வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பிரிண்ட்செய்திட


புகைப்படங்களை வேண்டிய அளவிற்கு மாற்றி தேவையான அளவிற்கும் தேவையான எண்ணிக்கைக்கும் பிரிண்ட் செய்திட நாம் போட்டோஷாப்பினை பயன்படுத்துவோம். ஆனால் போட்டோஷாப் துணையில்லாமல் இந்த பணிகளை செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது.3 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் https://download.cnet.com/primg/3000-18488_4-75836592.htmlசெய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்தபின் வரும் விண்டோவில் உங்களிடம் உள்ள புகைப்படங்களின் போல்டரை தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.உங்களுடைய புகைப்படங்கள் தம்ப்நெயில் வியூவில் நமக்கு தெரியவரும்.

 வருகின்ற விண்டோவில் நமக்கு தேவையான புகைப்படத்தினை தனிதனி புகைப்படமாக பார்வையிட புகைப்படத்தினை கிளிக் செய்திடவும். இப்போது புகைப்படம் நமக்கு சிங்கில் புகைப்படமாக தெரியவரும்.
 இப்போது இதில் உள்ள மூன்றாவது டேபான Multiple Fixed Form கிளிக் செய்து நமக்கு தேவையான புகைப்படத்தினை வேண்டிய அளவிற்கு மாற்றிக்கொள்ளவும் மேலும் புகைப்படங்கள் எத்தனை ரோ வரவேண்டும் -எத்தனை காலங்கள் வரவேண்டும் என்பதனையும் முடிவு செய்துகொள்ளவும்.


இதில் உள்ள பேஜ் செட்டப் கிளிக்  செய்து பின்னர் பிரிண்ட ஆப்ஷன் கிளிக் செய்து உங்களுக்கு தேவையான புகைப்படங்களை பிரிண்ட செய்துகொள்ளவும்.போட்டோஷாப் துணையில்லாமல் இந்த சாப்ட்வேர் பயன்படுவதால் அவசரத்திற்கு இது அவசியமானதாகும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன் 
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள மென்பொருள்... மிக்க நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

நேரம் கிடைப்பின் வாசிக்க அன்புடன் அழைக்கிறேன் :

http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Pain-Gain.html

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...