வேலன்:-அடிக்கடி தேவைப்படும் 13 அவசியமான சாப்ட்வேர்கள்.


நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நமக்கு கடந்துள்ள வயதினை அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.  இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள Enter your Date of Birth என்கிற கட்டத்தில் உங்களுடைய பிறந்த தேதி மாதம் வருடம் தட்டச்சு செய்யவும்.. தட்டச்சு செய்யும் சமயம் நடுவில் உள்ள ஐ பனுக்கு இடையில் எண்களை வருமாறு தட்டச்சு செய்யவும்.கடைசியாக Search கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுடைய வயதின் வருடம் மாதம் மற்றும் நாட் களை சுலபமாக அறிந்துகொள்ளலாம்.
-------------------------------------------------------------------------------------------------------
வேலன்:-குறிப்பிடட தேதியின் கிழமையை அறிந்துகொள்ள 

இந்த் நூற்றாண்டு மட்டும் அல்லாது கடந்த மற்றும் வரும் நூற்றாண்டுகளின் வருடங்களில் குறிப்பிட்ட வருடத்தின் குறிப்பிட்ட மாதத்ததின் தேதி கிழமைநிலவரம அறிய இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.  இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் Month என்பதில் குறிப்பிட்ட மாதததினையும் Year என்பதில் குறிப்பிட்ட வருடத்தினையும் தட்டச்சு செய்யவும் பின்னர் இதில் உள்ள Generate என்பதனை கிளிக் செய்யவும். நாம் நமது இந்திய சுதந்திரம் எந்த கிழமையில நமக்கு கிடைததது என அறிந்துகொள்ள இதனை பயன்படுத்தினேன். நமக்கு சுதந்திரம் வெள்ளிக்கிமை அன்று கிடைத்துள்ளது;.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நீங்களும் உங்களுடைய விருப்பமான தேதிக்கான கிழமை அறிந்துகொள்ள இதனை பயன்படுததிப்பாருங்கள்
---------------------------------------------------------------------------------------------------
வேலன்:-சிறிய ஆடியோ பிளேயர்.

நம்மிடம் உள்ள ஆடியோ மற்றும் எம்பி.3 பாடல்களை துல்லியமாக கேட்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.குறைந்த அளவு கேபி கொண்ட இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஓப்பன் என்பதனை தேர்வு செய்து  நம்மிடம் உள்ள பைல் அல்லது டைரக்டரியில் இருந்து பாடல்களை தேர்வு செய்யவும்.
பின்னர் இதில் உள்ள பிளே கிளிக் செய்யவும். நமக்கான பாடல்கள் ஒலிபரப்பாகும். மேலும் பாடல் பிடிக்கவில்லை என்றால் நாம் கேட்கும்பாடலின் முன்பாடலே அல்லது அடுத்துள்ள பாடலை தேர்வு செய்யலாம். மேலும் இதில் அலாரம் ;செட் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------
வேலன்:-எளிய கால்குலேட்டர்.

எளிய வகை கணக்குகளை போட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் சதவீதம். ஸ்கேயர் ரூட்.போன்ற கணித வகைகளை போடலாம். எளிய வகைகளில் பயன்படுத்த இந்த சாப்ட்வேரினை பயன்படுத்தலாம்.
-------------------------------------------------------------------------------------------------------
வேலன்:-கவுண்டவுண் டைமர்.

குறிப்பிட்ட நேரம் செட் செய்து அதிலிருந்து கவுண்டவுன் டைமரை செட் செய்திட இந்த சாப்ட்வேரினை பயன்படுத்தலாம்.. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள மினிட்ஸ் மற்றும் செகண்டில் நமக்கு தேவையான நேரத்தினை தட்டச்சு செய்யவும். பின்னர் ;அதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும்.
உங்களுக்கான நேரம் குறைந்துகொண்டே ஓட ஆரம்பிக்கும். ஒரு குறிபிட்ட நேரத்தில் வேலையை முடிக்க - ஒரு வேலை எவ்வளவு நேரத்தில் நாம் முடிக்கின்றோம் என அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை பயன்படுத்தலாம்.
---------------------------------------------------------------------------------------------------------
வேலன்:-மெமரி டெஸ்ட்.

நமது நினைவாற்றலை அறிந்துகொள்ள இந்த மெமரி டெஸ்ட் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்து கிளிக் செய்திட்டபின் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள பிளே கிளிக் செய்யவும். இப்போது நான்கு விதமான கலர்களில் அம்புகுறி இருக்கும். ஒவ்வொரு அம்புகுறியும் மாறிமாறி பிளிங் ஆகும். நாம் சரியாக நினைவில் வைத்துக்கொண்டு அந்த வரிசையில் அம்புகுறியை கிளிக் செய்திடவேண்டும். 
நாம் எவ்வளவு கிளிக் சரியாக செய்கின்றமோ அவ்வளவு பாயிண்டுகள் கிடைக்கும். 
-----------------------------------------------------------------------------------------------
வேலன்:-ரேமின் உபயோக நிலை அறிந்துகொள்ள

நமது கணிணியில் உள்ள ரேம் பயன்பாட்டினை அறிந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது..இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நமது ரேமின் Physical Memory(Total),Unused Ram.Residual Ram.Toral Virtual Memory.Virtual Memory Used என நமது ரேமின் அனைத்து நிலைகளையும் அறிந்துகொள்ளலாம். 
---------------------------------------------------------------------------------------------------------
வேலன்:-ரேண்டம் வார்த்தைகள்.


குறிப்பிட்ட வார்த்தையில் உள்ள வார்த்தைகளை அறிந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிற்க்கம் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் கீழே உள்ள Insert Word ல் உங்களுக்கான வார்த்தையை தட்டச்சு செய்யவும். பின்னர் கீழே உள்ள Generate கிளிக் செய்திடவும்.


 இப்போது நீங்கள் குறிப்பிட்ட வார்த்தையில் உள்ள வார்ததைகளின் வகைகளை அறிந்துகொள்ளலாம் நான் Tamil Computer  என்று குறிப்பிட அதிலிருந்து 16383 வார்த்தைகள் வந்தது. 
ஒரு வார்த்தையின் அனைத்து ரேண்டம் வார்த்தைகளையும்அறிந்துகொள்ளலாம். 

------------------------------------------------------------------------------------------------
வேலன்:-ஸ்டாப் வாட்ச்.


ஓட்டப்பந்தயங்களில் பயன்படுத்தப்படும் ஸ்டாப்வாட்ச் நாம்கணிணியில் பயன்படுத்தலாம். இதனை பதிவிறக்கம்செய்ததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் ஸ்டார்ட் கிளிக் செய்ததும் உங்களுக்கான நேரம் ஓட ஆரம்பிக்கும். 
தேவைபடும் சமயம் நாம் இதில் உள்ள ஸ்டாப் கிளிக் செய்து நாம் நமது நேரத்தினை நிறுததிக்கொள்ளலாம். 
--------------------------------------------------------------------------------------------------
வேலன்:-உங்கள் உயரத்திற்கு ஏற்ப எடையை அறிந்துகொள்ள


நம் உயரத்திற்கு ஏற்ப எவ்வளவு எடை இருக்கவேண்டும் என்பதனையும் குழந்தைகள் ஒரு வயது வரை எவ்வளவு எடை இருக்கலாம் என்பதையும்.சிறுவர்கள் 1 முதல் 10 வயது வரை எவ்வளவு எடை இருக்கலாம் என்பதனையும் எளிதில் அறிந்துகொள்ள இநத சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது:.இதனை இன்ஸ்டால் செய்ததும் உஙக்ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் மூன்று விதமான ரேடியோ பட்டன்கள் கொடுத்துள்ளார்கள். உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடை அறிந்துகொள்ள இதில் மூன்றாவதாக உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் உயரத்தினை சென்டிமீட்டர் அளவில் குறிப்பிடவும்.

 கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கான சரியான எடை கிடைக்கும்.எடை குறிப்டட அளவை விட நீங்கள் குறைவாக இருந்தால் அதிகமாக்கவும் அதிகமாக இருந்தால் குறைக்கவும் செய்யலாம்.
 ஒன்று முதல் பத்துவயது வரை உள்ள குழந்தைகள் வயது ஏற்ப எடை அறிந்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
குழந்தைகள் பெரியவர்கள் என யாவரும் எடையை அறிந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 
-----------------------------------------------------------------------------------------------------
வேலன்:-யூஎஸ்பி சாதனங்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க


உங்கள் யூஎஸ்பி சாதனங்களை மற்றவர்கள் யாரும் பயன்படுத்த முடியாமல் பாஸ்வேர்ட் கொடுத்து பயன்படுத்த இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை இன்ஸ்டால் செய்ததும் உஙக்ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் உள்ள பாஸ்வேர்ட் கட்டத்தில் உஙக்ளுக்கான பாஸ்வேர்ட் தட்டச்சு செய்யவும்.

ஓ.கே. கொடுத்து வெளியேறவும். இனி யாராவது உங்களுடைய யூஎஸ்பி சாதனங்களை பயன்படுத்துகையில் அதற்கான பாஸ்வேர்ட் கேட்கும். சரியாக இருக்கும் பட்டச்சில் யூஎஸ்பி வேலை செய்யும். இதன்மூலம் நாம் யூஎஸ்பி சாதனங்களை பாதுகாக்கலாம். 
------------------------------------------------------------------------------------------------------
வேலன்:-பைல் மற்றும் போல்டர்களை விரைந்து காப்பி செய்திட


பைல்கள் போல்டர்களை ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு விரைந்து மாற்றுவதற்கு இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் மாற்ற வேண்டிய பைல் அல்லது போல்டரை தேர்வு செய்யவும். மேலே உள்ள விண்டோவில அதற்கான ஸ்ரைடரை அட்ஜஸ்ட் செய்துகொள்ளவும். பின்னர் சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்யவும்.இறுதியாக கீழே உள்ள Copy file or Floder கிளிக் செய்யவும்.
 கண் சிமிட்டும் நேரத்தில் உங்களுக்கான பைல் மற்றும் போல்டரானது நீங்கள் சேமிக்க விரும்பிய இடத்தில் சேமிப்பாக மாறி உள்ளதை காணலாம். உங்களுக்கு கீழ்கண்ட சேய்தி வரும்.
==========================================================
வேலன்:-ரிஜிஸ்டரி செட்டிங்ஸ் உடனே பெற.


கணிணியின் ரிஜிஸ்டரியில் மாற்றம் செய்ய வேண்டுமானால் நாம் ஸ்'டார்-ரன்-சென்று ரிஜிஸ்டரியை தட்டச்சு செய்து என்டர் தட்டவேண்டும். ஆனால் இந்த சின்னசாப்ட்வேர் மூலம் ரிஜிஸ்டரியை நாம் நேரடியாக உடனடியாக ததிறக்கலாம். இதனை பதிவிறக்கம் செய்து இனடஸ்டால் செய்ததும் உஙக்ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதிலுள்ள செட்டிங்ஸ் கொடுத்துள்ளதை நமக்கு எது தேவையோ அதற்கு எதிரில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வு செய்து இறுதியில் இதில் உள்ள அப்ளை செட்டிங்ஸ் கிளிக் செய்திடவேண்டும். நமக்கான தேவைகள் உடனடியாக பெறலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
மேற்கண்ட 13 சாப்ட்வேர்களையும் பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.

வாழ்கவளமுடன்
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தேவையானவற்றை பயன்படுத்திக் கொள்கிறேன்... நன்றி...

'பரிவை' சே.குமார் said...

பயனுள்ள பகிர்வு...
ரொம்ப நாளாச்சே அண்ணா... நலமா?

velanblogger said...

Blogger திண்டுக்கல் தனபாலன் said...
தேவையானவற்றை பயன்படுத்திக் கொள்கிறேன்... நன்றி..ஃஃ

நன்றி தனபாலன் சார்..தங்கள் வருகைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

velanblogger said...

Blogger பரிவை சே.குமார் said...
பயனுள்ள பகிர்வு...
ரொம்ப நாளாச்சே அண்ணா... நலமா?

நன்றி குமார் சார்...தற்சமயம் நலமே..தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

Sri said...

தங்கள் பதிவுகளை எனது blogspot -ல் பகிர்வு செய்து உள்ளேன் நன்றி நண்பர் வேலன்.

Sri said...

தங்கள் பதிவுகள் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. எனவே எனது blogspot -ல் பகிர்வு செய்ய உள்ளேன். தங்கள் பதில் எதிர் பார்த்து தங்கள் நண்பர் சுப்பிரமணியம்(subramaniyamgk@gmail.com)

Related Posts Plugin for WordPress, Blogger...