வேலன்:-போல்டரில் பத்துவிதமான வடிவங்கள் கொண்டுவர-Dr.Folder-Yt Computing

கணிணியில் பயன்படுத்தும் போல்டர்கள் ஓரே நிறத்தில் இருக்கும். பெயரை வைத்துதான் நாம் போல்டரை தேர்வு செய்யவேண்டும். ஆனால் இந்த சாப்ட்வேரில் நாம் போல்டருக்கு பத்துவிதமாக வித்தியாசபடுத்தி  கொடுக்கலாம்.7 எம்.பி.கொள்ளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நாம் மாற்றவிரும்பும்போல்டரையோ மல்டிபிள போல்டரையோ தேர்வு செய்யவும். பின்னர் இதில் வலதுபுறம் உள்ள டேபினை காணவும். இதில் Work;.Colors.Stars.Letters.Everyday.Additional.User Icons.Numbers.Type.and Zodiac என பத்துவிதமான ஆப்ஷன்கள்கொடுத்துள்ளார்கள்.

இதில் உள்ள கலரினை தேர்வு செய்ய 12 விதமான நிறங்கள் நமக்கு கிடைக்கும்.வேண்டிய நிறத்தினை நாம் தேர்வு செய்து பின்னர் இதில் உள்ள அப்ளை கிளிக் செய்யவும்.உங்களுக்கான போல்டர் விரும்பிய நிறத்தில் மாறியிருப்பதை காணலாம்.

இதில் உள்ள ஸ்டார் கிளிக் செய்ய ஒன்றிலிருந்து ஐந்து வரையிலான ஸ்டார் உடன் போல்டர் கிடைக்கும். பைலின்தரத்திற்கு ஏற்ப நாம் ஸ்டார் குறியீடு கொடுக்கலாம். 

இதில் உள்ள லெட்டர்ஸ் கிளிக்  செய்ய A முதல் Z வரையிலான எழுத்துக்கள் கிடைக்கும். தேவையானதை தேர்வு செய்யலாம். கீழே உள்ள விண்டூவில் பாருங்கள்.

இதில் உள்ள Everyday கிளிக் செய்ய உங்களுக்கு விதவிதமான முககுறியீடுகள் கிடைக்கும். தேவையானதை தேர்வு செய்யலாம்.

இதில் உள்ள Additional கிளிக் செய்ய விதவிதமான புகைப்படங்களுடன் ஐகான்கள் கிடைக்கும். தேவையானதை தேர்வு செய்யலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


 அலுவலக உபயோகத்திற்கு ஏற்ப இதில் உள்ள ஐகானை தேர்வு செய்து அதில் பைல்களை வைத்துக்கொள்ளலாம்.
0 விலிருந்து 9 வரையிலான எண்கள்கொடுத்துள்ளார்கள். தேவையான எண்ணினை நாம் தேர்வு செய்து வைத்துக்கொள்ளலாம்.

போல்டரின் டைப் - வகைக்கு ஏற்ப நாம் தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

இறுதியாக விலங்குகளின் புகைப்படங்களை கொடுத்துள்ளார்கள். தேவையான புகைப்படத்தினை நாம் தேர்வு செய்யலாம். கிழெ உள்ள விண்டூவில் பாருங்கள்.

போல்டரின் ஐகானை ரைட்க கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதன் மூலமும் நாம் போல்டருக்கு விரும்பிய வடிவத்தினை கொடுத்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு போல்டருக்கும் ஒவ்வொருவிதமான வடிவங்கள் என மொத்தம் பத்து வடிவங்கள் கொடுத்து மொத்தமாக உள்ள போர்டர் வியூ கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

நீங்கள் பைல்களை விரைந்து தேடவும். குறிப்பிட்ட பைல்களுக்கு சரியான குறியீட்டினை வழங்கவும் இந்த  சாப்ட்வேரினை பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

5 comments:

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

Nice.

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு

வேலன். said...

Alien said...
Nice.


நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Blogger Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...
சிறந்த பகிர்வு

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...