வேலன்:-SLR கேமரா பயன்படுத்தும் வழிமுறைகள்.

பள்ளியில் படிக்கும் காலங்களில் குரூப் புகைப்படம் எடுக்கையில் அனைத்து மாணவர்களையும் நிற்க வைத்து டிரங் பெட்டி சைஸ் கேமராவை கருப்பு துணியை போர்த்தி புகைப்படம் எடுப்பார்கள்.அடுத்து கருப்பு வெள்ளை புகைப்படங்கள் வந்தது.அடுத்து கலர் புகைப்படங்கள் வந்தது. அதுவும் முதலில் சிங்கப்பூர் மலேசியாவில் சென்று பிரிண்ட் போட்டுவருவார்கள்.தற்போது டிஜிட்டல் வரை வந்து அதற்கு மேலும் மாடல்கள் கேமரா வந்துவிட்டது.SLR கேமராவும் அந்த வகையில் வந்துள்ள கேமரா..இதில் பல செட்டிங்ஸ் உள்ளது. ஒவ்வொரு செட்டிங்ஸ்ஸையும் நாம் செட் செய்து பிரிண்ட்போட்டு ரிசல்ட் எப்படி வருகின்றது என பார்க்கவேண்டும். ஆனால் இந்த தளத்தில் SLR கேமரா மூலம் நாம் எடுக்கும் புகைப்படங்களை விதவிதமான செட் செய்து அப்போதே ரிசல்ட் பார்க்கலாம்.அந்த முகவரி தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில ஓரு சிறுமியின் புகைப்படம் இருக்கும். அதில் கீழே பலவிதமான செட்டிங்ஸ் இருக்கும். நாம்அதில் உள்ள ஸ்லைடரை தேவையான அளவுக்கு நகர்த்தி பின்னர் அதில் உள்ள Snap Photo கிளிக் செய்யவும்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.நமது செட்டிங்ஸ்க்கு ஏற்ப படம் நமக்கு டிஸ்பிளே ஆகும்.
நமது புகைப்படத்தை பற்றிய விமர்சனமும் உடன் தோன்றும். அதற்கேற்ப நாம் புகைப்படங்கள் எடுக்கும் திறமையை வளர்த்துக்கொள்ளலாம்.இந்த பதிவு புதிதாக கேமரா வாங்க நினைப்பவர்களுக்கும் ஏற்கனவே கேமரா வைத்துள்ளவர்களுக்கும் பயன்படும். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

கக்கு - மாணிக்கம் said...

மாப்ள....வேலன் வாழ்க வாழ்க.......
யாரங்கே ..நம்ம மாப்ஸ்க்கு கிப்டு கொடுக்க அந்த டிரங் பெட்டி சைஸ் காமெராவை கொண்டுவா...


மாப்ஸ்... வண்டி கொண்டு வந்திரிக்கியலா?? இல்ல நம்ம "ஆட்டோதான்" வரணுமா??

sakthi said...

அண்ணா பயன்படுத்தி பார்த்தேன் நல்லா இருக்குது,நன்றி
நட்புடன் ,
கோவை சக்தி

கக்கு - மாணிக்கம் said...

அட போங்க மாப்ஸ்.....அந்த பாப்பா ஆடிகினே நீதே ...நா எங்கனா போட்டோ புடிகிரதாம் ?

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
மாப்ள....வேலன் வாழ்க வாழ்க.......
யாரங்கே ..நம்ம மாப்ஸ்க்கு கிப்டு கொடுக்க அந்த டிரங் பெட்டி சைஸ் காமெராவை கொண்டுவா...


மாப்ஸ்... வண்டி கொண்டு வந்திரிக்கியலா?? இல்ல நம்ம "ஆட்டோதான்" வரணுமா??//

அட..நீங்க இன்னும் அந்தமாடல் கேமராவை வைத்துக்கொண்டு இருக்கீங்களா?...அப்படியே வைத்திருங்கள்.நம்ம ஜீர்கேனுக்கு(ஜெய்காந்துக்கு) கல்யாணம் ஆகும்போது பிரசண்ட் பண்ணிவிடலாம்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

sakthi said...
அண்ணா பயன்படுத்தி பார்த்தேன் நல்லா இருக்குது,நன்றி
நட்புடன் ,
கோவை சக்திஃஃஃ

நன்றி சக்தி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்..

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
அட போங்க மாப்ஸ்.....அந்த பாப்பா ஆடிகினே நீதே ...நா எங்கனா போட்டோ புடிகிரதாம் ?ஃஃ

ஆடாம நிக்கறத்துக்கு அதுஎன்ன சிலையா...நீங்கள் போட்டோ எடுங்கள் சரியாக வரும்..
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...