வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

 வாக்காளர் அடையாள அட்டையையும் ஆதார் ;அட்டையையும் இணைக்கும் பணி தற்போது நடந்துவருகின்றது. இதற்காக சிறப்பு முகாம்களும் அமைத்துள்ளார்கள். இதுதவிர ஒவ்வொரு வீடாக சென்றும் ஆதார் அட்டையையும் வாக்காளர் அட்டை எண்ணையும் இணைத்துவருகின்றார்கள். இணையத்திலும் நாம் சுலபமாக இவை இரண்டையும் இணைத்துக்கொள்ளலாம். முதலில் அவர்கள்இணையதளமான http://nvsp.in/ என்கின்ற இணையதளத்தினை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும். அவ்வாறு வரும் விண்டோவில் கீழ்கண்ட நிரலில் கடைசியாக உள்ள ஐகானை கிளிக் செய்யுங்கள்.
 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள ஆதார் பெயரை எவ்வாறு ஆதார் அட்டையில்உள்ளதோ அதனைபோன்றே இந்த அப்ளிகேஷனிலும் நிரப்புங்கள்.
 EPIC நம்பர் என கேட்டுள்ளார்கள். உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டையிருந்தால் அதில் இந்த எண் இருக்கும். வாக்காளர்அடையாள அட்டை கைவசம் இல்லாமல் இருந்தால் உங்கள் பெயர் முகவரி.வயது. இருப்பிடம் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்தால் உங்களுக்கான வாக்காளர் அடையாள எண் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

 இதனை அடுத்து உங்கள் ஆதார் எண் மற்றும் உங்கள் தொலைபேசி எண் அல்லது உங்கள் இமெயில் முகவரிகொடுத்து சப்மிட் செய்யுங்கள்.

 சில நொடிகள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் ஆதார் அடையாள அட்டையின் எண்ணும் வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணும் இணைத்துவிட்டதாக உங்களுக்கு தகவல் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

அங்கும் இங்கும்அலையாமல் வீட்டில் அலுவலகத்தில் இருந்தபடியோ நாம் இரண்டையும் இணைத்துவிட்டோம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி... மிக்க நன்றி...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
நன்றி... மிக்க நன்றி...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...ஃஃ

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனபாலன் சார். தங்கள் குடும்பத்தினர்க்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன் வேலன்.

Pethaperumal said...

நன்றி... மிக்க நன்றி...

ரவிசங்கர் S. said...

நன்றி. நானும் இணைத்து விட்டேன்.

stalin wesley said...

thanks

தமிழ்நேசன் said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே..
வோட்டர் ஐடி-யில் முகவரி மாற்றம் ஆன்லைன் மூலமாக செய்ய இயலுமா. செய்யலாம் என்றால் அதுகுறித்து ஒரு பதிவை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி
என்றும் நட்புடன்
தமிழ்நேசன்

Phoenix Training & Placement said...

hrhrhrhrhrhrhrhrhrhrhrhrhrhrhr

வேலன். said...

Pethaperumal said...
நன்றி... மிக்க நன்றி...ஃஃ


நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

ரவிசங்கர் S. said...
நன்றி. நானும் இணைத்து விட்டேன்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் இணைப்பிற்கும் நன்றி...
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

stalin wesley said...
thanks


நன்றி வெஸ்லி சார்..நீண்டநாளுக்கு பிறகு வந்துள்ளீர்கள. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

தமிழ்நேசன் said...
பகிர்வுக்கு நன்றி நண்பரே..
வோட்டர் ஐடி-யில் முகவரி மாற்றம் ஆன்லைன் மூலமாக செய்ய இயலுமா. செய்யலாம் என்றால் அதுகுறித்து ஒரு பதிவை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி
என்றும் நட்புடன்
தமிழ்நேசன்

பதிவிடுகின்றேன் நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துகும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Phoenix Training & Placement said...
hrhrhrhrhrhrhrhrhrhrhrhrhrhrhrநன்றி
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...