
சிடி ஆகட்டும் - டிவிடி ஆகட்டும் -நமது கம்யூட்டரில் இருந்து சிடிக்கு காப்பி செய்யும் ஒரு சிறந்த சாப்ட்வேராக நீரோவை சொல்லலாம். நீரோ உண்மையிலேயே ஹீரோ தான். புதியவர்கள் எளிதில அறிந்துகொள்ள நீரோவை பற்றி பார்க்கலாம்.நீங்கள் வாங்கும் டிவிடி -சிடி -டிரைவுடன் இலவசமான வழங்கப்படும் சாப்ட்வேர்தான நீரோ...நீரோ - 6 ல் ஆரம்பித்து இப்போது 10.5 வரை வந்துள்ளது.உங்களது எந்த வகையாக இருந்தாலும் அடிப்படை ஒன்றுதான். நான் நீரோ 8 பற்றி பதிவிடுகின்றேன்.இதை இன்ஸ்டால் செய்து ஒப்பன்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதன் வலப்புறம் கீழே Add/Remove Applications இருக்கும். அதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
என்னற்ற Applications இருக்கும் . இதில நமக்கு எது தேவையோ அதை தேர்வு செய்து ஒ.கே. கொடுங்கள்.இப்போது மெயின் விண்டோவிற்கு வாருங்கள்.
இதில இடதுபுறம் Data Burning.Audio Burning.Audio Ripping.Copy Disc என நான்கு டேப்புகள் இருக்கும்.முதலில் உள்ளது Data Burning .டேடாபர்னிங் என்பது உங்களது கம்யூட்டரில இருந்து டேடாகளை சிடியிலோ - டிவிடியிலோ காப்பி செய்வதுஆகுமஉங்கள்கம்யூட்டரில்உள்ளவேர்ட்.எக்ஸெல்.படம்.வீடியோ.பிடிஎப் என அனைத்தையும் டேட்டாவாக சிடியில் காப்பி செய்யலாம். . இதில் காப்பி செய்யப்படும் டேடாகள் சில வகை டிவிடி பிளேயர்களில் ஒப்பன் ஆகி டிவியில்பார்க்கலாம்.புதியதாக டிவிடி பிளேயர் வாங்குவதாக இருந்தால் டேடாக்களை சிடியில் எடுத்துசென்று பிளேயரில் போட்டுபாருங்கள் எந்த டிவிடி பிளெயர் பிளே ஆகுதோ அந்த பிளேயரை வாங்குங்குள்.இப்போது டேட்டாக்ளை தேர்வு செய்துள்ளதை கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் காப்பி செய்யப்படும் டேடாக்களின் அளிவிற்குஏற்ப இதில் உள்ள ஸ்கேலில் பச்சை நிறம் வருவதை கீழே காணலாம்.சிகப்பு நிறம் வந்தால் அதிகப்படியான டேட்டாக்கள் பதிவு செய்துவிட்டோம் என்று அர்த்தம்.சிகப்பு நிறத்திற்கு உள்ளேயே டேட்டாக்கள் வருவதுபோல் பதிவுசெய்துகொள்ளுங்கள்.இவை அனைத்தையும் முடித்ததும் Burn கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு உங்களது டிவிடி - சிடி -டிரைவ் திறக்கும். அதில் காலியான சிடியை போட்டு டிரைவ்வை மூடவும்.
சில நிமிடங்கள் காத்திருக்குப்பின் சிடி - டிவிடி - காப்பி ஆகி உங்களுக்கு சிடியானது வெளியில் வரும்.இதைப்போலவே ஆடியோவினை பதிவு செய்யலாம்.
அதைப்போலவே சிடியிலிருந்து சிடியையும் -டிவிடியிலிருந்த டிவிடியையும் காப்பி செய்யலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
முதல்முறை முயற்சிசெய்யும் சமயம் நீங்கள் ரீ-ரைட்டபிள் சிடி -டிவிடியை பயன்படுத்தவும். தவறு நேர்ந்தாலும் சிடி - டிவிடி பழுதாகாது. ஒரு முறைக்கு இரண்டு முறை பயன்படுத்திப்பாருங்கள் சரியாக வரும்.இதன் பிற உபயோகங்கள் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.
பயன்படுத்திப்பாருங்கள. கரு்த்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.