வேலன்:- பிடிஎப் பைல்களில் லிங்குகளை சேர்க்க -நீக்க -மாற்றியமைக்க -PDF Link Editor

பிடிஎப் பைல்களில் இணையதள லிங்குகளை கொடுத்திருப்பார்கள். பிடிஎப்பைல் படிக்கும் சமயம் அந்த லிங்கினை கிளிக் செய்திட சம்பந்தபட்ட இணையதளம் நமக்கு திறக்கும். இந்த மென்பொருளில் அவ்வாறு இணையதள லிங்குகளை நாம் சேர்க்கவும். மாற்றியமைக்கவும். நீக்கிடவும் உதவிபுரிகின்றது. இந்த இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்  http://www.pdflinkeditor.com/ செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 இதில் உள்ள ஆட் டேப்பினை  கிளிக் செய்து உங்களுக்கு தேவைப்படும் பிடிஎப் பைலினை திறக்கவும். இப்போது உங்களுக்கூன பிடிஎப் பைலானது இந்த மென்பொருளில் தெரியவரும். இதில் உள்ள லிங்குகளின் விவரமும் தெரியவரும்.
இதன்மேல்புறம் உள்ள டேப்புகளில் ரீபிளேஸ் என்கின்ற டேபினை கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள ;மற்றவேண்டிய லிங்கினையும் சேர்ககவிரும்பும் லிங்கிளை இதன் கீழே உள்ள டேபிள் சேர்த்து ரீபிளேஸ் ஐகானை கிளிக் செய்திடவும். 
 அதுபோல நீங்கள் புதியதான லிங்கினை இதில சேர்க்க விரும்பினால் உங்களது பிடிஎப் பைலில் எந்த வார்த்தைக்கு லிங்க் கொடுக்க விரும்புகின்றீர்களோ அந்த வார்த்தையை இதில் தட்டச்சு செய்திடவும். பின்னர் இதில் உள்ள சர்ச் கிளிக் ;செய்திடவும்.
 சம்பந்தபட்ட வார்ததை உங்களுடைய பிடிஎப் பைலில் எத்தனை இடங்களில் வருகின்றதோ அந்த இடங்களின் எண்ணிக்கையை இது காண்பிக்கும். பின்னர் நீங்கள் சேர்கக விரும்பும் இணையதள லிங்கிளை இதன் கீழே உள்ள என்டர் லிங்க் யூஆர்எல் என்பதில் இணைக்கவும். 
அப்ளிகேஷனை மூடிவிட்டு இப்:போது உங்கள் பிடிஎப் பைலினை திறக்கவும். இப்போது நீங்கள் குறிப்பிட் ட வார்த்தையின் மீது கர்ச்ரை கொண்டுவர கர்சரானது அம்புகுறியாக மாறிவிடும். அதனை கிளிக் ;செய்திட நீங்கள் :குறிப்பிட்ட இணையதளத்திற்கு உங்களை அழைத்துச்செல்லும். இதன் மூலம் நீங்கள் இணையதள விவரம்அறிந்துகொள்ளலாம். கல்வி சம்பந்தமாக பிடிஎப் தயாரிப்பவர்கள் பாடம் சம்பந்தமான லிங்க்கு செல்ல இந்த மென்பொருளை பயன்படுத்தலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...