
DVD கட்டர் உபயோகிப்பது எப்படி?
நம்மிடம் இப்போது சாதாரணமாக DVD க்கள்
உள்ளது. அதில் நாம் விரும்பிய பாடல்கள்,
சண்டைகாட்சிகள், நகைச்சுவைகள் என
அந்த படத்தில் விரும்பியதை கட் செய்து
தனியே பார்க்க விரும்புவோம். ஆனால்
DVD யிலிருந்து நாம் விரும்பியதை
எப்படி கட் செய்து தனியே சேமிப்பது என
இப்போது பார்ப்போம்.
முதலில் இந்த தளம் சென்று இந்த இலவச
சாப்ட் வேரை டவுண்லோடு செய்து கொள்ளுங்கள்.
முகவரி தளம்:-http://www.aivsoft.com/downloads/dvdcutter/download.html
இப்போது இந்த சாப்ட்வேரை நிறுவிவிட்டோம்.
இதை கிளிக் செய் து ஓப்பன் செய்யவும்.

மேற்கண்ட தளம் உங்களுக்கு ஓப்பன் ஆகும்.
அடுத்து நீங்கள் இதில் உள்ள ஓப்பன் செலக்ட் செய்யவும்.

நீங்கள் ஓப்பன் செலக்ட் செய்ததும் கீழ்கண்ட
தளம் ஓப்பன்ஆகும்.

நீங்கள் கட் செய்ய விரும்பும் படம் கம்யூட்டரில் சேமித்து
இருந்தால் படம் உள்ள டிரைவையும் டிவிடியிலேயே
இருந்தால் நேரடியாக டிவிடி டிரைவ் உள்ள டிரைவையோ
தேர்ந்தெடுக்கவும்.
தேவையான டிவிடி பட போல்டரை தேர்ந்தேடுத்ததும்
உங்களுக்கு நீங்கள் தேர்ந்தேடுத்த டிவிடி படம்
ஓட ஆரம்பிக்கும்.
படம் ஓடட்டும். நீங்கள் விரும்பும் பாடலோ
காமெடிகாட்சியோ அல்லது சண்டைகாட்சியையோ
வரும் சமயம் நீங்கள் இதில் உள்ள Set Start
கிளிக் செய்யவும்.

உங்களுக்கு இதில் உள்ள Slider Position நகர ஆரம்பிக்கும்.
நீங்கள் தேர்வுசெய்த பாடலோ - பட காட்சிகளோ முடிவடை
யும் சமயம் அதில் உள்ள Set End கிளிக் செய்யவும்.

உங்களது Slider Position ஆனது மேற்கண்ட வாறு
நீல நிறத்துடன் காட்சியளிக்கும்.

அதுபோல் உங்களுக்கு இந்த Track Time மும் கிடைக்கும்.
அடுத்து நீங்கள் தேர்வு செய்ததை Save Selection
செய்யவும்.

நீங்கள் தேர்வு செய்தது கணிணியின் டிரைவாக இருந்தால்
தனியே போல்டர் போட்டு சேமித்து வைக்கவும். அதுபோல்
டிவிடி டிரைவாக இருந்தால் கணிணியின் டிரைவில்
சேமிக்கவும். டிவிடி டிரைவில் சேமிக்க முடியாது.

இப்போது உங்களுக்கு மேற்கண்ட வாறு தளம்
தேர்வாகும். இதில் இந்த சிலைடிங் முடிந்ததும்
உங்களுக்கு இந்த வாறு தோன்றும்.

அடுத்து நீங்கள் சேமித்து வைத்ததை மீண்டும்
ஒரு முறை சோதித்து பார்க்கலாம்.
இந்த சாப்ட்வேரை உபயோகித்து பாருங்கள்.
கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
உங்கள் கம் யூட்டரில் C-Drive ல் அதிக படியான சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்யாதீர்கள். C-Drive –ல் அளவின் பாதிக்கு மேல் காலியாக வைத்திருங்கள். இதனால்கணிணியின் வேகம் கூடக்கூடும்.