
இரண்டு கண்களிலும் ஓரே பார்வை என் று சொல்வார்கள். இலக்குக்கு ஒன்றே -ஆனால் இரண்டு வெவ்வேறு பாதைகள் என்றும் சொல்வார்கள். அதைப்போல் நமது கம்யூட்டரில் இரண்டு கண்ட்ரோல் பேனல் விண்டோகள் உள்ளன. அவை Start Menu மற்றும் Classic Start Menu என இரண்டுவகைப்படும். இந்த இரண்டு தோற்றங்கள் மூலம் வழக்கமான கண்ட்ரோல் பேனல் பணிகளை செய்யலாம்.இரண்டும் ஓரே பணியினை செய்வதால் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு நாம் மாறிக் கொள்வதும் எளிது . சரி இதை எப்படி கொண்டுவருவது என்று பார்க்கலாம். முதலில் Start -Properties -தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Start Menu எதிரில் உள்ள பட்டனை கிளிக் செய்து Apply - Ok கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இந்த விண்டோவில் கண்ட்:ரோல் பேனலில் எதை யெல்லாம் நாம் பயன்படுத்துகின்றமோ அவை அனைத்தும் ஒரே விண்டோவில் தோன்றும்.ஆனால் நீங்கள் ஒவ்வொறு முறையும் Start மூலமே செல்ல வேண்டும்.இதைப்போல் Classic Start Menu செல்ல முன்பு போல் ஸ்டார்ட் - ப்ராபர்டீஸ் தேர்வு செய்யுங்கள்.இரண்டாவதாக உள்ள கிளாசிக் ஸ்டார்ட் மெனு எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்யுங்கள்.
இந்த செட்டிங்ஸ்' நீங்கள் கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ தோன்றும்.
இரண்டுவகை விண்டோக்களையும் உபயோகித்துப்பாருங்கள். எந்த வகை உங்களக்கு சுலபமாக இருக்கின்றதோ - எது உங்களுக்கு பிடித்திருக்கின்றதோ அதையே உங்கள் கண்ட்ரோல் பேனலாக செட் செய்துகொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
அந்த பக்கம் போகாதே...சிக்கன் இல்லாத சிக்கன் பிரியாணி (கஞ்சி) ரெடிபண்ணிக்குனு இருக்காங்க...சாப்பிட்ட ...அப்புறம் நீ அவ்வளவுதான்....!
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்