Showing posts with label புகைப்படம்.வேலன்.ரவுண்ட் கார்னர்.velan.photo.round corner.. Show all posts
Showing posts with label புகைப்படம்.வேலன்.ரவுண்ட் கார்னர்.velan.photo.round corner.. Show all posts

வேலன்:-ஆன்லைனில் புகைப்படங்களின் ஓரங்களை மடிக்க-Roundpic

நம்மிடம் உள்ள புகைப்படங்களின் ஓரங்களை நாம் ரவுண்ட்டாக மாற்ற போட்டோஷாப் பயன்படுத்துவோம். ஆனால் இந்த இணையதளம் நம்மிடம் உள்ள புகைப்படங்களை ஆன்லைனில் வேண்டிய அளவிற்கு ரவுண்டாக மாற்றிகொடுக்கின்றது.இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இந்த தளம் சென்றதும் உங்களுக்கான புகைப்படத்தினை கணிணியில் இருநது தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள ரவுண்ட் இட் பட்டனை கிளிக் செய்யவும்.அதில் உங்களுக்கான புகைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கும்..

 கீழ்கண்ட விண்டோ வரும் அதில் புகைப்படத்தில் உள்ள நான்கு மூலைகளில் எந்த இடத்தில் புகைப்படத்தினை மடிக்க வேண்டுமோ அந்த இடத்தினை தேர்வு செய்யவும். நான்கு புறமும் வேண்டும் என்றால் அனைத்து மூலைகளையும் தேர்வு செய்திடவும்.மூலை எந்த அளவிற்கு வளைவு வேண்டுமோ அதற்கான ஸ்லைடரை நகர்த்துவது மூலம் படத்தின் அளவினை நாம் தேர்வு செய்திடலாம்.அனைத்து பணிகளும் முடிந்ததும் இதில் உள்ள ரவுண்ட் ஐகானினை கிளிக் பண்ண சில நொடிகளில் உங்களுக்கான புகைபடம் ரவுண்ட் ஷெப்பில் வந்துவிடும். ரவுண்ட் அதிகமாகவும் புகைப்படங்களின் அளவுகளில் மாற்றங்கள் தேவையேன்றாலும் நாம் இதில் உள்ள  ஸ்லைட் பாரினை நகர்த்துவது மூலம் சரிசெய்துகொள்ளலாம்

மடிக்கப்பட்ட ஓரங்களில் பின்புறத்திற்கு எந்த நிறம் நமக்கு பிடித்துள்ளதோ அந்த நிறத்தினை   தேர்வு  செய்யலாம்.
சில மாதிரி புகைப்படங்கள் கீழ் உள்ளது:-

. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...