போட்டோஷாப் இன்றைய பதிவில் மூவ் டூலின் மற்றும் ஒருஉபயோகம் பற்றி பார்க்கலாம்.போட்டோஷாப்பில் மூவ்
டூலானது ஒவ்வொரு இடத்திலும்ஒவ்வொரு விதமாக
உபயோகிக்கலாம்.முந்தைய மூவ்டூலில
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
படத்தை ஒரு இடத்திலிருந்து மற்றும்ஒரு இடத்திற்கு
நகர்த்துவது பற்றி பார்த்தோம்.முந்தைய பாடம் பார்க்க
விரும்புபவர்கள் இங்குகிளிக் செய்யவும்.அதேபோல் லேயரில்
மூவ் டூல் உபயோகிப்பதை லேயர்பாடம் நடத்தும் சமயம்
விளக்குகின்றேன்.இன்றையபாடத்தில் மூவ் டூல் மூலம்
புகைப்படங்களை அதிகமாக்குவதுபற்றி பார்க்கலாம்.
முதலில் இந்த புகைப்படத்தை தேர்வுசெய்துள்ளேன்.

இப்போது குழந்தையின் முகம் மட்டும் தேர்வாகியுள்ளது.



பதிவிறக்கம் செய்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்:-

இதில் உள்ள குழந்தையின் முகம் மட்டும் கிராப்டூல் கொண்டு தேர்வு
செய்துள்ளேன்.
இப்போது குழந்தையின் முகம் மட்டும் தேர்வாகியுள்ளது.இப்போது புதிய பைல் ஒன்றினை திறந்து கீழ்கண்ட அளவினை
கொடுத்துள்ளேன்.

புதிய விண்டோ ஓப்பன் செய்து மூவ் டூல் மூலம் புகைப்படத்தை
இதில் இடம் பெயர்ச்சி செய்துள்ளேன்.
கீ-போர்ட்டில் உள்ள Alt Key அழுத்திக்கொண்டு கர்சர் மூலம்
புகைப்படத்தை வேண்டிய இடத்தில் நகர்த்திவைத்து கிளிக் செய்யுங்கள்.
பழைய புகைப்படத்தின் அருகிலேயே புதிய புகைப்படம் வருவதை
காணலாம்.இதேப்போல் புகைப்படத்தினை புதிய விண்டோமுழுவதும்
நகர்த்தி புகைப்படத்தை பதியலாம்.

இதே வசதியை முன்பு Pattern மூலம் செய்வதை பார்த்தோம்.
ஒரே செயலை போட்டோஷாப்பின் வெவ்வேறு டூல் மூலமும்
செய்ய முடியும் எனஇதன் மூலம் உணரலாம். பதிவின் நீளம் கருதி
இத்துடன்முடிக்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
இன்றைய PSD பைலுக்கான புகைப்பட டிசைன்:-

டிசைன் செய்தபின் வரும் படம் கீழே:-
பதிவிறக்கம் செய்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்:-போட்டோஷாப் பாடம் 26 ஐ இதுவரை கற்றவர்கள்:-


