வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN

சிலர் பழைய வாகனங்களை வாங்க விரும்புவார். ஆனால் அதன் தயாரிப்பு விவரம்.உரிமையாளர் விவரம். இன்சூரன்ஸ் விவரம்,எப்சி விவரம் தெரியாது.மத்திய அரசின் இந்த இணையதளம் வண்டியின்  வாகனத்தின் அனைத்து விவரங்களையும்நமக்கு தருகின்றது. இதன் இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். அங்கு சென்றதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் முதலில் உள்ள கட்டத்தில் உங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வண்டியின் வாகனத்தின்  எண்ணினை தட்டச்சு செய்திடவும். கீழே உள்ள கேப்சா கோடினை தட்டச்சு செய்திடவும்.
 சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கு வண்டியின் -வாகனத்தின் முழுவிவரம் தெரியவரும்.
வண்டி-வாகனம்  எங்கு பதிவு செய்யப்பட்டது,வண்டியின் -வாகனத்தின் பதிவு எண்,பதிவு செய்த தேதி,செஸ் எண்.இஞ்சின ;எண்,உரிமையாளர் பெயர்,வண்டியின் வாகனத்தின்  மாடல்,தயாரிப்பு நிறுவன பெயர்.இன்சூரன்ஸ் விவரம்,பாலிஸி விவரம் வண்டிக்கு-வாகனத்திற்கு  பைனாஸ் போட்டிருந்தால் அதன் விவரம் என அனைத்து விவரங்களும் நமக்கு தெரிந்துவிடும். பழைய வண்டி வாகனம் வாங்குதாக இருந்தால் இந்த விவரங்களுடன் வண்டி வாகன செஸ் மற்றும் இஞ்சின் எண் சரியாக இருந்தால் வண்டியை வாகனத்தினை நீங்கள் தைரியமாக வாங்கிக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்
வாழ்கவளமுடன்
வேலன். 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...