வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்தகொள்ள


7 வயது முதல் 13 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான ஆங்கில இலக்கணத்தை சோதனை செய்ய இந்த சின்ன பிளாஷ் பயன்படுகினறது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை டவுண்லோடு செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களுக்கான ஆங்கில இலக்கண கேள்விகள் கேட்கப்படும்.இதற்கான சரியான விடையையும் கீழே கொடுத்திருப்பார்கள்.எது சரியான விடையோ அதனை கிளிக் செய்து கீழே உள்ள சப்மிட் கிளிக் செய்யவும்.
உங்களது சரியான விடையாக இருந்தால் பக்கத்தில் உள்ள கட்டத்தில் பச்சை நிறமும் விடை தவறாக இருந்தால் ஆரஞ் நிறமும் கிடைக்கும். கீழே கடிகாரம் ஓடிக்கொண்டே இருக்கும். 
ஒரு கேள்வி முடிந்து அடுத்த கேள்வி வரும் சமயம் முந்தைய கேள்விக்கான சரியான விடை கீழே டிஸ்பிளே ஆகும். 50 கேள்விகள் முடிவில் நீங்கள் எடுத்த ஸ்கோர் விவரம் தெரியவரும். சின்ன பசங்களுக்கான கேள்விகள் என்றாலும் உங்களது ஆங்கில இலக்கணத்திறனை நீங்களும் சோதித்துப்பாருங்களேன்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

1 comments:

king hasbulla said...

கட்டாயம் படிங்க
வணக்கம் சேர் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது எனக்கு ஒரு உதவி செய்ங்க சேர் போன் ரிபியரிங் சம்பதமான தகவல்ல்களை தமிழ்ல வழங்கினா பெரிய உதவி பிளீஸ்
aseesrisvi@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...