வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க

சில வெப் தளங்களை பயன்படுத்துகையில் பாஸ்வேரட கொடுத்து உள்நுழைவோம்.முதன்முதலாக பயன்படுத்துகையில் நமது யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டினை சேவ் செய்துகொள்ளவா என கேட்கும் நாமும் சேவ் கொடுத்து அந்த இணையதளத்தினை பயன்படுத்திவருவோம். அவ்வாறு நாம் உள் நுழைந்து பயன்படுத்தும் யூசர்நேம் மற்றும்பாஸ்வேர்டினை நாம் தனியே குறித்து வைத்திருந்தால் சரி..அவ்வாறு இல்லையென்றால் யூசர்நேம் மற்றும் பாஸ்வேரட மறந்து மீண்டும் அந்த இணையதளம் திறப்பதற்கு சிரமாகும். கம்யூட்டரில நினைவகத்தில் உள்ள யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டானது நாம் மீண்டும் கணிணியை பார்மேட் செய்யும் வரை இருக்கும். பார்மேட் செய்தபின் பாஸ்வேர்ட நமக்குதெரியவில்லையென்றால் சிரமமே....அவ்வாறு மறந்துவிட்ட பாஸ்வேர்டினை நினைவில் கொண்டுவர இந்த சின்னதாக மாறுதல் செய்தால் நமக்கான பாஸ்வேர்டினை நட்சத்திர குறியில்லாமல் வேர்டாக பார்க்கலாம். அதனை எவ்வாறு பார்ப்பது என காணலாம். முதலில் உங்கள் பெயர் மற்றும் பாஸ்வேர் உள்ள ஏதாவது ஒரு இணையதளத்தினை திறந்துகொள்ளுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஓப்பன் :ஆகும். இதில் பாஸ்வேர்டினை கர்சர் மூலம் தேர்வு செய்துகொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் ஓ,கே.தரவேண்டாம். பின்னர் மவுஸ் மூலம் ரைட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




 அதில கடைசியாக உள்ள Inspect element என்பதனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் ஹைலைட் செய்த வரி உங்களுக்கு கிடைக்கும். அதில பாஸ்வேர் என்பதற்கு முன் Text (டெக்ஸ்ட்) என ஆங்கிலத்தில தட்டச்சு செய்யுங்கள்.  உங்களுக்கான பாஸ்வேரட் விண்டோவில் உங்களது பாஸ்வேர்ட் விண்டோவானது டெக்ஸ்டாக தெரியும். 
தனியாக குறித்து வைத்துக்கொள்ளவும். பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பின்குறிப்பு:- ப்ரவ்சிங் சென்டர்களிலோ -அலுவலகங்களிலோ - பிறருடைய கணிணிகளிலோ இணையதளம் பயன்படுத்துகையில் எக்காரணம் கொண்டும் உங்கள் பெயர் மற்றும் பாஸ்வேர்ட்களை சேவ் செய்யாதீர்கள். மேலே சென்ன வழிமுறைகளில் உங்களுடைய யூசர்நேம் மற்றும் பாஸ்வேரட்களை மற்றவர்கள் எளிதில் அறிந்துகொள்ளலாம்.எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

'பரிவை' சே.குமார் said...

எனக்கு அவசியமானதுங்க...
அடிக்கடி பாஸ்வேர்டை மறந்துடுவேன்...
பகிர்வுக்கு நன்றி வேலன் சார்.

வேலன். said...

சே. குமார் said...
எனக்கு அவசியமானதுங்க...
அடிக்கடி பாஸ்வேர்டை மறந்துடுவேன்...
பகிர்வுக்கு நன்றி வேலன் சார்.//நன்றி குமார் சார்...தங்கள் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

Anonymous said...

Thanks a lot frined
-Vasu

வேலன். said...

Anonymous said...
Thanks a lot frined
-Vasu

நன்றி வாசு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...