வேலன்:-இமெயில் மூலம் பெரிய பைல்களை அனுப்ப -Dropsend

ஒருவரிடமிருந்து மற்றும் ஒருவருக்கு பைல்கள்.டாக்குமெண்ட்கள்.ஆடியோ பைல்கள்.வீடியோ பைல்களை அனுப்ப இமெயில் ;பயன்படுத்துவோம். ஆனால் இமெயிலில் 25 எம்.பிக்கு மேல் அனுப்ப முடியாது.அதுபோல .exe பைல்களையும் அனுப்ப முடியாது. இந்த இணையதளத்தில் 8 ஜி.பி. பைல்களை சுலபமாக நாம் மற்றவர்களுக்கு இமெயில் மூலமே அனுப்பிவிடலாம். இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் முதலில் உள்ள காலத்தில் உங்கள் இமெயில முகவரியை தட்டச்சு செய்யவும். அடுத்துள்ள விண்டோவில் அனுப்பவரது இமெயில் முகவரியை தட்டச் சுசெய்யவும். சப்ஜெக்ட் மற்றும் மெசெஜ் தட்டச்சு செய்யவும் அனுப்பவேண்டிய பைலினை தேர்வு செய்யவும். இறுதியாக சென்ட் கிளிக் செய்யவும்.


 இதில் உள்ள ரேடியோபட்டனை கிளிக் செய்து சென்ட் பட்டனை கிளிக் செய்யவும்.
 உங்களுக்கான பைலானது அப்லோடு ஆகும். பைல் அளவிற்கு ஏற்ப சிறிது நேரம் ஆகும். காத்திருக்கவும். 
உங்கள் பைலானது சென்றதற்கான தகவல் வரும் அதேசமயம் நீங்கள் அனுப்பியவருக்கு உங்கள் பைல் சென்றிருக்கும்.
உங்களுடைய இமெயில் முகவரிக்கு இந்த பைலுக்கான பாஸ்வேர்ட் வரும். அதனை நீங்கள் அனுப்பியவருக்கு போன்மூலம் அனுப்பிவிடலாம். இதன்மூலம் உங்கள் தகவல் கூடுதல் பாதுகாப்புடன் அவருக்கு சென்று சேர்கின்றது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...