இருமனம் இணைவது திருமணம். அந்த திருமணத்தின் பசுமை நினைவுகளை மீண்டும்கொண்டுவருவது புகைப்படங்கள். அந்த புகைப்படங்களின் அழகை மேலும் அழகாக்குவது டிசைன்கள். இன்று அந்த திருமண டிசைன்களின் தொகுப்பை காணலாம்.10 வகை டிசைன்கள் 9 எம்.பி. கொள்ளளவில் உள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்..படங்களை பதிவேற்ற வசதியாகவும். நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வசதிக்காகவும் படங்களின் ரெசுலேஷனை 200 லிருந்து 50 ஆக குறைத்துள்ளேன். நீங்கள் படங்களை பதிவிறக்கம் செய்து மீண்டும் அதை போட்டோஷாப்பினில் திறந்து அதன் ரெசுலேஷனை மீண்டும் 200 ஆக மாற்றிக்கொள்ளுங்கள்.டிசைன்களின தொகுப்பு கீழே-
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பின்குறிப்பு- நாம் பதிவுகள் போடுகின்றோம். அதனால் மற்றவர்கள் பலனடைகின்றார்களா? என்கின்ற சந்தேகம் எனக்கு உண்டு.நண்பர் புலிக்குட்டியின் பதிவினை பார்த்தவுடன் மற்றவர்களுக்கு நாமும் பயன்படுகின்றோம் என சந்தோஷம் கிடைக்கின்றது. அவரின் பதிவிலிருந்து சில பகுதிகள் கீழே-
திரு.வேலன் அவர்கள் கணிணி ஒன்றை வாங்க வேண்டும் என்கின்ற ஆவலை எனக்கு தூண்டியவர்.வேலன் அவர்களால் தான் கணிணியை எப்படி உபயோகப்படுத்தலாம் என்று அறிந்துக்கொண்டேன்.புதிது புதிதாய் மென் பொருள்களை அனைவரும் எளிதாய் புரிந்திக்கொள்ளும் படி எழுதுவது இவரது சிறப்பு.இவரது பதிவுகளால் பலர் பயன் பெற்று இருப்பார்கள்.ஆனால் யாராவது லாபம் சம்பாரித்து இருப்பார்களா என்று எனக்கு தெரியாது.நான் இவரால் இருபத்து ஐந்தாயிரம் ரூபாய்(25,000) ஒரு வாரத்தில் சம்பாதித்தேன்.(அது autocadல் செய்ய வேண்டிய plan வேலை நான் போடோ ஷாப்பில் செய்தேன்)இன்றும் பல வேலைகளுக்கு அவரது வலை தளத்தை தான் பார்க்கிறேன்.(பங்கு கேட்ப்பாரோ?)அவரது எழுத்தில் அவரது அன்பு தெரிகிறது.அவரது வாழ்க வளமுடன் எனும் வார்த்தை வெறும் வார்த்தையாக இல்லாமல் அதை ஆசீர்வாதமாகவே எழுதுகிறார் என நான் நினைக்கிறேன்.இவர் தமிழ் வலை உலகத்திற்க்கு கிடைத்த மிகச்சிறந்த ஒரு பதிவாளர்.இது வரை செய்தவற்றுக்கும் இனிமேல் செய்ய போவதற்க்கும் என்றும் நன்றி உடையவனாய் இருப்பேன்.நன்றி
அவரின் முழுமையான தனம் காண இங்கு கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி புலிக்குட்டி.