புகைப்படங்களில் ஏற்பட்ட பழுதுகளை சரிசெய்யவும்.புகைப்படங்களில் வேண்டிய நிறங்களை கூட்டவும்.குறைக்கவும்.வெளிச்சத்தினை கூட்டவும்.குறைக்கவும்.வேண்டிய மாற்றங்களை செய்யவும.புகைப்படத்தினை சரியான அளவிற்கு கொண்டுவரவும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.20 எம்.பி .கொளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.
இதில் கீழ்புறம் உங்களுக்கு 7 விதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள்.
வேண்டிய நிறங்களை படங்களில் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
படங்களை வேண்டிய அளவிற்கு திருப்பவும் இதில் வழிவகை செய்துகொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்
புகைப்படத்தினை வேண்டிய அளவிற்கு வெட்டி எடுத்து தேவையான பகுதியை வைத்துக்கொள்ளவும் இதில் வசதியை கொடுத்துள்ளார்கள். கீழெ உள்ள விண்டோவில் பாருங்கள்.
நீங்கள் செய்திடும் மாற்றங்கள் அனைத்தும் பக்கத்தில் உள்ள விண்டோவில் உடனடியாக நாம் பிரிவியூ பார்க்கலாம். எனவே ப்ரிவியூ பார்த்து மாற்றங்கள் தேவையா வேண்டாமா என்பதனை முடிவு செய்துகொள்ளலாம். இறுதியாக இதனை வேண்டிய டிரைவில் சேவ் செய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.