போது மீண்டும் விண்டோ தேர்வு செய்து வரும் பாப்அப் விண்டோவில் Match Layer Across Frame என்பதனை தேர்வு செய்திடவும். 


 இப்போது மீண்டும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும். அதில் எல்லா ரேடியோ பட்டன்களையும் தேர்வு செய்து ஒ.கே.தரவும்.
 இப்போது ஒளிப்படத்தில் உங்களுக்கு அனிமேஷன் படம் கிடைக்கும்.பின் அனிமேஷன் படத்தினை நகர்த்த விரும்பினால் அனிமேஷன் ப்ரேமினை தேர்வு செய்து பின்னர் அனிமேஷன் படத்தில் வைத்து கிளிக் செய்ய உங்களுக்கு வரும் பாப்அப்மெனுவில் Free Transform டூலினை தேர்வு செய்து அனிமேஷன் படம் எங்கு வரவேண்டுமோ அங்கு நதர்த்திக்கொள்ளுங்கள். அனிமேஷன் அளிவினை குறைப்பதனாலும் ;குறைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் என்டர் தட்டியபின்னனர் பைல்மெனு சென்று அதில் Save and Web Device என்பதனை தேர்வு செய்யுங்கள்.
 வரும் விண்டோவில உங்களுக்கான படம் தெரியவரும். அதில் ப்ரிவியூ பார்த்துக்ககொள்ளுங்கள்.
இறுதியாக செவ் கொடுங்கள். பின்னர் விரும்பிய இடத்தினில் அதனை சேவ் செய்துகொள்ளுங்கள்.


இப்போது கடலின் மேற்பறப்பில் கழுகு பறப்பது போன்ற படம் கிடைத்துள்ளது. இது கன்னியாகுமரியில் உள்ள கடலாகும். 
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இ -புக் கன்வர்ட்டர் -E Book Converter -KODO Converter.

பிடிஎப்.மோபி.இபஃப்.ஆர்டிஎப்.டெக்ஸ்ட்.எச்டிஎம்எல் போன்ற பார்மெட்டுக்கள் உள்ள இ-புக் பைல்களை ஒன்றிலிருந்து மற்றோன்றுக்கு மாற்றிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது.இந்த இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் https://www.ebook-converter.com/ebook-converter-bundle.htm செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 இதில் நீங்கள் எந்த பைலினை மாற்றி விரும்புகின்றீர்களோ அந்த பைலினைதேர்வு செய்திடவும். பின்னர் மாற்றிட விரும்பும் பார்மெட்டினை தேர்வு செய்திடவும்.
 உங்களிடம் உள்ள பேப்பர் வகையினை தேர்வு செயதிடவும். இதனை பயன்படுத்துவது மூலம் நீங்கள் விரும்பிய வகையில் உடனடியாக பிரிண்ட் செய்திடலாம்.
இறுதியாக இதில உள்ள கன்வர்ட் என்பதனை கிளிக் செய்திடவும். சில நிமிடங்கள்காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கு நீங்கள் விரும்பிய இடத்தில் மாற்றப்பட்ட பைலானது இருக்கும். பயன்படுத்திக்கொள்ளலாம். 
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-கணினி பயன்படுததுகையில் ஸ்கிரின்ஷாட் எடுக்க -மாற்றங்கள் செய்து உபயோகிக்க -Ablessoft ScreenPhoto

கணினியில் பணிபுரிகையில் சில வகை படங்கள் நமக்கு விருப்பமானதாக இருக்கும். அதனை ஸ்கிரின்ஷாட ;எடுத்து மற்றவர்களுடன் பகிரந்துகொள்ளவும் நமது ஹார்ட்டிஸ்கில் சேமிததுவைக்கவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.https://www.abelssoft.de/en/windows/Multimedia/Screenphoto இதனை இன்ஸ்டால் செய்தபின்னர் உங்களுக்கு விருப்பமான புகைப்படத்தினை ஸ்கிரின்ஷாட் எடுக்கவும்.
உங்களுக்கான விண்டோ திறககும்.வரும் விண்:டாவில் நீங்கள் தேர;வு செய்த புகைப்படம் கிடைக்கும்.
உங்களுடைய புகைப்படத்தில் எந்த பகுதி வேண்டுமோ அந்த பகுதியை மட்டும் நாம் தேர்வு செய்து வெட்டிஎடுக்கலாம்.
இதன் இடதுபுறம் நிறைய டூல்கள் கொடுத்துள்ளார்கள். தேவையாதை தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒளிப்படத்தில் குறிப்பிட்ட பகுதியை எண்கொடுக்க இதில் வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமான இடத்தில் எண்கள் கொடுத்துக்கொள்ளலாம்.
ஓளிப்படத்தில் எழுத்துக்கள் சேர்த்தல் கோடுவரைதல் போன்ற செயல்கள் செய்யலாம். மேலும் ஒளிப்படத்தினை விரும்பிய பார்மெட்டில் மாற்றிடவும் பிடிஎப் பைலாக மாற்றிடலாம்.
விரும்பிய இடததில் சேமிக்க -பிரிண்ட் எடுக்க -இமெயில் அனுப்ப -பேஸ்புக் -டுவிட்டர் கணக்குகளுக்கு அனுப்ப வசதி உள்ளது. பயன்படுத்திப்பர்ருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...