வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உண்டாக்க

புகைப்படங்களை நாம் சாதாரணமாக பார்ப்பதை விட பின்ணனி இசையுடனும் வீடியோ தரத்துடனும் ஸ்லைட்ஷோவாக பார்வையிடுகையில் பிரமிப்பாக இருக்கும். அதுபோல நம்மிடம் உள்ள புகைப்படங்களை ஸ்லைட்ஷோவாக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது:. 58 எம்.பி.கொளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்து ஒப்பன் செய்யததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் நம்மிடம் உள்ள புகைப்படங்களை தேர்வு செய்யவும். பின்னர் புகைப்படங்களை டிராக அன்ட் டிராப் மூலமோ அல்லது டபுள் கிளிக் செய்வதன் மூலமோ கீழே உள்ள ஸ்லைடிங் பாருக்கு புகைப்படங்கள் வந்துவிடும். 

 பின்னர் இரண்டாவதாக உள்ள டிரான்ஸ்ஷாக்ஸன் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 300 க்கும் மேற்பட்ட புகைப்பட எபெக்ட்கள் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
 உங்கள் விருப்பமான எபெக்ட்டினை டிராக அன்ட் டிராப் முறையில் இழுத்துவந்து ஸ்லைடிங்பாரில் விடவும்.அதற்கு அடுத்துள்ள பெக்ரவுண்ட மியூசிக் கிளிக் ;செய்திட உங்களிடம் உள்ள பாடல்களுக்கான போல்டரை தேர்வு செய்யவும். அதிலிருந்து புகைப்படத்திற்கு ஏற்ப சிட்டிவேஷன் பாடலை தேர்வு செய்யவும்.அதற்கு அடுத்துள்ள ஆல்பம் ஸ்டைலினை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 கடைசியாக உள்ள டிவிடி மெனு கிளிக் செய்யவும். உங்களுக்கான செட்டிங்ஸ் முடிந்ததும் இதில் உள்ள ப்ரிவியூ ஓடவிட்டு பார்க்கவும்.

அனைத்து பணிகளும் முடிந்ததும் சேவ் செய்துவிடவும். பின்னர் இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து உங்களுக்கான டிவிடியின் அளவுகளையும் செட் செய்து இறுதியாக பிளைட் டிவிடியினை அதற்கான டிரைவில் உள்ளிட்டு இதில் உள்ள Done கிளிக் செய்யவும்.சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கான டிவிடி காப்பி ஆகிவிடும்.பின்னர் ;டிவிடியினை தனியாக ப்ளேயரில் போட்டுபார்க்கவம். உறவினர் நண்பர்களுக்கு பரிசளிக்கவும். பயன்படுத்திப்பாருங்கள. 
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

1 comments:

Yarlpavanan said...

அருமையான பதிவு

இனிய தீபாவளி வாழ்த்துகள்

Related Posts Plugin for WordPress, Blogger...