வேலன்:-வாக்களர் அடையாள அட்டை ஆன்லைனில் பதிவு செய்ய

வாக்காளர் அட்டைக்கு நமது பெயரை புதியதாக சேர்க்க.முகவரி மாற்றம் செய்ய.பெயர் திருத்தம் செய்ய.முகவரி திருத்தம் செய்ய என ஆன்லைனில் வசதி செய்து கொடுத்துள்ளார்கள். அதற்கான இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இதனை கிளிக செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Form 6,Form 7,Form 8 & Form 8A என கொடுத்துள்ளார்கள். உங்களுக்கு எது தேவையானதோ அதை கிளிக செய்யவும்.
 நான் புதியதாக வாக்காளர் பெயர் சேர்க்க Form 6 என்பதனை கிளிக் செய்துள்ளேன்.அப்போது உங்களுக்கு ஒரு எச்சரிக்கை சேதி வரும் இதற்கு முன் நீங்கள் பதிவு செய்துள்ளீர்களா என கேட்கும். இல்லை யென்று கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில முதலில் உங்கள் மாவட்டத்தினை தேர்வு செய்யவும். பின்னர் உங்களது சட்ட மன்ற தொகுதியை தேர்வு செய்யவும்.அடுத்து உங்கள் பெயர் குடும்ப பெயர் தட்டச்சு செய்யவும். பின்னர் 2015 ஜனவரி அன்று உங்கள் வயது என்ன என்பதனை குறிப்பிடவும்.அடுத்து பிறந்த தேதி அறிந்திருந்தால் அதனை குறிப்படவும். நீங்கள் பிறந்த ஊர்,மாவட்டம்.இடம் முகவரி என அனைத்தையும் தெரிவிக்கவும். நீங்கள் தட்டச்சு செய்ய    ஏதுவாக நேரடி கீபோர்ட் இணைத்துள்ளார்கள். இதன் மூலம் நீங்கள் எளிதில் தமிழில் தட்டச்சு செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

 அடுத்து உங்கள் புகைப்படத்தினை ஸ்கேன்செய்து அதன் அளவானது 350 கே.பி.க்கு மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனை அப்லோடு செய்யுங்கள். உங்கள் தொலைபேசி எண் மற்றும இ-மெயில் முகவரியை கொடுங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அவர்களது பெயரையும் உங்களுக்கும் அவருக்கும் உள்ள உறவு முறையையும்.அவர்கள் அட்டை எண்ணிணையும் குறிப்பிடவும்.
அனைத்து விவரங்களும் பதிந்த பின்னர் இதில் உள்ள வெரிபிகேஷன் கோடினை தட்டச்சு செய்து விண்ணப்பத்தினை சமர்ப்பணம் செய்யுங்கள். சில நாட்களில் உங்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை உங்களை வந்து அடையும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வ ளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

5 comments:

K. Manoharan said...

I had a bitter experience with this online booking of Voters ID. Last year I had registered for change in address for me and my wife. I had also registered for new Card for my son. All the three applications were registered and given specific ID Nos. Later, the Election Commission staff called me over phone to come personally to their Zonal office to hand over the photos and proof of residence (for me and wife only). No report about my son's application. The staff (She) said that they could not come and verify our application and hence asked me to come personally to the Zonal office as above. She should have come and personally verified the facts and made corrections in the electoral role. If I had to visit the Zonal office personally, I would have opted to submit the application with proof in the special camps itself. Why had I to visit the Zonal office taking leave (permission)on that day. I had also submitted proof and photo for my son, indicating the online registration No. But no use.
At last I could only change the address of me and my wife. Till now I had not got Voter ID for my son. (My request for change in photo too was not taken effect).

If the Election Commission asks to attach scanned image of proof of ID or residence, it can be done at the registration stage itself, to avoid asking us to visit personally their Zonal office.

K. Manoharan, Saidapet.

Anonymous said...

I used to change my name (corrected the spelling mistake) and photo (update the new photo). Let's see what happen ?

வேலன். said...

K. Manoharan, Saidapet.//அதுதான் தமிழ்நாடு..நீங்கள் மிக அதிர்ஷ்டசாலியாக இருந்தால் உங்கள் கோரிக்கை ஆன்லைனில் நிறைவேரிடும். நேரில் சென்றாலே சமயத்தில் காலம்கடத்திவிடுவார்கள். பொறுத்திருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Anonymous said...
I used to change my name (corrected the spelling mistake) and photo (update the new photo). Let's see what happen ?

நீங்கள் அப்ளிகேஷன் முழுவதுமாக நிரப்பி முடித்ததும் உங்களுக்கு பத்து இலக்க ஐடி நம்பர் தருவார்கள் அதனை இந்த லிஙக்கில் http://elections.tn.gov.in/apptrack/
சென்று உங்களுடைய அப்ளிகேஷன் தற்போதைய நிலவரத்தினை அறிந்துகொள்ளலாம்;. வருகைக்கு நன்றி...வாழ்கவளமுடன் வேலன்.

உலகால் அறியப்படாத ரகசியங்கள் said...

அருமையான பதிவு.. தேடலில் ஒரு நிம்மதி.

Related Posts Plugin for WordPress, Blogger...