நீரோ தவிர பைல்களை சிடியில் காப்பி செய்ய ஏதாவது சாப்ட்வேர் இருக்கா என்று நண்பர் ஒருவர் கேட்டார். அவருக்காக தேடுடகையில் இந்த சாப்ட்வேர் கிடைத்தது. எளிதில் புரியும் வகையில் அளவில் சிறிய தாகவும் உள்ளது.5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்..இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் டேடா,வீடியோ.ஆடியோ,ஐஎஸ்ஓ.காப்பி டிஸ்க் மற்றும் எரேஸ் டிஸ்க் என ஆறுவித ஆப்ஷன்கள் கொடுக்கபட்டிருக்கும்.நான் டேடா டிஸ்க் தேர்வு செய்துள்ளேன். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் நான்கு விதமான விண்டோக்கள் இருக்கும்.நமது பைல்உள்ள போல்டரை -காப்பி செய்ய விரும்பும் போல்டரை தேர்வு செய்யவும்.அல்லது பைல்களை டிராக் அன்ட் டிராப் முறையில் தேர்வு செய்யவும்.இதில் சிறப்பான வசதி என்ன என்றால் இதில் சிடியின் கவரை நாமே டிசைன்செய்யலாம்.சிடியில் புகைப்படங்களையும் கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நீங்கள் பர்ன் கிளிக்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட மூன்று சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும்.உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யுங்கள்.
இறுதியாக உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.சிடி டிரேயில் காலி சிடியை போடவும்.
சில வினாடிகள் காத்திருப்புக்கு பின் உங்களுடைய சிடி காப்பி ஆகிவிட்டிருக்கும்.பயன்படுத்த எளிதாக உள்ளதால் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.