வேலன்:- புகைப்படங்களைதேவையான வகைக்கேற்ப பிரிக்க-Smart Photo Import

நமது கேமராவில் விதவிதமான புகைப்படங்கள் எடுத்திருப்போம். அதை மொத்தமாக கணிணியில் சேர்த்துவைத்திருப்போம்.அதை பெயரளவிலும்.தேதிவாரியாகவும்.அளவின் படியும் நாம் விரும்பியபடி பிரித்து வைத்துக்கொள்ளலாம். 5 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்தபின் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 நமக்கான புகைப்படங்களை தேர்வு செய்தபின்னர் இதில் உள்ள Name.Date.EXIF Date.Size.Folder.File Type.என ஏதுவேண்டுமோ அதனை தேர்வு செய்யவும். 
 புகைப்பட பார்மெட்டினையும் தேதியையும் நாம் தேர்வு செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்
 Import Options ல் நமக்கு தேவையான தகவல்களை உள்ளீடு செய்யலாம். சப்ஜெக்டில் நாம் எந்த நிகழ்ச்சியின்போது புகைப்படம் எடுத்தோமோ அந்த நிகழ்ச்சியை இதில் தட்டச்சு செய்யலாம்
இறுதியாக புகைப்படங்களை அதே போல்டரில் மூவ் செய்தோ அல்லது வேறு போல்டரில் காப்பி செய்தோ பயன்படுத்தலாம். குறிப்பிட்ட போல்டரில் சென்று பார்த்தால் நமக்கான புகைப்படம் தனிதனியே நாம் குறிபிட்டபடி இருக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...