வேலன்:-மொழியை எளிதில் அறிந்துகொள்ள

தமிழ்.ஆங்கிலம்,உருது.தெலுங்கு.மலையாளம்.கன்னடம்.இந்தி ஆகிய மொழிகளை நாம் ஒரளவு தெரிந்துவைத்திருப்போம். எழுத்துருக்களை பார்க்கும் சமயம் நாம் இந்த மொழி என எளிதில் அறிந்துகொள்ள முடியும். ஆனால் சில மொழிகளை பார்க்கும் சமயம் நமக்கு அது எந்த மொழி என்றே தெரியாது.இவ்வாறு மொழிகளை அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 470 மொழிகளை இனம் கண்டுகொள்ள இந்த சாப்ட்வேர் வழிவகை செய்கின்றது. 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
 இதில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய மொழியை தேர்வு செய்தோ - அல்லது -பேஸ்ட் செய்தோகொள்ளவும்.இதில் உள்ள Recognize Language அல்லது கீ-போர்ட்டில் F9 அழுத்தவும். சில வினாடிகளில் நாம் தேர்வு செய்த எழுத்து எந்த மொழி என நமக்கு கீழ்உள்ள விண்டோவில்  தெரியவரும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நான் நமது தமிழ்மொழியை தேர்வு செய்துகொடுத்துள்ளேன்.கீழே உள்ள  விண்டோவில் பாருங்கள்.
இதில் நமது எழுத்துருவின் அளவினை நாம் விரும்பும் அளவிற்கு எளிதில் மாற்றிக்கொள்ளளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன் 
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பயன்படும் மென்பொருள்... நன்றி...

Unknown said...

neli jmohnmuksh மிகவும் பயன் பாட்டுக்கு உள்ள மென்பொருள் மிக்க நன்றி

timesroman said...

anna vanakam ungal pathuvugal anaithum miga miga arumai ungal email mugaveri koduthal ennuku sirthu uthaviyaga irukum. mudtithal kodukavuvum .if u any typing mistake sorry i dont know tamil typing.
by
Raj

Related Posts Plugin for WordPress, Blogger...