பாடல்கள் விரும்பிகேட்காதவர்களே இருக்கமாட்டார்கள். சிலருக்கு வீடியோ பாடல்கள் பிடிக்கும். சிலருக்கு ஆடியோ பாடல்கள்.பிடிக்கும். வீடியோ பாடல்களை டிவிடியாக மாற்ற நிறைய சாப்ட்வேர்கள் உள்ளன. ஆனால் ஆடியோ பைல்களை டிவிடியாக மாற்ற சில சாப்ட்வேர்கள் மட்டுமே உள்ளது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வேண்டிய ஆப்ஷன்களை செட் செய்திடவும. பேக்கிரவுண்ட புகைப்படங்களாக மூன்று புகைப்படங்கள் கொடுத்துள்ளார்கள்..கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.இதில் import file மூலம் நம்மிடம் உள்ள ஆடியோ பைல்களை தேர்வு செய்யவும்..கீழே உள்ள ஸ்லேடரில் பாடல்களின கொள்ளளவுக்கு ஏற்ப நீலநிறம் வருவதை கவனியுங்கள்.
இறுதியாக இதில் உள்ள Create கிளிக் செய்யுங்கள்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் ஆடியோ பைலகள் டிவிடியாக மாறிவிட்டதை கவனியுங்கள. நாம் தனியே நமது கணிணியிலும் டிவிடியாக சேமித்துவைக்கும் வசதியும் உள்ளது;.பயன்படுத்திப்பாருங்கள்...கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.