Showing posts with label வேலன்.சாப்ட்வேர்கள்.5 in 1.velan.christmas.software.. Show all posts
Showing posts with label வேலன்.சாப்ட்வேர்கள்.5 in 1.velan.christmas.software.. Show all posts

வேலன்:- ஐந்து கிருஸ்துமஸ் சாப்ட்வேர் பணிகள் ஒரே சாப்ட்வேரில்.

இந்துக்களுக்கு எப்படி தீபாவளி பண்டிகையோ அதுபோல் கிருஸ்துவர்களுக்கு  கிருஸ்மஸ் பண்டிகை விஷேஷம். கிருஸ்மஸ்க்கு எவ்வளவு நாள் இன்னும் உள்ளது என்று நாட்களை எண்ணிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் குறையை நிறைவேற்ற இந்த சின்ன சாப்ட்வேர் உதவுகின்றது. 4 எம்.பி கொள்ளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரில் 5 விதமான சாப்ட்வேர்கள் உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்..இனி அதில ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

கிருஸ்மஸ் மரம்:- 
இந்த சாப்ட்வேரினை இன்ஸ்'டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.இதில் 20 விதமான கிருஸ்மஸ்மரங்கள் உள்ளது. 




 இதில் உள்ள மரத்தில் கர்சர்வைத்து ரைட் கிளிக் செய்ய உங்களுக்கு தோன்றும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான ஐகானை வைத்துக்கொள்ளலாம். மேலும் நீங்கள் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறையோ அரைமணிநேரத்திற்கு ஓரு முறையோ அலாரம் அடிப்பதுபோல் செட் செய்துகொள்ளலாம். பாண்ட் அளவுகளை மாற்றிக்கொள்ளலாம்.
---------------------------------------------------------------------------------------------------------விஸ்டா கிளாக்:-
நேரத்தினை நாம் விதவிதமான கடிகாரம் மூலம் அறிந்துகொள்ளலாம்.உலக நேரத்தினை நாம் செட் செய்துகொள்ளலாம்.மேலும் இதில Clock.Coutdown,Uptime.StopWatch.மற்றும் Timer இதில் செட் செய்யலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.


------------------------------------------------------------------------------------------------------------
SANTA COUNTDOWN:-
கிருஸ்'மஸ் என்றாலே கிருஸ்மஸ்தாதா தான நினைவுக்கு வருவார். கிருஸ்மஸ் தாதா விதவிதமான உடைகளிலும் அவரின் தொப்பியிலும் என 20 க்கும் மேற்பட்ட பொருட்களில் நாம் கடிகாரத்தினை செட்செய்துகொள்ளலாம். இதிலும் அரை மணிநேரத்திற்கு ஒரு முறையும் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறையும் அலாரம் அடிக்கும் வசதி உள்ளது.குழுந்தைகளுக்கு கொடுத்தால் மகிழ்ச்சியுடன் விளையாடுவார்கள்.




 -----------------------------------------------------------------------------------------------------------
SNOW GLOBE COUNTDOWN:-
விதவிதமான கண்ணாடி குடுவைக்குள் விதவிதமான கிருஸ்மஸ் மரக்களை வைத்து கவுண்டவுன் டைம் வைத்துள்ளார்கள்.இதிலும் 9 விதமான கிருஸ்மஸ் சம்பந்தமான பொருட்களை வைத்துள்ளார்கள்.

 ------------------------------------------------------------------------------------------------------------
ZONE CLOCK:-

ஒரே விதமான கடிகாரம் வைத்துள்ளார்கள்.எங்கு வேண்டுமோ அங்கு நகர்த்தி வைத்துக்கொள்ளலாம். கீழே உள்ள விண்:டோவில் பாருங்கள்




இந்த அனைத்துவிதமான 5 IN 1 சாப்ட்வேர்கள் பற்றி அறிந்:து:கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.
அனைத்தையும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...