Showing posts with label புகைப்படம்.வேலன். இணையதளம்.velan.web.internet.photo.. Show all posts
Showing posts with label புகைப்படம்.வேலன். இணையதளம்.velan.web.internet.photo.. Show all posts

வேலன்:-புகைப்படங்களை இணையதளம் மூலம் பகிர்ந்துகொள்ள

நம்மிடம் உள்ள புகைப்படங்களை இணையம் மூலம் சுலபமாக பகிர்ந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 6 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்யவும்.

இந்த அப்ளிகேஷனை திறக்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில நியூ ஆல்பம் என்பதனை தேர்வு செய்யவும். உங்கள் ஆல்பத்திற்கான பெயரையும் ஆல்பத்திற்கான இதர குறிப்புகளையும் குறிப்பிடவும். 


 உங்களிடம் உள்ள புகைப்படங்களை தேர்வு செய்யவும்.
இதில் Album,Frame.Navigation என மூன்று டேப்புகள் கொடுத்துள்ளார்கள். இதில் ப்ரேம் அளவினையும் நிறத்தினையும் நாம் வேண்டிய அளவில் அமைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


இதில் விதவிதமான டேம்ளேட்டுகளையும் இணைத்துள்ளார்கள். தேவையானதை நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.
நாம் தேர்வு செய்து முடித்ததும் நம்மிடம் உள்ள பைல்லினை அவர்களுடைய இணையதளத்தில் லாகான் செய்து பதிவேற்றம் செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். இணைய பதிவேற்றம் வேண்டாம் என்றால் நமது ஹார்டிஸ்கிலேயே சேமித்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பர்ருங்கள்.
இறுதியாக ஓ.கே.கொடுத்ததும் உங்களுடைய புகைப்படங்கள் சேமிப்பதை காணலாம்.


இறுதியாக உங்களுக்கான புகைபடங்களை பார்வையிடலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


புகைப்படங்கள் ப்ரேம் அமைப்புடன் அழகுபடுத்தவும் மற்றவர்களுடன் சுலபமாக பகிர்ந்துகொள்ளவும் இந்த இணையதளம் பயன்படுகின்றது. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...