நாம் இணையத்தில் இருந்து பைலை டவுண்
லோடு செய்வோம். அது சுருக்கப்பட்ட பைலாக
இருந்து அதை ஓப்பன் செய்து பார்க்கையில்
குறிப்பிட்ட பைல்கள் பழுதடைந்திருந்தால்
நமக்கு எரர் என்று மெசேஜ் வந்து அந்த

மொத்த பைலுமே ஓப்பன் ஆக மறுக்கும்.
அந்த சமயங்களில் winrar மூலம் நாம்
பைலை திறந்து அதில் உள்ள பழுதான
பாகங்களை நீ்க்கிவிட்டு சேதமாகாத
பாகங்களை உபயோகிக்கலாம்.முதலில்
நீங்கள் winrar மூலம் பைலை திறந்து
கொள்ளுங்கள் . அந்த பைலின் மேல்
கர்சர் வைத்து ரைட் கிளிக் செய்தால்
உங்களுக்கு இந்த மாதிரியான காலம்
ஒப்பன் ஆகும்.

அதில் உள்ள Extract the Specified Folder தேர்வு செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்டவாறு காலம் ஓப்பன் ஆகும்.

இதில் Keep Broken Files எதிரில் உள்ள ரேடியோ பட்டனை
தேர்வு செய்து நீங்கள் சேமிக்கும் இடத்தையும் தேர்வு
செய்து ஓகே கொடுத்தால் உங்களுடைய பைலானது
விரிக்கப்பட்ட நிலையில் அந்த போல்டரில் அமர்ந்து
விடும். அங்கு சிதைந்துபோய் நல்ல நிலையில் உள்ள
பைல்களை நாம் உபயோகித்துக்கொள்ளலாம்.
பழுதடைந்த பைல்களில் இருந்து தகவல்களை
மீட்டெடுக்க தற்காலிகமான வழியாக
இதை நான் பதிவிட்டுள்ளேன்.
மாற்றுவழியிருந்தால் கருத்துரையில் பதிவிடவும்
வாழ்க வளமுடன்,
வேலன்.
இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
USB போர்டில் நாம் பென்டிரைவ் முதல் கேபிள்வரை அனைத்தையும் அதில் இணைப்போம். ஆனால் அதில் உள்ள பின் இணைக்கும் சமயம் நமக்கு தடுமாறும். பின்னை திருப்பி திருப்பி இணைக்க முயல் வாம். இந்த குறை நீக்க சரியாக பின்னை இணைத்ததும் மேல்புறம் ஸ்டிக்கர்போட்டுஒட்டிவிட்டால் அடுத்த முறைபின் சொருகும் சமயம் பொட்டு மேல்புறம் வருமாறு வைத்து பின் சொருகினால் தடுமாறாமல் நாம் அதை பின்னுடன் இணைக்கலாம்.

