வேலன்:-கணிணியில் தட்டச்சு பயில

கணிணியில் விரைந்து பணியாற்ற தட்டச்சு செய்திட டைப்ரேட்டிங் நமக்கு தெரிந்துஇருக்கவேண்டும். அவ்வாறு டைப்ரேட்டிங் பயிலகத்திற்கு செல்லாமல் நாம் நமது கணிணியிலேயே தட்டச்சு பயின்றிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்'டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.

 இதில் உங்களுக்கு ஒரு டேப் கிடைக்கும் அதில் கீபோர்டடில் உள்ள எழுத்துக்கள் ஸ்கோரல் ஆகும். அதன் கீழ் கொடுத்துள்ள கீபோர்ட் படத்தில் அந்த எழுத்துருவுக்கான எழுத்துரு சிகப்பு  நிறத்தில் தெரியும். ஸ்கோரலில் எழுத்து வரவர நாம் கீபோர்டில் ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சு செய்யவேண்டும். தவறுதலாக நீங்கள் கீயை அழுத்திவிட்டால் வினோத ஒலி நமக்கு கிடைக்கும்.
 நாம் அனைத்தையும் தட்டச்சு செய்து முடித்தவுடன் உங்களுடைய தட்டச்சு முடிவு உடனுக்குடன் தெரியவரும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அதில் உங்கள் தட்டச்சு செய்த வேகம் மற்றும் பிழைகளின் சதவீதம் கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...