ஒரே ஒரு சாப்ட்வேர்..கம்யூட்டரில் உள்ள அனைத்து வேலைகளையும் இதன் மூலம் செய்ய முடியும். ஒன்று அல்ல இரண்டல்ல சுமார் 270 வேலைகளை இந்த சாப்ட்வேர் நமக்காக செய்து முடிக்கின்றது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
முக்கியமான 17 பணிகளின் வகைப்படுத்தி கொடுத்துள்ளார்கள். நமக்கு தேவையானதை கிளிக் செய்ய அதன் விண்டோவில் உள்ள அப்ளிகேஷன்கள் நமக்கு தெரியவரும் உதாரணமாக நான் கன்ட்ரோல் பேனல் கிளிக் செய்திட வரும் பாப்அப்மெனுவில் கன்ட்ரோல் பேனலில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் நமக்கு திறக்கும் தேவையானதை தேர்வு செய்து கிளிக் செய்தால் போதுமானது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.விண்டோஸ் போல்டரை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகியது. அதில் உள்ள முக்கியமான அப்ளிகேஷன்கள் ்திறந்துபயன்படுததலாம்.
விண்டோஸ் சிஸ்டம் கிளிக் செய்ய அதில் உள்ள பாப்அப் மெனுக்களின் விவரம் தெரியவரும்.ரீ ஸ்டாட் முதற்கொண்டு இமெயில் அனுப்புவதுவரை நாம் பணிகளை மேற்கொள்ளலாம்.
விண்டோஸ் மேனேஜ்மெண்ட் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
எந்த ஒரு வேலையையும் நாம் இந்த ஒரே ஓரு சாப்ட்வேர் மூலம் சுலபமாக முடித்துக்கொள்ளலாம்.ஒவ்வொன்றுக்கும் தனிதனியே சென்று பணி முடிப்பதை விட ஒரே இடத்தில் இருந்து அனைத்து பணிகளையும் முடி்ப்பது சுலபமில்லையா..!பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.






