வேலன்:-ஜிமெயிலினை பாஸ்வேர்ட்பாதுகாப்பு கொடுத்து அனுப்பிட

இணையத்தில் ஜிமெயில் மூலமாக நாம் தகவல்களை அனுப்புகினறோம். அவ்வாறு அனுப்பும் தகவல்களை மற்றவர்கள் படிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. அப்படி அனுப்பிடும் ஜிமெயிலினையும் பாஸ்வேர்ட் ;கொடுத்து பாதுகாப்பாக அனுப்பிட இந்த இணையதளம் உதவிசெய்கின்றது. இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இங்கு சென்றதும் உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்கள் இமெயில் முகவரி நீங்கள் அனுப்பவிருப்புவரின் இமெயில் முகவரி.பாஸ்வேர் முதலியவற்றை தட்டச்சு செய்யவும். பின்னர் அனுப்பவேண்டிய தகவலை தட்டச்சுசெய்து ஒகே தாருங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 நீங்கள் அனுப்பியநபருக்கு மெயில் கீழ்கண்டவாறு வந்திருக்கும். அவர் அதனை திறக்கும் சமயம் அவரிடம் பாஸ்வேர்ட் கேட்கும்.
பாஸ்வேர்டினை தட்டச்சு செய்தர்ல அவருக்கான தகவல் தெரியும்.

நாம் தகவலை அனுப்பிய பிறகு அவருக்கு நாம் பாஸ்வேர்டினை நேரிலோ.தொலைபேசியிலோ குறுந்தகவலாகவோ அனுப்பிவிடலாம். பாஸ்வேர்டினை அவர்பார்த்து அவருக்கான மெயிலினை திறந்து பயன்படுத்தலாம். இதன் மூலம் நாம் அனுப்பும் ஜிமெயிலானது இரண்டுமடங்கு பாதுகாப்பாக மாறிவிடுகின்றது. நீங்களும் பய்ன்படுததிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன். 

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...