வேலன்:-கணிணி விரைந்து திறந்திட -Startup Star

கணிணியை ஆன் செய்த உடன் நமக்கு டெக்ஸ்டாப் ஸ்கிரின் வர சில நிமிடங்கள் ஆகலாம். சிலர் கணிணியில் 10 நிமிடங்கள் கூட ஆகலாம். அவ்வாறு உள்ள கணிணியில் நமக்கு தெரியாமலேயே சில ப்ரோகிராமகள் செயல்பட துவங்கி கணிணி ஸ்டாப்அப்ஆவதை தாமப்படுத்தலாம். இவ்வாறு கணிணி துவங்குகையில் நமக்கு எந்த ப்ரோகிராம் அவசியம் தேவை என்பதனை முடிவு செய்து பயன்படுத்தலாம். 5 எம்.பி கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நமது கணிணியில் நாம் பயன்படுத்தும் ப்ரோகிராம்கள் ஸ்டார்அப்பில் எதுஎது துவங்குகின்றது என தெரியவரும்.ப்ரோகிராம் பக்கத்தில் கர்சர் கொண்டு செல்கையில் உங்களுக்கு கீழ்க்ணட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் அந்த ப்ரோகிராம் துவங்கவேண்டுமா வேண்டாமா என முடிவு செய்திடலாம்.


அதுபோல சில சாப்ட்வேர்களை நாம் நிறுவும் சமயம் பயர்வால் ப்ரோகிராம்களை நிறுத்தி வைக்க சொலலும் அந்த சமயங்களில் இந்த சாப்;ட்வேர் மூலம் அதனை நாம் எளிதில் மேற்கொள்ளலாம்.
இதில் நமது கணிணி பேக்அப் செட்டிங்ஸ் மேற்கொள்ளலாம். மேலும் ரீஸ்டேடார் பாயிண்ட்டையும் உருவாக்கலாம். இந்த பணிகள் அனைத்தும் முடிந்ததும் நீங்கள் கணிணியை ஒரு முறை ரீ ஸ்டார் செய்திடுங்கள். கணிணி விரைந்து திறப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...