Showing posts with label பைல்.வேலன்.தேடல்.velan.file.search.. Show all posts
Showing posts with label பைல்.வேலன்.தேடல்.velan.file.search.. Show all posts

வேலன்:-பைல்களை வித்தியாசமான வழிகளில் தேட

கணிணி வந்த சமயம் 40 ஜி.பி.கொள்ளளவு என்பது பெரிய விஷயம். இப்போது 1000 ஜி.பி.கொள்ளளவு கொண்ட  ஹார்ட்டிஸ்கினை சர்வ சாதாரணமாக பயன்படுத்துகின்றார்கள். இதில் சிரமம் என்ன வென்றால் ஏதாவது ஒரு பைலினை எங்காவது வைத்துவிட்டு அதனை தேடுவதென்றால் எவ்வளவு சிரமம் பாருங்கள். கணிணிலேயே சர்ச் கொடுத்துஇருந்தாலும் இந்த சின்ன சாப்டவேர் நமக்கு வகைவகையான பிரித்து தேடுதலை நமக்கு சுலபமாக மாற்றுகின்றது. 8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
 இதில் சர்ச் பாக்ஸில் நமது பைலின் பெயரை தட்டச்சு செய்யவும்.நீங்கள் டைரக்டரியில் இருந்து தேட விரும்பினால் டைரக்டரியின் பெயரை தேர்வு செய்யவும். அதுபோலContents மூலம் தேர்வு செய்யவிரும்பினாலும் அதனை தேர்வு செய்யலாம்.நீங்கள் பைலினை மாற்றம் செய்த தேதி தெரிந்தாலும் தோராயமாக தேட செய்யலாம்.பைல் சைஸ் தெரிந்தாலும் நீங்கள் அதற்கான ரேடியோபட்டனை கிளிக்செய்து தேட செய்யலாம்.
 தேடவிரும்பும் பைல்களை இவர்கள் வகைவகையான பிரித்து விடுவதால் நாம் தேடுதல் சுலபமாகின்றது.இறுதியாக இதில் உள்ள சர்ச் கிளிக் செய்திட உங்களுக்கு சில நொடிகளில் ரிசல்ட் கிடைக்கும். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.

பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...